Raja SaRa

Children Stories Drama Tragedy

4.5  

Raja SaRa

Children Stories Drama Tragedy

இருகோடுகள்

இருகோடுகள்

2 mins
376


                                                       இதற்கு முன் அத்தியாத்தில் கணவனை இழந்த லட்சுமியான தேவி தன் குழந்தை மற்றும் தாயுடன் சாலையோரத்தில் வாழ்கிறாள்.அவளை காண சித்தன் வருகின்றான்.சித்தனை தேவியின் தாய் திட்டுகிறாள்.குழந்தைக்கு பால் அளிக்கின்றாள் அதை பார்த்தவுடன் சித்தன் ஓடுகின்றான்

                                                        அத்தியாயம்-4

                                                     ஒருவருடத்திற்கு முன்பு

  சந்திரனும் மின் தந்திரமும் இல்லாது அடர்த்தியான அழகிய இருளில் இரவுப் பூச்சி(பாச்சை) இசை இசைக்க நாய்கள் கவித்துவமாய் ராகமிழுக்க சாலை ஓர சிமிளி விளக்கின் வெளிச்சத்தில் தேவி தன் அன்பானனை கட்டியணைத்து உறங்கி கொண்டிருந்தாள்.சப்தமின்றி இருந்த நிசப்தத்தின் கானத்தை களைத்துச் சென்றது ஒரு வாகனம்.அதனால் விழித்து கொண்ட தேவி அமர்ந்து கொண்டாள்.அங்கே மீண்டும் இருளை கிழித்து ஒளியை உமிழ்ந்து கொண்டு சென்றது ஒரு வாகனம்.


அவ்வெளிச்சத்தில் தான் தெரிந்தது அகதியில்லாதவர்கள் ஆனால் சொந்த மண்ணின் விலாசமற்றவர்களின் நிலை.தேவி சிறுநீர் கழிக்க எழுந்து அவர்களைத்தாண்டி தொலைவாய் சென்றாள்.கழித்தவள் திரும்பார்க்கையில் அவளருகிலையே இரண்டுக்கால் வயதான மிருகம் ஒன்று அவளை இச்சையோடு பார்த்து கொண்டிருந்தது.அவனை கண்டதும் பயந்து விளிகியவளை தனது மகளின் ஒத்தவள் என்றும் பாராமல் இழுத்தான்.இவளோ அவனை தள்ளிவிட அவனோ அங்கே உறங்கி கொண்டிருந்த சித்தனின் காலை மிதித்துவிட்டான்.மிதித்த வேகத்தில் விழித்த சித்தன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவனது காலை கடித்துவிட வலிதாங்காமல் அம்மிருகம் தேவியை விட்டான்.


பின் சித்தனிடம் மிருந்து விடுப்பட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிவிட்டான்.சித்தனோ எதுவும் நடக்காதது போல் மீண்டும் படுத்துகொண்டான் இதையெல்லாம் தேவி பயத்தோடு பார்த்து கொண்டிருந்தாள்.பின் தெளிந்தவள் தன் ஆடை களைந்திருப்பதை கண்டு அங்கையே சரி செய்கிறாள்.அந்நேரம் தேவியின் கணவன் முனுசாமி அங்கே வர அதை கண்ட இவளோ பயத்தின் உச்சிக்கே செல்கின்றாள்.சித்தன் படுத்திருப்பதும் மற்றும் தேவி கோலத்தையும் கண்ட முனுசாமி ஒன்றும் பேசாது தன் இடத்திற்கு சென்றான்.ஆடையை சரி செய்து பின் தேவியும் சென்றாள்.அங்கே அவன் முகத்தில் வறட்சியை கொண்டு யோசனையில் இருந்தான்.தேவி வந்ததும் திரும்பிபடுத்து கொண்டான்.பின் இவளும் ஒன்றும் பேசாது படுத்து கொண்டாள்.நேரம் செல்ல செல்ல மனது வலித்து கொண்டிருந்தது.அவனிடம் கேட்கவும் முடியாமல் நடந்ததை சொல்லவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்.அப்பொழுது அவளை முனுசாமி அரவணைத்தான்.பின்

     எதுக்கு டீ இப்போ நீ அழுதுனுகீர………………(முனுசாமி)

     மாமா நொ அப்புடி இருந்தத பாத்து

  நீ…………………………………………………………………………………………………………..(தேவி)

  சந்தேகப்பட்டனு நினைக்குற……………………………..(முனுசாமி)

  அப்போ அங்கா பாத்துட்டு அமைதியா

  வந்து யோசிச்சுனுந்தியே…………………………………………(தேவி)

  அதலாம் ஒன்னுல்ல……………………………………………………(முனுசாமி)

  அப்போ …………………………………………..………………………………………….(தேவி)

  நாதான் ப்ளாட்பாரம் ஏ கொய்ந்தியும்

  பொன்டாட்டியும் அப்புடி இருக்கக்

  கூடாதுனு நினைச்ச முடில அததான்

  யோசிச்சினுந்த……………………………………………………………………….(முனுசாமி)

  என்ன அப்புடி பாத்து நீ…………………………………………………(தேவி)

  உன்ன எப்புடி சந்தேகப்பட முடியும்

  உன்ன சந்தேகப்பட்றதும் ஏ அம்மாவ

  சந்தேகப்பட்றதும் ஒன்னு………………………………………..(முனுசாமி)

அவ்வாறு சொல்லிவுடன் தேவி தன்னவனை கட்டிக்கொண்டு மீணடும் அழ ஆரம்பிக்கின்றாள். அவனும் அவளை ஆரத்தழுவிக்கொண்டான்.இக்காட்சியை சமூக நலக்கூடத்தில் படுத்துக்கொண்டு.விழியோர நீர்த்துளியோடு ஆழ்மனதில் ஓடவிட்டு கொண்டிருந்தாள்.


பின் அதோடு கண்ணயர்ந்தாள்.இங்கே பால் கீழே சிந்திகிடக்க செறட்டைத் துண்டிலும் பால் இருக்க சித்தன் குப்பையில் உறங்க குழந்தையோ வெண்ணை தின்ற கன்ணனைப் போல் வாயில் செறட்டை நாறோடு பாலும் ஒட்டிருக்க உறங்கி கொண்டிருந்தது.இவர்களோடுஅந்த இரவு பொழுது அமைதியாய் சென்றது.இனி வரும் அத்தியாயங்களில் சித்தனின் அன்பும் குழந்தையின் ஏக்கத்தையும் காண்போம்.

(உங்களின் பேராதரவுடன்)

குறிப்பு(படைப்பாளிக்கு பகிரும் பாராட்டு அவனது படைப்புகள் விருத்தியாகும்)


Rate this content
Log in