Raja SaRa

Children Stories Tragedy

4.6  

Raja SaRa

Children Stories Tragedy

இருகோடுகள்

இருகோடுகள்

3 mins
267


                                              அத்தியாயம் ஐந்தில் மதம்பிடித்த களிறாய் லாவண்யா நடந்து கொள்ள தேவி அதற்கு நேர் எதிராய் சோகத்தில் சோர்ந்திருக்கின்றாள் குழந்தை மகதியோ மகிழ்வின் உச்சத்தில் இருந்தது                                                                            

                                                        அத்தியாயம்-6

 

         கதிரவன் கவித்துவமாய் இனிய இருளை களைத்திட சேவல் தனது சேவையை செய்திட காக்கைகளோ கானம் பாடி சென்றிட சித்தன் தேவி தந்த சேலையை கிழித்து கொண்டிருந்தான்.

         டர்ருருருருரு………………………………………(கிழியும் சத்தம்)

அதை கேட்டவுடன் உறக்கத்திலையே மகதி சிரிக்கின்றாள்.

        அக்அக்அக்அக்ஞா ம்ம் ஞா………………(குழந்தை)

அதை கண்டதும் மீண்டும் அந்த சேலையை சித்தன் கிழிக்க குழந்தை மீண்டும் கேட்டு சிரிக்கின்றாள்.இவன் மீண்டுமீண்டும் அவற்றை செய்ய அவளோ மீண்டுமீண்டும் சிரிக்கின்றாள்.இவை இவ்வாறே நடந்து கொண்டிருக்க கதிரவன் உமிழ்ந்த கதிரில் மறைந்த மதியும் அவளது விண்மீன் தோழிகளும் பார்த்து ரசித்து கொண்டிருந்தன.குழந்தை மகதியோ தன் நினைவலைகளை நீட்டுகின்றாள்.சிரித்து கொண்டிருந்த குழந்தை மகதி அழ ஆரம்பிக்கின்றாள் அவளது நினைவுகளில்.குழந்தை அழுது கொண்டிருக்க லாவண்யாவோ அதை கண்டுக்காது அவளது தோழிகளிடம் சிரித்து சிரித்து உறையாடிக் கொண்டிருக்கின்றாள்.

        அக்அக்அக்அக்ம்..ம்..ம்..ம்மாா………………..(குழந்தை)

        ஏ அதுல்ல டீ அந்த……………………………………………..(லாவண்யா)

        ம் இல்ல.ஐயோ இல்ல டீ…………………………….(லாவண்யா)

        ம் இரு சாந்தி………………………………………………………………..(லாவண்யா)

        மாாாா…………………………………………………………………………..(சாந்தி)

  கொழந்த அழுது பாரு……………………………………………(லாவண்யா)

    சாந்தி அவளை திட்டி கொண்டே குழந்தையை கொஞ்சுகின்றாள்.

        கொழந்தய பாக்காம அப்புடி

       என்னதா பேசுவாளோ………………………………………….(சாந்திமா)

       மாாாாம்….ம்…மா……………………………………….........(மகதி)

       தோதோதோ…தோ…………………………………………………………..(சாந்திமா)

அந்நேரம் ராஜா உள்ளே வருகின்றான் வந்தவன் சிறிது நேரம் சிரிப்பூட்டிகின்றான்.

       செல்லம் அம்மா என்ன பன்றீங்க

       பாப்பாவ யாரடிச்சது அம்மாவா………………………(ராஜா)

       ம்ம்ம்ம்…அக்ஞா…ம்……………………………………………………………(குழந்தை)

பின் சாந்தியை பார்த்து

       லாவா எங்கருக்கா…………………………………………………….(ராஜா)

