Raja SaRa

Children Stories Drama Tragedy

4.0  

Raja SaRa

Children Stories Drama Tragedy

இருகோடுகள்

இருகோடுகள்

4 mins
255


     அத்தியாயம் ஆறில் காவலர்களுக்கும் சித்தனுக்கும் நடந்த போரை கண்டோம்.சித்தனின் நிலையென்ன குழந்தை மகதி என்ன ஆகிறாள் என்பதை இனிவரும் அத்தியாயத்தில் காண்போம்.


                                                       அத்தியாயம்-7


     கருவரையில் இருக்கும் அமைதியான இருட்டு. அவ்விருட்டில் அழுது கொண்டிருக்கும் குழந்தையோடு சித்தன் நடந்து வருகின்றான்.அப்பொழுது நாய்கள் அதிக சத்தத்துடன் குறைக்க உறங்கி கொண்டிருந்த முனியம்மாள் விழித்தெழுந்து பார்க்கின்றாள்.பார்ததவளுக்கு பேரதிர்ச்சியாயிருந்தது.காரணம் அவளின் காலருகில் சித்தன் கையில் குழந்தையோடு அமர்ந்திருப்பதால்.அந்த அதிர்ச்சியோடு அருகில் உறங்கி கொண்டிருந்த தேவியை எழுப்புகின்றாள்.

      

 ஏ தேவி ஏ எய்ந்திட்றி…………………………..(முனியம்மா)

எழுந்திருக்க முடியாது எழுந்து அமர்தவளும் அதிர்ந்து போனாள்.பின் சித்தன் அழுது கொண்டிருக்கும் மகதியை தேவியிடம் கொடுக்க.தேவி சித்தனையே பார்க்க முனியம்மா இவர்களிருவரையும் பார்க்கின்றாள்.லபக்கென்று குழந்தையை சித்தனிடமிருந்து பிடிங்கி குரந்தையை முத்த மழையில் நனைய வைக்கின்றாள்.இதை கண்ட முனியம்மாவில் விழியில் நீர் வழிகின்றது.காரணம் சில நாள் முன்பு தேவியின் குழந்தை இறந்ததால் மனப்பிறழ்வாகி இருந்தாள்.இந்த குழந்தையை கண்டவுடன்தான் சுயநினைவுக்கு வருன்றாள்.பின்பு முனியம்மாள் சித்தனிடம்

      யாருது இந்த கொய்ந்த………………………(முனியம்மாள்)

என்று கேட்க முத்தமழையிட்டவள் அவ்வாறே முத்தத்தை நிறுத்தி குழந்தையை சித்தனிடம் கொடுக்க அந்நேரம்

     யாருதாருந்தா ன்னா இனி

     இது உந்து……………………………………………………………...(முனியம்மாள்)

     மோவ் நா பட்ற அவஸ்ததான்

     கொய்ந்தயோட அம்மாவும்

     பட்டுனுருக்கும்……………………………………………………(தேவி)

அந்த நேரம் குழந்தையின் அழுகை சத்தம் அதிகமாக தேவி தன் மாராப்பை விலக்கி மார்பின் காம்பை எடுத்து வாயில் வைக்கின்றாள் குழந்தையும் அழுகையை நிறுத்திவிட்டு பால் குடிக்க ஆரம்பித்தது.இதனால் தேவியின் விழியில் முகட்டிலிருந்து வரும் நீராய் உள்ளத்தின் வலிகளோடு வடிந்தது.

