ஃப்ளாட்போதை
ஃப்ளாட்போதை


பத்துவீடு வாங்கினீங்களே!
எதாவது தனி வீடா இருக்கா? எல்லாம் ஃப்ளாட்போதை மயக்கம்.
கட்ட சோம்பேறித்தனப்பட்டு அப்படியே வர்றதை எல்லாம் வாங்கிப் போட்டாச்சு!
ஒவ்வொரு ஃப்ளாட்டுலயும் ஒவ்வொரு பிரச்னை.
பில்டர் கட்டுன சொதப்பல்வேற……இடமே விடாமல் கட்டிட்டு இப்ப பாருங்க! தண்ணிக்கு அல்லாட வேண்டி இருக்கு……..
உனக்கு வேணும்னா அவுட்சிட்டியில் தண்ணி இருக்கற இடமா வாங்கிடலாமா விசாலம்….கேட்டார் எழுபது வயது வேதாசலம்.
உங்க வீட்டு ஆசை போதையில இப்ப பாருங்க! கையில் பணமே இல்லை..வட்டிக்கு போட்ட பணத்துக்கு மேலே செலவாகுது..தண்ணிக்கே நிறைய தர்றோம். அவுட்ஆஃப்சிட்டிக்கு போறதுன்னாகூட இரண்டு வீட்டை விற்கணும். உங்க வயசு ஓடறதுக்கு முடியுமா?
இந்த ஃப்ளாட்டுல பாதி குடித்தனம் லோன் போட்டு வாங்கினவங்கதான்.
தண்ணீர் அதிக ஆழம்போட்டு ஃபில்டர்போட்டா தண்ணீர் வரும்னு சொல்றாங்க..பாதி பேர்கிட்டே பணம் இல்லை.
பணம்னு கேட்டாலே கதவைச் சார்த்திக்கிறாங்க….
சே! பேசாமல் பழையபடி தனிவீடாகவே இருந்திருக்கலாம்.பிள்ளைகளுக்குப் பிரிச்சுக் கொடுத்துட்டு இப்ப தவிக்கிறோம்.
இந்த வீடுபோதை மனுஷன்ல பாதிக்கும்மேலே இருக்கு! இது குறைஞ்சாத்தான் தண்ணீர்பற்றாக்குறை சரியாகும்!ஒரு தெருவுக்கு இருபது குடித்தனம்னு அரசு சட்டம் கொண்டுவந்தால்தான் இனி சரிப்படும் என்றாள் விசாலம்.