கனவில் வந்த குரங்கு
கனவில் வந்த குரங்கு


இந்த மகாபலி சிற்பங்கள் நம்மளை மாதிரியே இருக்குப்பா!
போடா! அந்த யானை பாரு! இமயமலையிலிருந்து நீர்யானையைக் கூட்டிட்டு இந்த சிற்பங்களை காண்பிச்சிட்டிருக்கு! என்ன நடக்குமோ!
ஊரெல்லாம் தண்ணீர் இல்லைடா! நமக்கு யார் தண்ணீர் தரப்போறா!
வா! எங்காவது குளம் தெரிகிறதா எனப் பார்ப்போம்!
குரங்குகள் நீருக்காக அல்லாடியபடி கலங்கல் தண்ணீரை தெளிவாக்கி குடித்தபடி இருந்தன. இந்த அம்மான் பச்சரிசியையும்,மாதுளை மரத்தையும் வளர்த்தால் தண்ணீர் நல்லாயிருக்கும்ல!
வாடி! வாடி! நாட்டுக்கட்டை! மர வீட்டுல விளக்கு ஏத்தற நேரம் ஆயிடுச்சு!
ஆமணக்கு செடி அக்காகிட்ட கேட்டு எண்ணெய் வாங்கிக்கோ! வேப்பெண்ணெய்சித்தியிடம் எண்ணெய் வாங்கி வச்சிக்கோ! வாழை சித்தப்பாவிடம் நார் கேட்டு வாங்கி வச்சுக்கோ! தேவைப்பட்டால் துணியிலயும்,பஞ
்சு,தாமரை நூல் எடுத்துக்கோ!
சாமியைக் கும்பிட்டு தினமும் விளக்கேற்று! சரியா! பேசிட்டே வந்ததுல திண்டிவனம் மர வீடு வந்துடுச்சு!ஹையா! இன்னைக்கு மாம்பழம் பழுத்து கீழே கிடக்கு! தண்ணீர் ஊற்றுகிற அக்கா எனக்கு ஒரு பக்கெட் தண்ணீர் வச்சிருக்காடி என்றபடி குரங்கு குதியாட்டம் போட்டது.
எந்திரிங்க! மணி ஏழாகுது! ஆபிசு லீவு விட்டாலும் விட்டானுங்க! டெய்லி கனவு காண்றதே வேலையாய் போய்டுச்சு! போய் ரேஷன்ல பொருள் தருவான்...வாங்கிட்டு வாங்க..மறக்காமல் முகமூடி போட்டுட்டு போங்க..வாசலில் போய்ட்டு வந்தபின் கை கழுவ கொதித்து இறக்கிய வேப்பிலை தண்ணீர்,படிகாரம் கலந்த சானிடைசர் தண்ணீரில் கழுவிட்டு உள்ளே வாங்க! என சொல்லிய மனைவி கமலியை கனவில் வந்த குரங்கு கதையை யோசித்தபடியே படுக்கையைச் சுற்றி மாடியில் வெயிலில் காயப்போட்டார் சிவநேசன்.