              வாகனங்கள் முந்தியடித்து சென்று கொண்டிருக்க அந்த வாகனங்களைவிட படு வேகமாக ஒரு கையில் குழந்தையை ஏந்தி கொண்டு மறுகையில் சித்தனை பிடித்து கொண்டு காவல் நிலையம் நோக்கி நடக்கின்றாள்.அப்பொழுது குழந்தை மகதி அழ ஆரம்பிக்க அங்கேயே சாலையின் ஓரத்தில் அமர்ந்து மாராப்பை விலக்கி பால் கொடுக்கின்றாள் தேவி.குழந்தை மீண்டும் அழுகின்றாள் அதனால் இடது மார்பிலிருந்து வலது மார்பிற்கு மாற்றி பால் கொடுக்கின்றாள்.அதிலும் வரவில்லை.காரணம் மார்பு பால் கட்டியதால்.குழந்தையின் அழுகை அதிகமாவதால் தன் மார்பை வலியோடு கைப்புச்சுவையாக்கினாள்(கசக்கினாள்).அப்பொழுதும் பால் வரவில்லை குழந்தையின் மேலும் அதிகமாகியது.குழந்தையின் அழுகை தாங்காது வெறிப்பிடித்தவளாய் சுற்றும் முற்றும் பார்க்கின்றாள்.சாலையின் மறுப்பக்கம் ஒரு மிதிவண்டி தேநீர் கடையிருக்க குழந்தையை சித்தனிடம் கொடுத்துவிட்டு மாராப்பு மாற்றிக்கொண்டே சாலையை கடக்க எல்லோரும் அவளையே கண்டனர் தாய்மையறிந்தும் அறியாதவர்களாய் பலர் இருக்கிறோம் அல்லவா அவர்கள் கண்கள் இவளின் மாராப்பை பார்த்து கொண்டேயிருக்க இவளோ அதை காணாது சாலையை கடந்து மிதிவண்டி அருகே செல்கின்றாள்.

     நா பால் ஒரு கப் தானா……………(மூச்சிறைத்து கொண்டே)(தேவி)

     பாலை ஆற்றி அவன் கொடுக்க பதட்டத்தோடு வாங்கி திரும்பியவள் சித்தனை காவலர்கள் இழுத்து செல்வதை கண்டு அதிர்ந்து கையிலிருந்த பாலோடு அவர்களை பிடிக்க ஓடுகையில் கால் இடறி கீழே விழுகின்றாள்.இவளை இச்சையில் பார்த்தவர்கள் ஒருவரும் கைகொடுக்க வரவில்லை அவளாய் எழுந்து நடந்து மீண்டும. ஓடுகின்றாள் ஓடுகின்றாள் இந்த தேநீர் மிதிவண்டிகாரர் பார்வையில் இருந்து மறையும் வரை.

   காவல் நிலையம் அதிர்கிறது அடிவாங்கும் சித்தனின் குரலால்.

     ம்…..ம்….ம்……மா………………………………………….(சித்தன்)

     அதை கேட்ட தேவி பதட்டத்தோடு காவல் நிலையம் உள்ளே வந்து அங்கே இருக்கும் உதவி ஆய்வாளர் சாரதி காலில் விழுகின்றாள்.

     சார் சார் உட்ருங்க அவன

     please sir…………………………………………………………..(தேவி)

     போலிஸ்காரன அடிச்சிட்டு

     போனா வுட்ருவோமா……………………(சாரதி)

     சார் சார்…………………………………………………………..(தேவி)

     மோ போமா அந்த பக்கோ………..(சாரதி)

அவர் கேட்காததால் குழந்தையை தேடி சுற்றி பார்த்தவள்.குழந்தை ஒரு தம்பதியினர் வைத்திருப்தை பார்த்து அவர்கள்தான் குழந்தையின் தாய் தந்தையினர் என்றறிந்து ராஜாவின் காலில் விழுந்து மன்றாடுகின்றாள்.அவன் மனம் இலகவில்லை பின் லாவண்யாவின் காலில் விழுந்து மன்றாடுகின்றாள் அவளோ சிறிது மனமிலகி குழந்தையோடு ராஜாவை பார்க்க.ராஜாவோ லாவண்யாவை கண்டுக்கவில்லை பின் மீண்டும் தேவி சாரதி காலில் விழுந்து மன்றாடுகின்றாள்.அப்பொழுது

   ஏ நீ இப்போ காலவிடறியா

   இல்ல Caseனு சொல்லி

   உள்ள போடவா…………………………………………………………(சாரதி)

அவ்வாறு சொன்னவுடன் கையை மெதுவாக அழுது கொண்டே எடுக்கின்றாள்

   ராஜா கொழந்த ஏ விடாம

   அழுதுட்டே இருக்கு…………………………………………(லாவண்யா)

