இந்தியன்
இந்தியன்


அப்பாவிற்கு இரு பிள்ளைகள்.
விவசாயம் செய்து பிள்ளைகள் இருவரையும் நன்றாகப் படிக்க வைத்தார். ஆனால் ஒரு பையனோ வெளிநாடுகளுக்கு மூலிகை ஏற்றுமதி செய்து பணத்தை விடாமல் வசூல் செய்த பணக்காரன் ஆகிக்கொண்டிருந்தான். மற்றொரு பையனோ யார் எது கேட்டாலும் தந்துகொண்டு அப்பாவுடன் இருந்தான். பிரச்னை சொத்து விஷயத்தில் எழுந்தது.
அப்பா உடனே, மகனே! நீ என்னுடன் இருக்கவேண்டும் என்றால் என்னைப் பார்த்துக்கொள்ளவேண்டும். அப்படி முடியவில்லை என்றால் மாதம் இவ்வளவு என பணம் தரவேண்டும் என கெடுபிடி செய்தார். பிள்ளையோ கிராமத்தில் உள்ள நாட்டாமையிடம் முறையிட்டார்.
நாட்டாமை இரு பிள்ளைகளையும் ஒன்றாக அருகில் உட்கார வைத்தார். இருவரையும் ஒன்றாகப் படிக்க வைத்த தந்தையின் அருகில் யார் இருக்கப் போகிறீர்கள்? என்றார். இளையவன் தான்
அப்பாவைக் கடைசி காலம்வரை தூக்கி சுமப்பதாக உறுதி கூறினான். உடனே நான்கு வீடுகளில் ஒன்றை அவனுக்கு நாட்டாமை கொடுத்தார். அப்படி வாக்கு தவறும் பட்சத்தில் வீடு பறிமுதல் செய்யப்படும் எனக் கூறினார்.
அடுத்தபடியாக தொழிலில் யார் தகப்பனுக்கு யார் அதிகமாக உதவி செய்தது எனக்கேட்கவே பெரியவன்தான் என இளையவன் கூறவே மீதமுள்ள வீட்டில் இரு வீட்டை பெரியவனுக்கு அளித்தார். இந்த இரு வீடுகளிலும் சிறியவனுக்கு எந்த பங்கும் கிடையாது என்று என எழுதி வாங்கினார்.
இருக்கும் ஒரு வீட்டில் பெரியவரைக் கடைசிகாலம் வரை இருக்குமாறும், ஒரு பாதியை வாடகைக்கு விட்டு வரி கட்ட ஏற்பாடும் செய்து கொடுக்க ஆணையிட்டார். அவரது காலத்திற்குப் பின் அந்த வீட்டை பள்ளிக்கூடத்திற்கு தந்துவிடுமாறு தீர்ப்பு சொல்லியதும் ஊரே நாட்டாமையைப் பாராட்டியது.