Arul Prakash

Drama

2.7  

Arul Prakash

Drama

எவ்வுருவமும் அழகே

எவ்வுருவமும் அழகே

9 mins
344


ஒரு வீட்ல, அம்மா, அப்பா, ஒரு பொண்ணு பேரு ரம்யா, ஒரு பையன் பேரு ஜீத்து. ரம்யாவும், ஜீத்துவும் அக்கா தம்பி. ரம்யா 12th std படிக்குறா, ஜீத்து 10th std படிக்கிறான். ரெண்டு பேரும் வேற வேற ஸ்கூல்ல படிக்குறாங்க.


ஒரு நாள் ஜீத்து ஸ்கூல் முடிச்சி வீட்டுக்கு வந்துட்டான். ரம்யா அப்ப தான் வீட்டுக்குள்ள வரா.


ஜீத்து : என்ன ரம்யா இன்னைக்கு எப்படி போச்சி ஸ்கூல்.


ரம்யா : நல்லா தான் டா போச்சி.


ஜீத்து : உன்னோட record note நான் தான பாதி எழுதி கொடுத்தேன், உங்க சார் கண்டு பிடிச்சாரா?


ரம்யா : இல்ல டா நீ தான் அப்படியே என் கையெழுத்து போல எழுதி இருந்தியே.எப்படி டா என்னோட கையெழுத்த அப்படியே எழுதுற


ஜீத்து : அதுவா கண்ண மூடிக்கிட்டு விருப்பமே இல்லாம கிறுக்குனா உன் கையெழுத்து வந்துட போகுது.


ரம்யா : போடா.


ஜீத்து : சரி வந்த உடனே எதோ தின் பண்டம் தின்ற மாதிரி தெரியுது, எனக்கும் கொஞ்சம் தரது. நான் உன் record note லாம் எழுதி கொடுத்து இருக்கேன்ல 


ramya: போடா, அம்மா உனக்கு கொடுத்த லட்டு எங்க.


ஜீத்து : ஹே குண்டம்மா, கொஞ்சம் கொடுத்தா கொறஞ்சுடிவியா, உனக்கு மட்டும் 10 லட்டு,எனக்கு 5 லட்டா. எனக்கு மட்டும் ஓரவஞ்சனை இந்த வீட்ல.


ரம்யா : டேய் நான் நிறைய சாப்புடுவேன், அதனால தான்.


ஜீத்து : அதுல வேற பெருமை, உன் வெயிட் என்ன 120 இல்ல 130.


ramya: டேய் 110 தான்.


ஜீத்து : ரொம்ப கம்மியா இருக்கு, அப்பறம் இந்த பையன் பாக்கல, அந்த பையன் பாக்கலனு பொலம்புறது.


ரம்யா : நான் ஒன்னும் அப்புடி சொல்லல, இன்னைக்கு கூட என்ன ஒரு பையன் பாத்தான் தெரியுமா.


ஜீத்து : அம்மாடியோ இந்த பொண்ணு என்ன இவளோ குண்டா இருக்குனு பாத்து இருப்பான்.


ரம்யா : டேய் நீ வேணா என் பிரிஎண்ட் சம்யுக்தாவ கேளு .


ஜீத்து : அவளா, உன் கிளாஸ்லயே அவ தான் சுமார் மூஞ்சி குமாரு, அவ பக்கத்துல நின்னா தான் நீயே கொஞ்சம் அழகா தெரியுவனு அவளை கூட வச்சினு சுத்துற, அவ கிட்ட போய், ஏம்மா என் அக்காவை எதோ ஒரு பையன் பாத்தானாமேனு கேட்கவ முடியும்.


ரம்யா : நான் fat தான் பட் cute.


ஜீத்து : ஐயோ இது என்ன ஹமாம் விளம்பர ஸ்லோகன் மாதிரி. சரி இருந்துட்டு போ.


ஜீத்து அவங்க அம்மாவோட போன் நொண்டி கிட்டே ரம்யா கிட்ட பேசிட்டு இருக்கான். ரம்யா அவன்கிட்ட இருந்த போன புடுங்கி பாக்குறா.


