Raja SaRa

Drama Romance

4.5  

Raja SaRa

Drama Romance

சாலையோர காதல்

சாலையோர காதல்

2 mins
905


                                           

                                               காதல் மனங்கமழும் அடர்த்தியான இருள் சூழ்ந்த அழகிய நிலவில்லா இரவு.சாலையோரத்தில் சேர்வதற்கு இடமில்லாது இருந்தும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, சேர்ந்து வாழ ஆரம்பிக்கும் முதல் இரவு.முத்து,லஷ்மி அவர்களிருவரும்தான் நம் கதையின் நாயகன்,நாயகி.முத்து பெயருகேற்ப அன்பில் முத்தானவன் தன் அன்பிற்குரியவளான மனைவிக்கு மட்டும். 

லஷ்மி இறைவன் கலைத்துவமாய் செதுக்கிய கலையான கருமை நியமுடையவள்.முச்சு காற்றை பகிருமளவிற்கு இறுக கட்டியணைத்து கொண்டிருந்த முத்து தன் மனைவியின் நாவல்பழ இதழில் இதழிட மெதுவாய் முற்பட அதை லஷ்மியும் இதமாய் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க.அந்நேரம் மகிழுந்து ஒன்று இருளை கிழித்துக்கொண்டு ஒலி ஒளியை எழுப்பயபடியே மின்னல் வேகத்தில் சென்றது.அதனால் இணைந்திருந்த இருவரும் ஒரே துருவ காந்தமாய் விலகிபடுத்தனர்.இதனால் முத்து சலித்து கொண்டான்.

         ம்ச்ச---(முத்து)

இதனைகண்ட லஷ்மி தன் நாவல் இதழை விரித்து பற்முத்துக்களால் புன்னகையை சிறகடித்தாள்.

        ம்ம்ம்ம்ம்ம்—(லஷ்மி)

        எதுக்கு சிரிச்ச---(முத்து)

        ம் சும்மாதான்----(லஷ்மி)

        ஏ பொய் சொல்லாதடி-----(முத்து)

        மாமா சும்மாதான்டா----(லஷ்மி)

அவ்வாறு கூறி திரும்பி ஒருக்கலித்து படுக்க அப்பொழுது முத்து அவளை பின்புறமாக கட்டியணைக்க முற்பட மீண்டும் அவனுக்கு தொல்லை கொடுக்கும் விதமாய் இரு சக்கர வாகனத்தின் வெளிச்சம் வர அணைக்க எடுத்த கையை தனக்காய் இழுத்து கொண்டான்.

        இதுக்கு கை அங்கையே இருந்திருக்கலாம்----(லஷ்மி)

அவமானப்பட்டவன் ஒடனே இழுத்து அனைத்து கொண்டான்.

         மாமா ஹாஹாஹாஹாஹாஹ-(லஷ்மி)

சிறு நாழிகை கழித்து

         பொண்டாட்டி----(முத்து)

         ம்---(லஷ்மி)

         புஜ்ஜிமா—(முத்து)

         ம்----(லஷ்மி)

       என்ன----(முத்து)

        உன்ன----(லஷ்மி)

        ஒனக்கு எவ்ளோ புடிக்கும்---(முத்து)

        எனக்கா---------(லஷ்மி)

அவ்வாறு கூறி அவன் முகத்திசையில் திரும்பியவள்

        ம்ம்ம்ம்-----(லஷ்மி)

        என்னடி யோசிக்குற? நீ யோசிக்குறத பாத்தா

        என்னய ஒனக்கு ----(முத்து)

        புடிக்காதுன்ற-------(லஷ்மி)

        அப்படில----(முத்து)

        ஒழுங்கா கையெடுத்துடு----(லஷ்மி)

கோபங்கொண்டவள் அவளின் முதுகை காட்டியவாறு திரும்பி படுத்து கொண்டாள்

         ஏய் இப்போ எதுக்கு கோச்சிக்குன ---(முத்து)

         பின்ன புடிக்காமதா மேரேஜ் பன்னிக்குனாங்களாமா---(லஷ்மி)

         ப்ராமிசாவா-----(முத்து)

         என்னடா என்ன கோவப்படுத்தி பாக்குறியா---(லஷ்மி)

அவ்வாறு கூறியவளை முன்பைவிட இறுக கட்டி கொண்டான்

         புஜ்ஜிமா---(முத்து)

         இப்போ ன்னா----(லஷ்மி)

         இல்லடி எனக்கு கொய்ந்த பொண்ணா

         வேணும்----(முத்து)

         ஏ மாமா---(லஷ்மி)

         அம்மாவ பாக்கனும்----(முத்து)

          கண்டிப்பா ஒனக்கு ஓ அம்மா கெடப்பாங்க

         நீ ஃபீலிங்க்ஸ் பன்னாதா ஆனா இப்படியே

         இருந்தா------(லஷ்மி)

அவ்வாறு லஷ்மி சொன்னதும் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் அவளின் வட்டமுகத்தை மெதுவாய் திருப்பி அவளின் நாணத்தை ரசித்து அவளின் ஆடும் கேசியை ஒதுக்கி நாவல்காரியின் இதழில் முத்தமிட முற்பட., அப்பொழுது மழையானவள் அழையா விருந்தாளியாய் அங்கே வந்தாள்.அப்பொழுது தேனிக்கூட்டங்களைப்போல் அங்கே உறங்கி கொண்டிருந்த அனைவரும் நான்கு பக்கங்களிலும் ஓடி அங்கேயங்கே மறைவாய் நின்றனர்.அவர்களுடனும் முது்துவும் லஷ்மியும் இருந்தனர்.நின்றுயிருந்த இருவரும் வானத்தை பார்த்து பின் ஒருவரையொருவர் முகத்தை பார்த்து புன்னகைத்து கொண்டனர்.

         ஹாஹாஹாஹாஹாஹா-------(இருவரும்)

இவர்களின் புன்னகையோடு நாமும் புன்னகைத்து செல்வோம்.


இத்தனை நாட்களாக கதையை எழுதாதற்கு மன்னியுங்கள்.,வேலை பளு காரணங்களால் எழுதமுடியவில்லை.,இனி வரும் காலங்களில் எழுதுகிறேன்


Rate this content
Log in

Similar tamil story from Drama