KANNAN NATRAJAN

Abstract Drama Inspirational

5.0  

KANNAN NATRAJAN

Abstract Drama Inspirational

கேழ்வரகு

கேழ்வரகு

2 mins
150


ஆத்தா! சிங்கப்பூரிலிருந்து செட்டியார் வீட்டு பில்டிங்கிற்கு யாரோ குடி வந்திருக்காங்கபோலத் தெரியுது! என்றாள் கௌசல்யா.

கழுத்துல ஒத்தை சங்கிலிதான் தெரியுது!

அது செட்டியார் இல்லை.நாயக்கர் வீட்டு ஆளுங்கதான். தொழிலுக்காகப் போயிருந்தாங்க! திரும்ப இடத்தைப் பார்த்து சரி பண்றதுக்காக வந்திருக்காங்க. இடத்தைச் சுத்தம் பண்ண வந்தமாதிரி தெரியுது…….. என்றாள் சட்டை போடாத பாட்டி.

 தம்பி! கடையில் போய் கூல்டிரிங்ஸ் வாங்கிவா..ஒரே தாகமா இருக்கு..குடிச்சுட்டு களை எடுக்கவும்,சவுக்கு நடவு செய்யவும் போகணும்…..

ஏன் கேழ்வரகு எடுக்கப் போனியே! வீட்டிலே அவ்ளோ கொடுத்தாங்களே…திருகல்ல போட்டு திரிச்சு எடுக்கறது மாவாக்கி வைத்தால் எல்லாத்துக்கும் ஆகும்ல……….. இருக்கற இடம்தான் சொர்க்கம்..புரிஞ்சுக்கோ…….இடையில் புருஷன் வழிமறித்தான்.

போய்யா.. வேலையைப் பார்த்துட்டு என புருஷனை உதாசீனம் செய்தபடி செருப்புக்காலுடன் கிழிந்து நைந்துபோன சில்க் புடவையுடன் உள்பாவாடை கிழிசலுடன் அடகு வைத்திருந்த கம்மலை நினைத்தபடி நாயக்கர் வீட்டுப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தாள்.

மொபைல்மணி அடிக்கவே யக்கா! இன்னைக்கு சவுக்கு நடவு செய்ய வேற ஊர் ஆளு போட்டாச்சாம்,வேலை இல்லைன்னு சொல்லிட்டாங்க…..

என்ன செய்வது என நினைத்தபடி கழுத்தில் இருந்த மஞ்சள்கயிறை இழுத்துவிட்டபடி நாயக்கர் வீட்டுக் கதவைத் தட்ட ஆரம்பித்தாள்.

உள்ளிருந்து நைட்டி அணிந்திருந்த பெண் கதவைத் திறந்தாள்.

உள்ளே எதுனாச்சும் வேலை இருக்காம்மா என்றாள்.

என்னங்க! கழனி ஆளுங்க வேலை இருக்கான்னு கேட்டு வந்திருக்காங்க பாருங்க என்றபடி கண்ணாடி தம்ளரில் புருஷன் தினமும் குடிக்கும் கேழ்வரகுக்கூழை அந்தப் பெண்மணி குடிப்பதைப் பார்த்தபடி இருந்தாள் கௌசல்யா. சே! இந்தக்கூழை நாம் கேவலமாக நினைத்தோமே! இவர்கள் என்னடாவென்றால் கண்ணாடி தம்ளரில் ஊற்றி பக்கத்தில் முடக்கற்றான்,கற்றாழை என வைத்திருக்கிறார்களே! வீட்டைச் சுற்றிலும் சிவப்பு செம்பருத்தி இருக்கு…என யோசித்தவாறே இருந்தாள்.

நைட்டிபெண்மணி கணவன் வந்தவுடன் நீங்க இங்கே வாங்க! என கௌசல்யாவைத் தோட்டத்திற்குப் பக்கத்தில் அழைத்துச் சென்றான்.