ரம்யா : டேய் என்ன டா எதோ ஒரு பையன், உன்ன,டூ யூ லவ் மீ னு கேட்டு இருக்கான்.


ஜீத்து : அது பையன் இல்ல பொண்ணு பையன் பேர போட்டு சேவ் பண்ணிருக்கேன்.


ரம்யா : டேய் பத்தாவதுலயேவடா.


ஜீத்து : நீ மட்டும் பத்தாவதுல, ராம சைட் அடிக்க அவங்க வீட்டு பக்கம் போய்ட்டு வருவல.


ரம்யா : டேய் மெதுவாடா அம்மாக்கு கேட்டிட போகுது, ஆமா அது எப்படி உனக்கு தெரியும்.


ஜீத்து : எல்லாம் யாம் அறிவோம்.


ஜீத்து அம்மா : டேய் ரெண்டு பேரும் போய் படிங்க, தினமும் வந்த உடனே அப்படி என்ன தான் பேசுவீங்களோ.


ஜீத்து : அம்மா கொஞ்சம் நேரம் மா.


ரம்யா to ஜீத்து : டேய் எப்போ உனக்கு ஸ்கூல் கிரிக்கெட் மேட்ச்.


ஜீத்து : நாளைக்கு தான், ரெண்டு நாள் கழிச்சு தான், வீட்டுக்கு வருவேன்.


ரம்யா : ரெண்டு நாளா, உன்ன மிஸ் பண்ண போறேன் டா. சரி மேட்ச் வின் பண்ணிட்டு வா.


ஜீத்து : சரி.


ரெண்டு நாள் கழிச்சு, ஜீத்து மேட்ச் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டான்.


ஜீத்து to ஜீத்து அம்மா : மா, நான் கொஞ்சம் நேரம் தூங்குறேன், ரம்யா வந்தா எழுப்பு.


ஜீத்து அம்மா :அவ வந்தா, நேரா உன்ன தான் வந்து எழுப்புவா.


ஜீத்து கொஞ்சம் நேரம் கழிச்சி எழுந்து வரான்.


ஜீத்து to ஜீத்து அம்மா : மா ரம்யா வரல.


ஜீத்து அம்மா : வந்தா,கோபமா உர்ருனு இருக்க, என்னனு தெரியல.


ஜீத்து to ரம்யா : ஹே குண்டம்மா.


ரம்யா : குண்டம்மானு கூப்பிடாத.


ஜீத்து : குண்டம்மா, குண்டம்மா.


ரம்யா பட்டுனு கோபமா எழுந்து ஜீத்துவ அறைஞ்சிடுறா. ஜீத்து கண் கலங்கிடுரான். ஜீத்து அம்மா, ஜீத்துவ சமாதானம் படுத்துறாங்க, ரம்யாவை திட்டுறாங்க.


ஸ்கூல்ல என்னமோ நடந்து இருக்கணும்னு, ரம்யாவோட பிரிஎண்ட் சம்யுக்தாவுக்கு போன் பண்ணி பேசுறான்.


ஜீத்து to சம்யுக்தா : நான் ஜீத்து பேசுற


சம்யுக்தா : சொல்ற, எப்படி இருக்க.


ஜீத்து : அத விடு, ஏன் ரம்யா ஒரு மாதிரி இருக்கா. ஸ்கூல்ல எதுனா ஆச்சா.


சம்யுக்தா : உன் கிட்ட எப்படி டா சொல்றது.


ஜீத்து : நான் அவளுக்கு பிரிஎண்ட் போலன்னு உனக்கு தெரியும்ல, தைரியமா சொல்லு.


சம்யுக்தா : இல்ல டா அவ எங்க கிளாஸ் பையன் ஒருத்தன லவ் பண்ரா.


ஜீத்து : எனக்கு தெரியமவா


சம்யுக்தா : நீ கிண்டல் பண்ணுவனு உன்கிட்ட சொல்லல.


