இரும்பும் தங்கமாகும்
இரும்பும் தங்கமாகும்


காலேஜில் சும்மா உட்கார்ந்து எழுந்து போக வந்தீங்களா?
கோபமாகப் பேசிய பேராசிரியர் கமலா மௌனமாக இருப்பதைப் பார்த்தவுடன்
காலேஜ் முடிந்தவுடன் என்னை வந்து பார் என்றபடி சைலண்டாக நகர்ந்தார்.
உன்னால் மட்டும் தமிழில் அதிகமா மார்க் எப்படி வாங்கமுடிகிறது என கமலா வெண்ணிலாவைக் கேட்டாள்.
அடிப்படை இலக்கணம் சரியாகப் படித்திருக்கணும். இப்ப கவிதைகள்,ஒருவரி அற்புதங்கள்னு கேட்டா யோசிக்க வேண்டுமே
பள்ளிக்கு நான் சரியாகப் போனாலும் அங்கே டீச்சர் கிடையாது. வேற பாடம் எடுக்கிறவங்கதான் தமிழ சேர்த்து எடுப்பாங்க! நாங்களாம் பழைய வினாத்தாள் படித்து பாசாகி வந்தோம். அதுல இருக்கிற பாடம் எல்லாம் கத்துக்கணும்னு ஆசையாதான் இருந்துச்சு..டீச்சரே இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு பாசானோம்.
நீ அரசு பள்ளியா?
இல்லை..தனியார் பள்ளிதான்……இங்கவீட்டுக்கு பக்கத்துல இருக்குன்னு எங்க அம்மா அனுப்பினாங்க..இங்க ஒருவரிகவிதை எழுதுன்னா எப்படி?!
தமிழே வேண்டாம்னு பார்க்கிறேன் வெண்ணிலா………..
நம்ம மேடம் நல்லா சொல்லித் தருவாங்க..நீ பயப்படாதே!
கைதட்டல் ஓசை காதைப் பிளக்க கமலா பரிசு வாங்க மேடை ஏறினாள்.
மைக்கைப் பிடித்து தமிழே வேண்டாம்னு இருந்த என்னை இந்த மேடையில் இத்தனை பரிசுகளை வாங்க வைத்த தமிழ் பேராசிரியர் அவர்களுக்கு எனது நன்றி என நாதழுதழுக்க ஒரு ஆசிரியர் நினைத்தால் இரும்பும் தங்கமாகும் என்பதற்கு நான்தான் உதாரணம் எனக்கூற கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது.