Raja SaRa

Children Stories Tragedy Children

4.7  

Raja SaRa

Children Stories Tragedy Children

இருகோடுகள்

இருகோடுகள்

3 mins
469


                                              கடந்த அத்தியாயம் ஒரு பார்வை

 கடந்த அத்தியாயத்தில் ராஜா லாவண்யாவை அறைந்ததால் லாவண்யா கோபித்து தனது குழந்தையை தூக்கிக் கொண்டு மகிழுந்தில் பயணிக்கின்றாள்.மகிழுந்து நிற்கின்றது அதிலிருந்து இறங்கியவள் தள்ளாடியபடி நடந்து வந்தவள் மயங்கி விழுகின்றாள்.அங்கேயிருக்கும் சித்தன் குழந்தை மகதியை தூக்கி கொண்டு செல்கின்றான்.காவலர்கள் இருவர் வருகின்றனர் லாவண்யாவின் நிலையை கண்டு மருத்துவ அவசர ஊர்தியை அழைத்து அவளை அதில் அனுப்புகின்றனர்

                                                     

                                                        அத்தியாயம்-2

  வாகனத்தின் சத்தம் குழந்தையின் அழுகை சத்தமாக மாறியது

       அக்க-அக்க-அக்க-ஆஆஆஆவ்……..

       மா…………………………………………………………………………….(குழந்தை)

மேகத்தினுள் இருக்கும் இருளிலிருந்து நிறைமதி வெளியில் வருவது போல் இருளிலிருந்த குழந்தையின் முகத்தை போர்வையிலிருந்து விலக்கி பார்க்கிறான்.மகதி வீர்ரென்று அழுகிறாள்.அதை கண்டதும் இரவில் செயத செயலை செய்கிறான்.

       ம்உ,ம்உ,ம்உ……………………………………………..(சித்தன்)

            குழந்தையின் அழுகை நின்றபாடில்லை.பாவம் குழந்தைக்கு பசிக்கிறது என்பது இவனுக்கு எப்படித்தெரியும் இவனும் குழந்தையல்லவா.அமர்ந்திருந்த சித்தன் திடீரென்று எழுந்து ஓடுகிறான்.பார்ப்பதற்கு பஞ்சத்தில் அடிப்பட்டவர்கள் உணவு பொட்டலத்தை வாங்க ஓடுவதுப்போல் இருந்தது.

           இங்கே மருத்துவமணையில் எறும்பின் சுறுசுறுப்பைவிட பல மடங்கு அதிகமாகவும் தேனீயின் செயல்பாட்டைவிட பற்பல மடங்கு அதிகமாகவும் அங்குமிங்குமாக மருத்துவர்கள் அலைந்து கொண்டிருந்தனர் காரணம் கொரோனாவினால் ஏற்படும் இறப்பு விகிதம் மும்பை பங்குசந்தை போல் சரியாமல் ஏறுமுகமாக இருப்பதால்.மருத்துவ கூடத்திலிருந்து(ward) வெளியில் வந்த ராஜா தன் அன்பிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவரை இரை தேடும் கழுகை போல் அங்கே தேடினான்.மருத்துவரோ 5.00 மணி பேருந்திற்கு 4.55ற்கு கிளம்பிய பயணியை போல் வேகமாக சென்று கொண்டிருந்தார்.அவரை கண்டதும் தேடிய இரை கிடைத்ததும் கவ்வும் கழுகாய் கவ்வினான்.

       Sir,Sir…………………………………………………………………………………………(Raja)

       ஹா ராஜா உங்க wifeக்கு

      ஒன்னுமில்ல Bt அதிர்ச்சியான

      விசியத்த சொல்லாதிங்க……………………………….(மருத்துவர்)

நடந்துக்கொண்டே பேசுகிறார்

      ஏன் சார்…………………………………………………………………………………(ராஜா)

      அவங்க ரொம்ப Depresson சொன்னிங்க

      அப்புரோம் அவங்களுக்கு நடக்குறதே

      வேற……………………………………………………………………………………………(மருத்துவர்)

சொல்லிவிட்டு இல்லாத பேருந்தை புடிக்க ஓடுகிறார் இவனோ அதிர்ச்சியில் உறைந்து பின் திரும்பி நடக்கலானான்.அப்பொழுது நடந்து சென்றவர் திரும்பி நின்று ராஜாவை அழைத்தார்

      Mrs.Raja……………………………………………………………………………………(மருத்துவர்)

      Yes Sir……………………………………………………………………………………….(ராஜா)

      உங்க wife ah Discharge பன்னிகோங்க

      And எதுனா ஆச்சினா கூட்டிட்டு

      வாங்க……………………………………………………………………………………..(மருத்துவர்)

      ம்K Sir…………………………………………………………………………………………(ராஜா)

கொரோனாவின் எழுச்சி மனிதர்களின் வீழ்ச்சியே ராஜாவின் மனைவியை வீட்டிற்க்கு அனுப்ப காரணம்.மருத்துவர் திரும்புவதற்க்குள் காவலர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.அதை ராஜா பார்த்ததும் கத்தி போய் வாலு வந்தது என நினைத்து கொண்டான்.அக்காவலர் ராஜாவின் அருகில் வந்து.

          Msr.Raja……………………………………………………………………..(காவலர்)

          Yes Sir………………………………………………………………………(ராஜா)

          இப்போ உங்க Wife

          எப்படியிருக்காங்க………………………………….(காவலர்)

          மயக்கத்துலதான் இருக்கா Sir

          And தெளிஞ்சதும் கூட்டிட்டு

          போலாம்னு சொல்லிட்டாங்க….(ராஜா)

          ம் ok என்ன நடந்துதுனு

          தெரிஞ்சிக்கலாமா நீங்க

          சொல்றத வெச்சிதா

          உங்க கொழந்தைய……………………………..(காவலர்)

 அவர் சொல்லி முடிப்பதற்க்குள் இயற்கை தந்த நீரை அணைப்போட்டு தடுப்பது போல் அவரை தடுத்தான்.