கௌசல்யாவிற்கு முன்னர் பார்த்த வீடா இப்படி இருக்கிறது என அதிசயித்தாள். வீட்டைச் சுற்றிலும் பாத்தி பாத்தியாக கீழாநெல்லி,கற்றாழை, தூதுவளை, செம்பருத்தி என நிறைந்திருந்தன. நடுவில்

அழகாக சங்குப்பூக்கள் நிறைந்திருப்பதையும் பார்த்தாள். ஓரமாக வெங்காயம் விளைந்து அம்பாரமாய் குவிந்திருப்பதைப் பார்த்தாள்.

ஏம்மா! ஊரெல்லாம் உங்களுக்கு தண்ணீர் கஷ்டம் இருக்கு உங்களுக்கு இல்லையா! என்றாள்.

அம்மா! எங்க கிணறுக்கு சுற்றி குழி வெட்ட மரம் நட்டு வைத்திருக்கிறோம். அதனால் தண்ணீர் வற்றாது.

களையெல்லாம் எடுத்துவிடுங்கள். இந்தாங்க கூழ் குடிங்க! என நைட்டி பெண் கொணர்ந்து கொடுத்தாள்.

இங்கே டீ அதெல்லாம் கிடையாதாம்மா! காலையில் கூல்டிரிங்க்ஸ் எல்லாம் குடிப்பதாக விளம்பரத்துல எல்லாம் காட்டுறாங்களே!

ஓ! அதைப் பார்த்து நீங்க கேட்கறீங்களா! அதென்ன! பெயர் சொல்லாமல் இந்த ஊரில் சாதிபெயர்வீடு எனச் சொல்கிறீர்கள்.. இங்கே ஒரு தெருவில் இருக்கிறவங்க தெருவுக்குள் நாங்க போகவே மாட்டோம். அவங்களை எங்க சாமி கும்புடற கோவில்ல உள்ளே சேர்த்துக்க மாட்டோம்.

அப்ப சிங்கப்பூர்,அமெரிக்கா இங்கெல்லாம் சென்றால் எந்த சாதி வீடு என்று எப்படி சொல்வீர்கள்?

அங்கே எல்லாம் யார் போறாங்க?

ஏன்?உங்க வீட்டுக்காரனைக் கூப்பிட்டுபோ!

அது எங்கே உங்கவீட்டுல ஏதோ வேலை செய்யுது…..கொடுக்கறீங்க..இப்பதானே நான் இங்கே வர்றேன்.

நைட்டி பெண்மணி ஏங்க இந்த கௌசல்யாவிற்கு அவங்க புருஷன் அவார்ட் வாங்கியதே தெரியாது போலிருக்குது….

என்னம்மா சொல்றீங்க?..

உன் புருஷனுக்கு சிங்கப்பூரிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் அவார்டும், தங்கப்பதக்கமும் தராங்க…

எதுக்கும்மா?..

நல்ல மூலிகைப் பயிரை விளைவிச்சு தந்ததுக்காக……

அவங்களோட அவங்க மனைவியும் போகலாமாம். அங்கேயும் போய் இந்த சாதிவீடுன்னு பேசாம இருந்தால் சரிதான்..என்றார் நைட்டி பெண்மணியின் கணவன்.

இந்த கேழ்வரகு கூழ்தான் உண்மையான ஊட்டச்சத்து. நாங்க இதைத்தேடி இங்கே வந்தா நீங்க என்னடாவென்றால் கிணறு,ஏரி, எல்லாத்துலயும் பிளாஸ்டிக் விழுந்ததைக்கூட எடுக்காமல் அப்படியே மண்ணைப்போட்டு மூடி மினரல் வாட்டர்கேன் வாங்கி குடிச்சுட்டு இருக்கீங்க…!….

மதிய சாப்பாட்டுக்கு அங்கேயே விளைந்த இஞ்சிஊறுகாய்,வாழைத்தண்டு பொரியலுடன் தந்த சாதம் தேவாமிர்தமாக தொண்டைக்குழியில் இதமாய் இறங்க வாழ்க்கையின் பொருளை உணர்ந்த கௌசல்யா கணவன் சொன்னபொருளின் அர்த்தத்தை அப்போதுதான் உணர ஆரம்பித்தாள்.

 


 


Rate this content
Log in

Similar tamil story from Abstract