Raja SaRa

Drama Tragedy Classics

4.5  

Raja SaRa

Drama Tragedy Classics

இருகோடுகள்

இருகோடுகள்

2 mins
334


                                         கடந்த அத்தயாயத்தின் ஒரு பார்வை

                                         குழந்தை அழுவதை நிறுத்தமுடியாது சித்தன் ஓடுகின்றான்.மருத்துவமனையில் லாவண்யாவின் நலனை பற்றி மருத்துவரிடம் விசாரிக்கின்றான் ராஜா.காவலர் நடந்ததை ராஜாவிடம் விசாரிக்கின்றார்.தான் குடித்து வந்ததால் ஏற்பட்ட விபரீதத்தை கூறுகின்றான் ராஜா.               

                                                        அத்தயாயம்-3


          குழந்தை அழும் சத்தம் கேட்டதால் தூங்கி கொண்டிருந்தவள் கண்ணைதிறந்தாள் தேவி.தேவி பெயருக்கேற்ப உள்ளத்தால் பட்டத்து ராணி ஆனால் போதிய வருமானமின்றி உணவும் உறைவிடமும் இல்லாது சாலையில் வாழும் குடும்பங்களில் இவள் குடும்பமும் ஒன்று.கரம்பிடித்த கணவனை இழந்த துர்பாக்கியசாலி எனப்போற்றப்படும் லட்சுமியானவள்.கொரோனாவின் நோய்த்தொற்றுகளை தடுக்க அரசு கொடுத்த சமுகநலகூடத்தில் தங்கிக்கொண்டிருக்கிறாள்.

          கூட்டங்கள் கத்திக்கொண்டிருந்தாலும் விழிப்புவராமலிருந்தவளுக்கு குழந்தை அழும் சத்தம் கேட்டு விழித்துக்கொண்டாள்.விழித்தவள் எழுவதற்குள் இவளின் தாய் மாரியம்மா குழந்தையை தூக்கி கொஞ்ச ஆரம்பிக்கின்றாள்.

 தோதோதோதோ ஏன் செல்லத்த

 யாரு அச்சது……………………………………………………………………..(மாரியம்மா)

 ம்ம்ம்ம்ம்……மா…………………………………………………………………….(குழந்தையின் அழுகை)


தேவி எழுந்து அமர்கிறாள்

 மோவ் குடுமா கொய்ந்திய……………………………….(தேவி)

 ஏ இருமே……………………………………………………………………………….(மாரியம்மா)

என்று கூறி மீண்டும் குழந்தையை கொஞ்சிகிறாள்.ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.

 ஆ..க்ஞ்யா….ம்..ம்..ம்..மா…………………………………………….(குழந்தையின் அழுகை)

 மோவ்…………………………………………………………………………………………..(தேவி)

 ஏ இன்னாடி எனக்குனோமோ கொய்ந்த

 வளக்க தெரியாதமாறி வாங்குற…….………….(மாரியம்மா)

 அதான் ஊ வளப்பு பத்தி தெரியுமே………….(தேவி)

கூறி குழந்தையை வாங்கி மாராப்பை விலக்கி பால் கொடுக்கின்றாள்.அந்நேரம் வேகமாக ஓடிவந்து இவள் அருகில் நிற்கின்றான் சித்தன்.நின்றவனை பார்த்த தேவி

  ஏ வா வந்து ஒக்காரு……………………………………………….(தேவி)

என்று தேவி கூறியும் சித்தன் ஒன்றும் பேசாது முகத்தை வேறொரு பக்கம் திருப்பிக்கொண்டான்.தேவி அதை பார்த்ததும்

  என்ன கோவமா……………………………………………………………………(தேவி)

அவ்வாறு தேவி கேட்கும்பொழுது குழந்தை மீண்டும் அழ ஆரம்பித்தது.