கேட்கின்றான் சாந்தியும் லாவண்யா இருக்கும் திசையை காண்பிக்க அங்கே செல்கின்றான்.வந்தவன் தென்றலாய் இருப்பான் என்று நினைத்த குழந்தைக்கு .வறண்ட காற்றாய் அமைந்தது ஏமாற்றத்தை தந்தது அதனால் சிரித்தவள் அமைதியனாள்.பின்பு சித்தனை பார்க்கின்றாள்.சித்தனோ நேற்றைய பொழுது காவலரிடம் வாக்குவாதம் செய்து கொணடிருந்த பெண்ணைப் போல் நெஞ்சோடு அணைத்து சேர்த்து கட்டி கொண்டு கையில் காற்று ஊதப்பட்ட நெகிழியை கொடுத்து நடக்கலானான்.இவனுக்கு அவளாய் அவளுக்கு இவனாய் இருவரும் அவர்கள் அவர்களுக்கு தெரிந்த மொழியில் பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் வருகையில் அங்கே ஒரு வீட்டிற்கு வெளியே வாசற்படியில் பெண்ணொருத்தி அமர்ந்து பொம்மை வைத்து விளையாட்டு காட்டிக்கொண்டு தனது குழந்தைக்கு உணவை அளித்து கொண்டிருந்தாள்.வேண்டாத திணிப்பால் பொங்கிய தமிழர்களை போல் வேண்டாததை திணித்ததால் குழந்தை வேண்டாம் என்று தலையசித்து பின்பு வாந்தி எடுக்க அது அவளின் மீதும் குழந்தை மீதும் பட்டுவிட அதனால் அப்பெண் குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே செல்கின்றாள்.இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த சித்தன் அவன் தேடிய வழியோடு செல்கின்றான்.சமூகநல கூடத்தில் காற்றின் சதியால் சாயும் மரமாய் விதியின் சதியால் நன்றிருந்தவள் சாய்கிகன்றாள் தேவி.தென்றல் காற்றில் தெம்மாங்கு இசை இசைக்க இனிமையாய் சித்தன் உறங்கி கொண்டிருக்க அச்சமயம் குழந்தை அழும் சத்தம் கேட்க வில்லின் நாணலிருந்து வரும் அம்பைவிட அதிவிரைவில் எழுந்தமர்ந்தான்.கனவில் கண்டதை நிஜம் என்று நம்பியவன் அமர்ந்து குழந்தையை பார்க்க அவளோ தென்றலின் இளவரசியாய் உறங்கிகொண்டே அழகாய் சிரிக்க அதை கண்டவன் அவளருகாமையில் தலை சாய்கின்றான்.அந்தசைவில் முழிப்பு வந்த குழந்தை மெல்ல கண்ணை திறந்து பார்க்க இவனும் குழந்தையை பார்க்க இவர்களிருவரையும் எடுத்து வந்த பொம்மை ரசிக்க அந்த ரசிப்போடு நிலவின் ஈர்ப்பும் இணைந்து இரவானது இனிதாய் சென்றது.இரவோடு பகலும் செல்ல பகலோடு இரவும் செல்ல இவ்வாறு இரவு பகலுமாய் ஒரு மாதங்கழிந்தது.மாதமென்பது நாட்களாகவும் நாட்கள் மணிகளாகவும் மணிகள் நிமிடங்களாகவும் சித்தனுக்கு கழிந்தது ஆனால் தேவி்க்கும் லாவண்யாவிற்கும் இது அப்படியே எதிராய் அமைந்தது.வழக்கமாய் விடியும் காலை இன்று சித்தனுக்கு விடிவு காலையல்ல.வழக்கம்போல் வழக்கமாய் செய்யும் வழக்கச்செயல் ஒன்றும் செய்யாது.வழக்கத்துக்கு மாறாய் சித்தனும் மகதியும் உறங்கிகொண்டிருந்தனர்.அந்த வழக்கத்துக்கு மாறாய் அங்கே ஒருவன் வந்து நின்று குழந்தையை தூக்க முற்பட குழந்தையோ விழித்திறந்து அழுதது.அழுதவளின் வாயை பொத்தி திரும்பியவனுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது.அவன் பின்னால் சித்தன் கடுங்கோபத்தில் நின்று கொண்டிருக்க வந்தவனோ மெதுவாய் குழந்தையை அவனிடம் கொடுக்க