   இவனுங்க கூடயிருந்தால

   அதான் ஒத்துகாத

   கொடுத்துருப்பாளுங்க…………………………………(ராஜா)

   ரொம்ப பயமாருக்கு Hospital

   போலாமா……………………………………………………………………..(லாவண்யா)

   சரி வா போலா.சார் போய்ட்டு

   வந்துட்றோம் சார்……………………………………………..(ராஜா)

என்று கூறிவிட்டு செல்ல முற்பட மீண்டும் ராஜாவின் காலை பிடித்து கொண்டு மன்றாடுகின்றாள்

   சார் சார் ஒரு ஐஞ்சி நிமிசோ

   அவன்ட கொய்திய கொடுங்க சார்

   ப்லீஸ் சார்……………………………………………………………………………….(தேவி)

ராஜாவும் லாவண்யாவும் கண்டுக்காமல் செல்ல மீண்டும் சாரதியிடம் செல்ல சாரதி எட்டிவிட அப்பொழுது ஒதுங்கியவள் அருகிலிருக்கும் மேசை மீது சாய மேசை அதிர்வுற்று அதிலிருந்த பொருள்கள் ஆட்டம் கண்டு கீழே விழ அவற்றிலிருந்து திறந்திருந்த எழுது கோலை எடுத்து தன் கழுத்தில் வைத்து கொண்டாள்.

   சார் கொய்ந்திய அவன்ட கொடுக்கல

   நா குத்திப்ப…………………………………………………………………………………….(தேவி)

அனைவரும் அதிர்ந்தனர்.

  ஏ குத்திக்காதமா இருமா……………………………………………….(சாரதி)

என்று கூறி லாவண்யா ராஜாவிடம் சென்று

  சார் தயவுசெஞ்சி அவன்ட கொழந்தய

  கொடுங்க சார் நா வாங்கி தர

  ப்லீஸ் கோ ஆப்ரேட் பன்னுங்க…………………………(சாரதி)

ராஜா சிறிது நேரம் மௌனம் காக்க அந்நேரம் சித்தனின் கைகட்டு அவிழ்க்க லாவண்யா குழந்தையை கொண்டு சென்று பயத்தோடு சித்தனிடம் கொடுக்கின்றாள்.அவன் நேரம் தாமதிக்காமல் தடாலன்று தனது மேலிருக்கும் இரத்த கறையை தனது கந்தல் துணியால் துடைத்துவிட்டு குழந்தையை லாவகமாக கையில் வாங்குகின்றான்.தன் வலி குழந்தைக்கு தெரியாமலிருக்க சித்தன் செய்த செயலை கண்டு எல்லோரும் அவனை அதிசயத்து பார்த்தனர்.அதே போல் அவனிடம் சென்றவுடன் அழுதிருந்த குழந்தை அழுகை நிருத்தியது.பின் சித்தன் எப்பொழுதும் குழந்தையிடம் செய்துகாட்டும் விளையாட்டை செய்துகாட்ட குழந்தை அதை பார்த்த உடனே சிரிக்க ஆரம்பித்தது.

    ம்உ ம்உ ம்உ…………………………………………………(சித்தன்)

   அக்அக்அக்அக்ஞா…..ம்.ம்ம்………………..(குழந்தை)

ராஜாவும் லாவண்யாவும் வெட்கி குனிந்தனர்.சாரதியும் சக காவலர்களும் சிலாகித்து நின்றனர்.தேவி கழுதில் வைத்திருந்த எழுது கோலை கீழே போட்டுவிட்டு அழுகின்றாள்.அதை காண காண ராஜா லாவண்யாவின் விழியோரங்களிலும் நீர் துளி வெளிவந்து தரையில் விழுகின்றது.

