STORYMIRROR

Saravanan P

Abstract Drama Inspirational

4  

Saravanan P

Abstract Drama Inspirational

கனவு காணுங்கள்

கனவு காணுங்கள்

1 min
219

அருள் தனது ஒன்பதாம் வகுப்பு படிப்பை முடித்து பத்தாம் வகுப்பு சென்று ஏப்ரல் மாதம் வகுப்புகளில் படித்து வந்தான்.

வருட விடுமுறை சிறிது நாட்களில் வரவுள்ள நிலையில் அவன் தன் தந்தையிடம் கிரிக்கெட் பேட் கேட்டு இருந்தான்.

அருள் தன் லேப்டாப்பில் படித்து கொண்டிருக்கும்போது வரும் அருளின் தந்தை உணவு பொட்டலம் கொண்டு வந்திருந்தார்.

அருள் பேட் எங்கே என கேட்கும் போது அவன் தந்தை பிறகு வாங்கி வருவதாக கூற அருள் உணவு பொட்டலத்தை தள்ளி வைத்து விட்டு செல்ல கோபம் அடைந்த அருளின் தந்தை அவனை போட்டு அடித்து விடுகிறார்.

அருள் தூங்க செல்கிறான்.

அவனது தாயும் தந்தையும் தூங்கி விட்டான் என்று நினைத்து பேசிய வார்த்தைகள் அவனை குத்தியது.


"உமா,நீயே சொல்லு நம்ம சக்திக்கு மீறி தானே படிக்க வைக்கிறோம்,எப்படி அடுத்து பீஸ் கட்ட போறோம்னு நம்ம மனசு அடிச்சிக்குது.

எனக்கு அவன அடிக்கனும்னு ஆசை இல்லை,பேட் வாங்க தான் போனேன்,நான் எடுத்துட்டு போன காச விட விலை ஜாஸ்தி,சரி வெறுங்கையோட போன ஏமாந்திரும்னு சாப்பாடு வாங்கிட்டு வந்தேன்."

அருள் கண்கள் கலங்கின,அவன் மனமும் தான்.

அவன் தந்தை பேட்டை அவன் கையில் தரும்போது மன்னிப்பு கேட்டான்.

அவன் தந்தை அவன் முதுகில் தட்டி கொடுத்து விட்டு சென்றார்.

அருள் அதன் பிறகு படிப்பில் முழு மனதுடன் செயல்பட்டான்,தனக்கு விளையாட்டு போட்டிகளில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தினான்.

8 வருடங்கள் கழித்து,

அருள் ஒரு ஐடி கம்பேனியில் நல்ல வேலையில் இருந்தான்.

அவன் தன்னுடைய டீமின் லீடராக செயல்பட்டு வந்தான்.

அவன் தாய்,தந்தையை அடுத்த நாள் நடைபெறவிருந்த ஆபிஸ் விருது விழாவிற்கு அழைத்து வந்தான்.

சிறந்த எம்பிளாயீ விருதை அருள் வாங்கும் போது அவன் தாய் தந்தை மனம் மகிழ உற்சாகமாக கை தட்டினர்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract