Raja SaRa

Children Stories Drama Tragedy

4.5  

Raja SaRa

Children Stories Drama Tragedy

இருகோடுகள்

இருகோடுகள்

3 mins
292


           

               அத்தியாயம் நான்கில் தேவி ஒதுக்குப்புறமாக செல்லும் வேலையில் இருகால் மிருகம் அவளை நெருங்க அதிலிருந்து பித்தன் காப்பாற்ற இவள் சேலையை சரி செய்ய அதை தேவியின் கணவன் காண இவளும் அதை கண்டு பயப்பட சந்தேகம்படுவான் என ஆனால் அதுக்கு மாறாக நடக்கிறது

                                               அத்தியாயம்-5


     பகலவன் பக்குவமாய் எழுந்து ஒளி வீசிக்கொண்டிருக்க காக்கைகளோ உணவை சமபந்தி செய்து கொண்டிருக்க அதே நேரம் இங்கே உணவுக்காய் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது அதில் முனியம்மாவும் இருக்கிறாள்.

   தே மாரி வாங்குனு போய்ற டீ

   இரு டீ…………………………………………………………………………………(முனியம்மா)

   ஏ நீ காத்துனுக்க மாட்டியா……………………….(மாரியம்மா)

   கொய்ந்த அழுவுது மே…………………………………….(முனியம்மா)

   எங்க வூட்ல கொய்ந்தல்லையா…………….(மாரியம்மா)

   ன்னா நீ ரொம்ப பன்னுகிற…………………………(முனியம்மா)

இவ்வாறு இங்கே நடந்து கொண்டிருக்க தேவியோ தன் குழந்தையை சுடு தண்ணீரால் துடைத்து மையால் பொட்டு வைத்து அலங்காரம் செய்து கொண்டிருக்கின்றாள் இதற்கு சித்தனும் உதவி செய்து கொண்டிருக்கின்றான்.ஆனால் குழந்தையோ எதையும் பொருட்படுத்தாது அழகாய் தூங்கிகொண்டிருக்கின்றான்.இங்கே இவ்வாறு நடக்க மருத்துவமணையில் இரணகளம் செய்து கொண்டிருக்கின்றாள் லாவண்யா.

   ஏன் கொழந்த எங்க………………………………(லாவண்யா)

ராஜா அமைதியாக நிற்க

   சொல்றா எங்க………………………………………….(லாவண்யா)

அதே நிலையில் ராஜா நின்று கொண்டிருக்க.அதை கண்டவுடன் மதங்கொண்ட பிடியாகியவள் அங்கிருந்த பொருள்களை தூக்கி எறிகின்றாள்.அதை தடுத்து அமைதிபடுத்த ராஜா முற்பட மருத்துவரோ அவளுக்கு மயக்க ஊசி போடுகிறார்.அதனால் அவளின் வேகம் படி படியாய் குறைகின்றது.மயக்க நிலையில் இருந்தவள்

     என்னாலாதா ஏன் கொழந்த

     போச்சி நாதான் காரணம் எல்லா

     என்னாலதான்………………………………………………………(லாவண்யா)

தன்னிலையறியாது புலம்பிக் கொண்டே கண்ணயர்கின்றாள். அக்கண்ணயர்வினால் விழியோரத் துளி அவள் கண்ணத்தைவிட்டு கீழிறங்கி தாய்மையை தூய்மையை காட்டுகின்றது.ஆம் உலகில் தூய்மையும் மெய்மையும் வெண்மையுமானது தாயின் உள்ளம் மட்டுமே அவளின்றி அணு ஒன்றும் அசையாது.அதில் இவளும் விதிவிலக்கல்ல.இருந்தும் சிறிது விலகினாள்.அதை பின்வரும் அத்தியாயத்தில் காண்போம்.மாலை நேர சாலை ஓரத்தில் ஈரத்துணிகள் கந்தல் கந்தலாய் இருக்க அதை அருகில் கரிகட்டையால் கிருக்கியிருக்க குழந்தை மகதியோ முகத்தில் கரி பூச்சால் அலங்காரம் செய்யப்பட்டு கிழிந்த ஆடையில் உடுத்தி ஆனந்தமாய் ஆழ்ந்துறங்கி கொண்டிருக்கின்றாள்.இவளி்ன் அழகான கிருக்கற்த் தோற்றத்திற்கு இக்கருக்கனே காரணம்.ஐயோ மன்னிச்சுடுங்க சித்தனே காரணம்.எதுகை மோனைல வந்ததுனால சொன்ன மத்தபடி ஒன்னுமில்ல தேவி.குழந்தைக்கு சிங்காரஞ் செய்த சித்தன் சிறு நடைப்போட்டு செல்கின்றான்.அவனோடு அன்றைய பொழுதும் சென்றது.நேற்றைய பொழுது முடிந்த நிலை நாளைய பொழுது கையில் இல்லை இன்றைய பொழுது நிரந்தரமில்லை.அதுப்போல் நடந்த சில நிகழ்வுகள் இன்று வேறொரு தோற்றத்தில் இருக்கின்றது.சமூக நலக்கூடத்தில் சமூக இடைவெளியின்றி அனைவரும் சுமூகமாக பேசிக் கொண்டிருக்க தேவி மட்டும் குழந்தையை மடியில் படுக்க வைத்து கொண்டு விழியோர கண்ணீரை கசியவிட்டு கொண்டிருந்தாள் காரணம் குழந்தை உடல் உபாதையால் பால் அருந்தாமல் இருப்பதால்.இதற்கே இவ்வாறு இருக்கின்றாளே பின் நடக்கப்போவது தெரிந்தால் என்ன ஆகிவிடுவாள் என்று புலப்படவில்லை.பொறுத்திருந்து படிப்போம்.சித்தன் கையில் பையும் அதில் குழந்தையும் வைத்து கொண்டு சாலையில் நடந்து செல்கின்றான்.அங்கே பெண்ணொருத்தி தன் குழந்தையை முன்னால் கட்டிக்கொண்டு.வாகனத்தில் அமர்ந்து கொண்டே காவலரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள்.

    சார் எப்புடி சார் தப்பாகும்……………………………………….(ஒருவள்)

    மேடம் நீங்க என.ன சொன்னாலும்

    இது தப்பு தப்புதான்………………………………………………………….(காவலர்)

அவர்களின் அருகாமைலையே ராஜாவும் நின்று கொண்டிருந்தான்.காணாமல் மகள் மகதிப் பற்றி தெரிந்து கொள்வதற்காக.சித்தன் மூட்டையை ஒரு ஓரமாக வைத்து விட்டு குழந்தைக்கு போர் போர்த்தி அந்த சண்டையை பார்க்க சென்றுவிட்டான்.அப்பொழுது ராஜாவிற்கு அலைப்பேசியில் அழைப்புவர அங்கிருந்து நகர்ந்து மூட்டை அருகே சென்று அழைப்பை ஏற்று பேசுவதற்குள் அங்கே உயர் அதிகாரி வந்து அந்த பெண்மனியை சமரசம் செய்து கொண்டிருந்தார்.அதை கண்டவுடன் அழைப்பை ஏற்காது அவரிடம் சென்று உறையாட சென்றான்.மற்ற காவலர் ஒருவர் வேடிக்கை பார்த்து கொணடிருந்த சித்தனை அடித்து விரட்டி விட சித்தனும் அடிவாங்கி கொண்டு வந்து மூட்டையை தூக்கி செல்கின்றான்.

     சார் கொழந்த……………………………………………….……………….(ராஜா)

     நாங்களும் தேடிட்டுதான் இருக்கோ

     கொஞ்சொ டைம் கொடுங்க……………………….(காவலர்)

சித்தன் நடந்து தெருவை திரும்பினான் அப்பொழுது அவனை கண்ட நாய்கள் குறைக்க ஆரம்பித்தன.

     லொள் லொள் லொள்…………………………………….(நாய்கள்)

அந்த சத்தத்தில் விழித்த குழந்தை அழுகின்றாள்.

     ஆ…….அக்ஞா….அக்ஞா……………………………………………….(குழந்தை)

நாய்களை அங்கிருந்தவர்கள் விரட்டியடிக்க அவைகளும் பயந்து ஓடின இதனால் குழந்தையின் அழுகுரல் கேட்ட ராஜா சுதாரித்து கொண்டு ஓடி தெருவை திரும்பி பார்க்கின்றான்.பின்னால் காவலர்களும் ஓடி வந்தனர்.ராஜா அந்த காட்சியை கண்டதும் ஏமாற்றம் அடைந்தான்.அங்கே வேறோரு குழந்தை அழுது கொண்டிருக்க.அதை கொஞசி கொண்டிருக்கின்றார்

     என்ன சார் என்னாச்சி…………………………………………(காவலர்)

     ஒன்னுல்ல சார் கொழந்த அழுற

     சத்தம் கேட்டுது அதான்…………………………………..(ராஜா)

என்று கூறிவிட்டு அழுத அந்த குழந்தையை வருடிவிட்டு சென்றான்.பத்தடி தூரத்தில் ஒரு மூடிய கடையின் வெளியில் சித்தன் கீழே அமர்ந்து கொண்டு குழந்தை மகதி கையில் நெகிழி பையை கொடுத்து விளையாட்டு காட்டி கொண்டிருக்கின்றான்.அதை கண்ட குழந்தை சிரிக்கின்றது.வற்றிய ஆற்றின் நிலைப்போல் அழுது அழுது வற்றி கண்ணீரில்லாது அழுத தடத்தோடு வீங்கிய முகத்தோடு மூலையில் அமர்ந்து கொண்டிருக்கின்றாள் லாவண்யா.அப்பொழுது நுழைவாயில் மணியடிக்க கன்றுவை பார்க்க ஓடும் பசுவாய் ஓடுகின்றாள்.எதிரே வந்த சாந்தியை முட்டி மோதி கதவை திறக்கின்றாள்.திறந்தவள் குழந்தையில்லாது நின்ற ராஜாவை பார்த்ததும் நிலைகுலைந்து அங்கையே சரிந்து விழுகின்றாள்.நிலை குலைந்த அவளை பாய்ந்து சென்று லாவகமாய் பிடித்து பக்குவமாய் நீள்விருக்கையில் படுக்கவைத்து அவளுக்கு தன் மடியை தலையணையாய் கொடுத்து தேம்பியளை தேற்றி தேம்புகின்றான்.தேம்பியவளுக்கும் தேற்றி தேம்பியவனுக்கும் இப்பொழுது புரிந்திருக்கும் குழந்தை மகதியின் ஏக்கம்.

.இனிவரும் அத்தியாத்தில் இவர்களின் ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளியிட முயல்கிறேன்.முடியுமாயென்று காண்போம்  


Rate this content
Log in