  ஆ………ஆ…..க்ஞியா….ஆ………………………………………………………(குழந்தை)

  மோவ் பால் குடிக்கமாட்டுது மா…………………….(தேவி)

  ஏன்டி நாதா அப்போவே சொன்னல

  காம்பெடுத்து வாயில வை……………………………………..(மாரியம்மா)

மாரியம்மா சொன்னதும் முளையின் காம்பை எடுத்து குழந்தையின் வாயில் வைத்தாள்.இதை சித்தன் பார்க்க சித்தனை மாரியம்மாள் பார்க்க கடும் சினங்கொண்டு

  ஏ பொறம்போக்கே…………………………………………………………..(மாரியம்மா)

  மோவ் அவனுக்கு ன்னாத் தெரியும்…………..(தேவி)

பால் குடிக்காமல் மீண்டும் குழந்தை அழ தேவி மாரியம்மாளை பார்த்து

  ன்னாமா………………………………………………………………………………………….(தேவி)

  பால் கட்டிச்சினு நினைக்குற

  இப்போ ஆவின்பால கொடுத்துட்டு

  மாரபெசஞ்சிட்டு ஊம்பாலகொடு………………………(மாரியம்மா)

  வலிக்குமா………………………………………………………………………………….(தேவி)

அவ்வாறு கூறி மார்பை தொட இதை கண்ட சித்தனோ தேவியின் வயிற்றை தொட வருகின்றான்.இச்செயலை கண்டதும் மாரியம்மா

   டேய் பா………………………………………………………………………………………….(மாரியம்மா)

   மோவ்………………………………………………………………………………………………….(தேவி)

மாரியம்மா கத்தியவுடன் சித்தன் கையை எடுக்கின்றான்.அங்கிருந்த அனைவரும் இவர்களை பார்க்க மாரியம்மா அவர்களை பார்த்து

  இங்கென்ன அவுத்………………………………………………………………..(மாரியம்மா)

  மா போய் பால் வாங்கினுவா

  கொய்ந்த கத்துது பார்………………………………………………………….(தேவி)

தேவி கூறியவுடன் மாரியம்மாள் செல்கின்றாள்.பின் தேவி குழந்தையை கொஞ்சி கொண்டே

  பாப்பா வயித்துல இருந்துச்சில

  அதான் இப்போ பாத்தியா வயிறு

  எப்புடியாச்சி………………………………………………………………………….…………………(தேவி)

என்று கூறி சித்தனின் கையை பிடித்து வயிற்றில் வைக்கின்றாள்.சித்தனும் கையை வைத்து தடவி பார்க்கின்றான்.பின் தேவி சித்தனை பார்த்து 

  கொட்டிக்கினியா(தேவி)

சித்தன் அமைதியாக இருக்க

  நீ எங்க கொட்டினுப்ப இந்தா…..…………………………………………..(தேவி)

அங்கே அளித்த உணவை அவனிடம் கொடுக்க அதை லபக்கென்று பிடிங்கி சாப்பிடுகின்றான்.அப்பொழுது மாரியம்மா பாலை வாங்கி அதை ஆற்றி பின் பாலாடையில் ஊற்றி குழந்தைக்கு மெதுவாக கொடுத்துக் கொண்டிருக்கின்றாள்.வாயில் உணவை தினித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்த சித்தன் சடாரென்று எழுந்து கின்னியை கீழே போட்டு திபுதிபு என்று ஓடுகின்றான்.குழப்பத்தோடு மாரியம்மாவும் தேவியும் பார்த்தனர்

  சீ லூசு எப்புடி ஓடுது……………………………………………………………………..(மாரியம்மா)

தேவி இதை கேட்டதும்

  மோவ் எத்தன தடவ சொல்ற அவன

  அப்புடி சொல்லாதனு……………………………………………………………………..(தேவி)

இதை கேட்டு கேக்காததைப் போல் தனது பேரக்குழந்தைக்கு பாலை கொடுத்துக் கொண்டிருக்கின்றாள்.குழந்தையும் குடித்திக்கொண்டே தூங்கிவிட்டது.தேவி சித்தனுக்கு பரிந்துறை செய்ய ஒரு காரணம் உண்டு.அக்காரணத்தை அடுத்து வரும் அத்தியாயத்தில் காண்போம். 

(உங்களின் பேராதரவுடன்)

குறிப்பு(படைப்பாளிக்கு பகிரும் பாராட்டு அவனது படைப்புகள் விருத்தியாகும்)



Rate this content
Log in

Similar tamil story from Drama