இந்தியா இப்படித்தான்!
இந்தியா இப்படித்தான்!


எப்ப பார்த்தாலும் ஏண்டா மொபைலை தொட்டுப் பார்த்துக்கொண்டே இருக்கே?
அதுல நிறைய ஆப் இருக்குடா...அதுல என் பாங்க் டீடெயில்ஸ் எல்லாம் இருக்குடா...இன்னைக்கு அம்மாவுக்கு கண் ஆபரேஷன்.
அதுதான் அம்மா அவங்க மொபைலை என்கிட்டே கொடுத்துட்டாங்கடா! மிஸ்கிட்டே சொல்லாதடா!
ஏன் அவங்ககிட்டே கொடுத்து வச்சுக்கோங்கன்னு நீ சொல்லி இருக்கலாம் இல்லையா?
இப்ப இருக்கிற மிஸ்செல்லாம் யோக்கியமா இருக்கிறது இல்லைடா! பயமா இருக்கு...என் குடும்ப விஷயங்கள் அனைத்தும் என் மொபைலில் இருக்கும்போது வருடாவருடம் வரும் புது மிஸ்சை நம்பி எப்படிடா ஒப்படைப்பது?
நான் பள்ளித்துறை அதிகாரியாக இருந்தால் இனி தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறந்த பட்சம் ஏழு வருடங்களாவது ஒரே பள்ளியில் இருக்கவேண்டும் என சட்டம்போடுவேன்.
போடா! மலிந்த விலையில் மிஸ்சைப் பிடித்து வியாபாரம் பார்க்கும் பள்ளிகள் இருக்கும்வரை நமக்கு விடிவுகாலம்னு ஒண்ணு இருக்கா என்ன! எத்தனை பாடங்கள் மாற்றினாலும் ஆசிரியர்களும்,கல்வியை விற்கும் வியாபாரிகளும் மாறாதவரை இந்தியா இப்படித்தான்!