    சிரித்து கொண்டிருந்த குழந்தை இப்பொழுது அழ ஆரம்பித்து அதிகமாக அழுகின்ற சத்தம கேட்கிறது.ராஜா குழந்தையை சமாலிக்க குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.லாவண்யா சமாலிக்க அழுகையை நிறுத்தவில்லை.பின் மாரப்பு விலக்கி பால் கொடுக்க முற்பட பாலையும் குடிக்கவில்லை.பின் மனநல மருத்துவமனைக்கு அழைப்புவிடுத்து விவரத்தை கூறிவிட்டு அழைப்பை துண்டிக்கின்றான்.லாவண்யா சாந்தி இருவரும் குழந்தைக்கு விளையாட்டு காட்டியும் குழந்தை அழுகை நிறுத்தவில்லை.அவ்வாறே ஒரு சில மணிதுளிகள் செல்கின்றது.மூவரும் விளையாட்டு காட்டி கொண்டிருக்க அப்பொழுது வாயல் மணி அழைக்க ராஜா சென்று கதவை திறக்கின்றான்.திறந்த கதவிற்கு வெளியே தேவி மனநலம் பாதிக்கப்பட்டு நின்றிருக்க அவளருகே காப்பாளர்கள் இருவர் நின்று கொண்டிருந்தனர்.அவளை கண்டதும் ராஜாவின் நினைவு கண்ணீரால் நனைத்து நீள்கின்றது.

    லாவண்யாவிடமிருந்து குழந்தையை பெற்று விளையாடி கொண்டிருந்தான் சித்தன்.இதனை கண்டவர்கள் நாணிகுறுகி நின்று பின் தன் தவறை உணர்ந்து ராஜா தேவியிடமும் லாவன்யா சித்தனிடமும் சென்று மன்னிப்பு கேட்க சென்றனர்.லாவண்யா சித்தனிடம் மன்னிப்பு கேட்ட பின் அவனிடமிருந்து குழந்தையை வாங்க அவன் குழந்தையோடு அங்கையே சரிந்து விழுகின்றான்.ராஜா அருகில் வந்து சோதிக்க சித்தன் மரணமடைந்துவிட்டான்.என தெரிய வர ராஜாவும் லாவண்யாவும் கண்கலங்க அங்கிருந்த அனைவரும் கலங்கி நிற்க தேவி மட்டும் சித்தனின் அருகில் தேய்து கொண்டே சென்று அவனை எழுப்புகின்றாள்.

   சின்னா தம்பி டேய் எழுந்துட்றா

   தம்பி டேய் ஏ மேல பாச வெச்ச

   எல்லாரும் விட்டு போய்ட்டாங்க

   நீயு போய்டாதடா தம்பி சின்னா

   சின்னா…………………………………………………………………………………………(தேவி)

அந்த அழுகையோடு அவளும் அப்படியே சாய்கின்றாள்.சித்தன் இறந்தானே தவிர குழந்தையை கீழே விடவில்லை.

சார் இப்போ என்ன பன்றது…………………………(சாரதி)

என்ன பன்றதுனு தெரில………………………………..(ராஜா)

என கூறி அழுது கொண்டிருக்கும் குழந்தையை ராஜா பார்க்க.மூன்று நாள் கழித்து இன்று சித்தன் செய்தது போலவே தேவியும் செய்து காட்ட குழந்தை அழுது கொண்டிருக்க பின் தன் மாராப்பை விலக்கி காம்பினை வைத்தவுடன் அருகையை நிறுத்தினாள் குழந்தை மகதி.இவள் பால் குடிக்க தேவியின் கண்ணில் நீர் வடிந்து அவளின் அழுக்கு படிந்த ஆடையில் பட்டு சிறிது கீழே விழுந்து சரிவை நோக்கி ஓடுகின்றது.அதன் ஓட்டதின் முடிவில் கதையின் ஓட்டமும் முடிந்தது.

அன்பெனும் கிருக்கலில்

பிறந்த

அன்பற்ற கிருக்கன்கள்

நாம்

நாம் நமக்கு

நாமே

இரக்கனாய் இராது

அரக்கனாகிவிட்டோம்

அரக்கக்கிருக்கனாய்.

      

இருகோடுகளின் நிலை தொடரும் அடுத்து வரும் புதிய கதை ஓட்டத்துடன் 


Rate this content
Log in