காட்டுல ஒரு ஆபிஸ்
காட்டுல ஒரு ஆபிஸ்


காதில் என்ன புதுசா!
கேட்ட மயிலை முயல் அண்ணாந்து பார்த்தது.
இதை மயில்மாணிக்கத் தொங்கட்டான்னு சொல்வாங்க!
செடியோட ஸ்டட் பச்சைக்கு இந்த பிங்க்கலர் ரொம்ப எடுப்பா இருக்கு!
ஆமா! தங்கத்துல செஞ்சா போடமுடியலைன்னு இந்தமாதிரி போட்டுட்டு போக வேண்டி இருக்கு… தூக்கிட்டு போயிடறாங்க…..
இப்பல்லாம் காட்டுல ஆபிஸ் வந்ததில் இருந்து சிங்க ஆபிசர் ரொம்ப ஸ்டிரிக்ட்…. நீட்டா டிரஸ் பண்ணியிருக்கணும். அதே சமயத்துல ஆடம்பரமாகவும் இருக்கக்கூடாதுன்னு சொல்லி இருக்கார். இரண்டு நாள் உடம்பு முடியலைன்னு குளிக்காமல் முகத்தை மட்டும் கழுவிட்டு ஆபி்ஸ் போய்ட்டேன். முகத்தை வைத்தே கண்டுபிடிச்சுட்டான். அப்புறம் இனிமேல் இந்தமாதிரி வரமாட்டேன். நீட்டா வருவேன்னு மன்னிப்புக்கடிதம் வாங்கிட்டுத்தான் வேலை செய்யுற இடத்திலேயே அனுமதிச்சான்.
உன் வேலை அந்தமாதிரி.
பெண்ணுன்னா என்ன ஷோகேஸ் பொம்மையா!
செய்யுற வேலையை வச்சுத்தான் தரம் பிரிக்கணுமே தவிர உடை,அலங்காரத்தைப் பொறுத்து அல்ல..
அது நீ சொல்ற கம்பெனிக்குப் பொருந்தாது.
பத்து வெளிநாடு காட்டிலேயிருந்து ஆப்ரிக்க யானை,ஸ்பெயின் வெள்ளைப் புலி இவையெல்லாம் இங்கே என்ன கிடைக்கும்னு கஸ்டமர்ஸ் வர்ற இடத்துல அசிங்கமா போக முடியுமா!
அதுக்காக பெண் என்ன பாலியல் பொருளா!
லிப்ஸ்டிக்போட்டு வழிய வழிய பேசணும்னு!
மனித இனங்களில் மட்டுமல்ல முயல்….விலங்குகளிலும் அப்படித்தான். பெண் என்றால் அழகுப் பொருள்தான்.
என்னைக்குத்தான் மாறுமோ!
அப்ப பேசாமல் உனது வசிப்பிடத்திலேயே போய் கேரட் தேடித் தின்று படுத்துக்க வேண்டியதுதானே!
நான் ராணி சிங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதப்போகிறேன்.
எந்த காலத்துல இருக்கே!
ராஜா கல்யாணம் ஆன அனை்னைக்கே குடும்ப பிரச்னையில ராணியை ஓரங்கட்டிட்டு வாழ்ந்துட்டு வர்றாரு. அவருக்கு காட்டு மக்கள்தான் குடும்பத்தினர்…..தெரியுதா?
அப்ப ராஜாவுக்கே கடிதம் எழுதுறேன்.
எழுது!…..ஆனால் நோ ரிப்ளைதான்… என மயில் அழகாக தோகை விரித்து ஆடத் தொடங்கியது.