          Sir என்ன நடந்ததுனு

          சொல்ற………………………………………….(ராஜா)

வரலாறை போல் திரித்து கூறாமல் நடந்ததை நடந்தவாறே கூற தொடங்குகிறான்.

          நேத்து night…………………………………(ராஜா)

    (சண்டை நடப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு)

       லாவண்யா தான் பெற்ற அன்பை தனது மகளுக்கு கொடுக்காது புலனத்தில்(whats app) தனது தோழிகளுடன் உறையாடி கொண்டே தூங்கவைத்து கொண்டிருந்தால்.குழந்தையோ நீரில்லாத வறள் நிலமாய் முகத்தில் வறட்சியை கொண்டு தூங்குவோமா வேண்டாமா என்ற எண்ணத்தில் அரை தூக்கத்தில் தூங்கி கொண்டிருந்தது.அபொழுது அழைப்பு மணி துள்ளிகுதிக்க லாவண்யா எழுந்து நடந்தாள்.அவள் கதவருகில் செல்ல செல்ல அடைப்பட்டு இருக்கும் சாக்கடையில் இருந்து வரும் துர்நாற்றமாய் மதுவின் மனம் வீசியது அதனுள் கோபமும் கூட.கதவை திறந்ததும் கதவருகில் நிற்க நிலைப்பாடு இல்லாது சாய்ந்து கொண்டிருந்தான்.ராஜாவை கண்டதும் கோபம் கொண்டு கொதித்தெழாமல் சாந்தமாய் அவனை அரவணைத்து தட்டுதடுமாறி நீள் சாய்விருக்கையில்(sofa) படுக்கவைத்தாள்.

         இரண்டு மணி நேரங்கழித்து காய்ந்த தொண்டை இழுக்க அதை நனைப்பதற்காய் எழுந்தான்.எழுந்தவனுக்கு பேராபத்து காத்து கொண்டிருந்தது.இவனுக்கு எதிரே நாற்காலியில் எரிக்கும் பார்வையோடு அமர்ந்திருந்தாள்.இதை கண்டதும் வறண்ட நாக்கும் சிறுது இருந்த போதையும் போய்விட்டன.

       ஆஹா இன்னைக்கு செத்தடா

       ராஜா…………………………………………………………………………..(ராஜா)

என மனதுக்குள்ளையே சொல்லி கொண்டான்.அவளோ பேசாமல் எழுந்து தண்ணீரை கொடுத்தாள்.அதை பள்ளிக்கூடுத்தில் மதிப்பெண் அட்டை வாங்கும் பயத்தோடு வாங்கி கீழே சிதறவிட்டு அவசரப்பட்டு குடித்துக்கொண்டிருந்தான்

       குடக்குடக்குடக்…………………………………………………(குடிக்கும் சத்தம்)

அப்பொழுது

       நாளைக்கு நா அம்மா வீட்டுக்கு

       போற……………………………………………………………………………….(லாவண்யா)

அதை கேட்டவுடன் புறையேறி குடித்த நீரை துப்பிவிட்டான்

      ஹொக்கு ஹுவ் ஹொக் ஹொக்…..(புறை இருமல்)

காரணம் லாவண்யா வீட்டை எதிர்த்து ராஜாவை காதலித்து கல்யாணம் செய்தவள்.இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தார் பல வழிகளில் துன்பம் விளைவித்தனர்.இதனை எதையும் கண்டுக்காது ராஜா தன்னை நம்பி வந்தவளுடன் மகிழ்வாய் வாழ்ந்து வந்தான்.குழந்தை பிறந்தால் வருவார்கள் என நினைத்த லாவண்யாவிற்கு குழந்தை பிறந்து எட்டுமாதமாகியும் வராததால் ஏமாற்றமே மிஞ்சியது.இத்தனை நாள் பார்க்கவராத குடும்பத்தை பார்க்கப் போவதால் ராஜாவிற்கு புறையேறியது

     ஹொக்கு ஹொக்கு எதுக்கு…………….(ராஜா)

     அவங்க நியாபயகமா இருக்கு……….(லாவண்யா)

     அதலாம் ஒரு ஆணியும் வே…………(ராஜா)

சொல்லி முடிப்பதற்குள்

     ஏன் நீ ஊன் இஷ்டத்து இருப்ப

     நா இருக்க கூடாதா………………………………..(லாவண்யா)

     ஹே நா முடியாதுதான்டி சொன்ன

     அவனுங்கதா இன்னை ஒரு நாள்

     குடினு சொன்னானுங்க………………………..(ராஜா)

     ஓ அப்புடியா இன்னைக்கு ஒரு

     நாள் என்ன படு………………………………………………(லாவண்யா)

சொல்லிமுடிப்பதற்குள் அறைந்துவிட்டான்.இவன் அறைந்த அறையில் அவள் மயங்கி சுழன்றுவிழுந்து கண்ணை மூடிவிட்டாள்.


(பின்பு நடக்கும் நடப்பை அடுத்து வரும் அத்தியாயங்களில் காண்போம்.

குறிப்பு:(உங்களின் பேராதரவுடன்)

படைப்பாளிக்கு பகிரும் பாராட்டு அவனது படைப்புகள் விருத்தியாகும்)


Rate this content
Log in