     ஆஆஆஆஆ…………………………………………………………(வந்தவன்)

சத்தம் கேட்ட உடனே கேட்ட திசை நோக்கி ராஜாவும் சக காவலர்களும் சென்று பார்க்கின்றனர்.அங்கே குழந்தையை தூக்க முற்பட்ட நபர் காது கொதரப்பட்டு இரத்த வெள்ளத்தில் படுத்து கதறிகொண்டிருக்கின்றார்.அதை கண்டவுடன் அனைவரும் அதிர்ந்தனர்.அதில் ஒருவர் தனக்கு நடந்த நிகழ்வை நிழலாய் நினைத்து பார்க்கின்றார்.காவல் நிலையத்தில் அவரவர் அவர்களின் பணியை செய்து கொண்டிருக்க அதை கெடுக்கும்விதமாய் தொலைப்பேசி அழைப்பு வருகின்றது.அந்த அழைப்பை உதவி ஆய்வாளர் சாரதி ஏற்கின்றார் மறுமுனையில்

     சாரதி speaking…………………………………………………………..(உ.ஆய்வாளர்)

     ம் சார் உங்க circle இருக்க

     மூக்கு தெருல பைத்தியக்காரன்

     கொழந்தய வெச்சிட்டு சுத்தினு

     இருக்கானா என்னனு பாருங்க…………………(கட்டுப்பாட்டு அறை)

     என்ன சார் சொல்றீங்க

     கண்டிப்பா பாக்க சொல்ற…………………………………(உ.ஆய்வாளர்)

என்று கூறி தொலைப்பேசியை வைக்கின்றான்.இங்கே சித்தன் குழந்தையை கங்காருவைப் போல் கட்டிக்கொண்டு கையில் உணவோடு அங்கிமிங்குமாய் அலைந்து திரிகின்றான்.திரிவது மட்டுமல்லாது உணவை பினைந்து மெதுவாய் சிறு சிறுவாய் ஊட்டுகின்றான். அதை கண்ட அனைவரும் அதிசயித்து ஆச்சரியத்தில் மூழகினர்.காரணம் அறிவுடையவர்கள் என்று பீற்றியவர்கள் அன்பற்றும் அறிவில்லாதவன் அன்புடன் இருக்கின்றான் என்பதால்.உணவு உண்டதால் விக்கல் ஏற்பட சிறட்டையில் இருந்த நீரை குழந்தைக்கு கொடுத்து கொண்டிருந்தான்.அப்பொழுது பின்னால் இருந்து காவலர் ஒருவர் சித்தனை இழுக்க இதனால் குழந்தையின் முகத்தில் நீர் சிந்த குழந்தை அழுக.அதனால் கோபங்கொண்டவன் கையிலிருந்த சிறட்டையால் ஓங்கி காவலரின் மூக்கில் அடிக்கின்றான்.இதனால் மூக்கில் இரத்தம் வழிய அந்த காவலர் அங்கையே மயங்கி விழுகின்றார்.இவ்வளவு நேரம் இவனை ரசித்தவர்கள் இதை கண்டதும் அதிர்ந்து சிலையாகினர்.அனைவரும் சிலையாயிருக்க. சித்தன் மட்டும் டெந்து செல்கின்றான்.இதை பார்ப்பதற்க்கு திரைப்படத்தில் வரும் வரைவியல் காட்சி போல் இருந்தது.அப்பொழுதிலிருந்து சித்தனை தேடி கொண்டும் செய்தியில் குழந்தையை பற்றி ஒளிபரப்பிக் கொண்டும் இருக்க இன்று சித்தன் இருக்கும் இடத்தை கழுகைப் போல் கொத்தி செல்ல வந்தவர்களை வேடனாய் வேட்டையாடி சென்றுவிட்டான்.

சென்றவனின் செயல்களை எந்தமிழின் துணையோடு காண்போம் அடுத்து வரும் அத்தியாத்தில்


Rate this content
Log in