ஜீத்து : சரி, அதுனால இப்ப என்ன ஆச்சி.


சம்யுக்தா : இன்னைக்கு அவன லவ் பண்றனு சொல்லிட்டா. அவன்,குண்டம்மாக்கு என் மேல லவ்வாம்னு கிளாஸ் முழுக்க சொல்லி கிண்டல் பண்ணிட்டான், கிளாஸ்ல எல்லாரும் ரொம்ப சிரிச்சிட்டாங்க. அது மட்டும் இல்ல,உன்ன எந்த ஆம்பள பையனும் லவ் பண்ண மாட்டான், நல்ல பொண்ணா பாத்து லவ் பண்ணுனு சொல்லிட்டான்.


ஜீத்து : அவன் பேரு என்ன, அவன எங்க பாக்க முடியும்.


சம்யுக்தா : அவன் பேரு வம்சி, ஸ்கூல் எதிர்க்க இருக்க டீ கடைல, திருட்டு தம் அடிச்சிட்டு இருப்பான். அப்பறம் அவன்.


(பேசிட்டு இருக்கும் போதே சம்யுக்தா போன் பேட்டரி ஆப் ஆயிடுது).



ஜீத்து அவன் ஏரியா பிரிஎண்ட்ஸ் 4 பேர கூட்டிட்டு போய், ரம்யாவ கிண்டல் பண்ணதுக்கு வம்சியை டீ kadaiல வச்சி அடிச்சுடுறான்.


ஜீத்து வீட்டுக்கு போறான், இன்னும் ரம்யா கோபமா இருக்கறத பாத்துட்டு போய், தூங்கிடுறான் 


ஜீத்து, ரம்யா, ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு போயிடுறாங்க.


ரம்யா ஸ்கூல்ல இருந்து அவ வீட்டுக்கு போன் வருது, உடனே ஸ்கூலுக்கு வாங்கனு.


ரம்யா அம்மாவும் அப்பாவும் ஸ்கூலுக்கு போறாங்க.


ஸ்கூல் பிரின்சிபால் to ரம்யா அப்பா : உங்க பொண்ணு ஸ்கூல்ல ஒரு பையன லவ் பண்றனு சொல்லி இருக்கா, முடியாதுனு சொன்ன அந்த பையன, அவ தம்பி விட்டு ஆள் வச்சி அடிச்சி இருக்கா.


ரம்யா அப்பா : மேடம் இத பத்தி எங்களுக்கு எதும் தெரியாது, நான் ரெண்டு பேரையும் கண்டிக்குறேன். இந்த முறை விட்டுடுங்க.


ஸ்கூல் பிரின்சிபால் : அந்த பையனோட அப்பா ஒரு MLA , போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் கொடுத்துடாரு. நீங்க அவர் கிட்ட பேசிகொங்க.


ஜீத்துவ போலீஸ் புடிச்சிடுது, ரம்யாவோட அப்பா, MLA கால்ல விழுந்து கேஸ் போடாம ஜீத்துவ வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. MLA பையன,ஒரு பொண்ணு லவ் பண்ணலனு,ஆள் வச்சி அடிச்சிட்டானு நியூஸ் சேனல்லலாம் வந்துடிச்சி. இந்த குண்டு பொண்ணுக்கு திமிர பாத்தியானு எல்லாரும் பேச ஆரமிச்சிட்டாங்க.


வீட்டு பக்கத்துல இருக்கவங்க எல்லாம், ஒரு மாதிரி ரம்யாவ பேச அரமிச்சிட்டாங்க. அதுனால ஒரு வாரமா அவ ஸ்கூலுக்கு போகல.


ஜீத்துவோட பிரிஎண்ட் செந்தில், அவன தேடி வீட்டுக்கு வரான். ரெண்டு பேரும் வீட்டுக்கு வெளில இருக்க மரத்தடி கீழ உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க.


செந்தில் : டேய் எதோ உங்க அக்கா பிரச்னை பத்தி ஏரியால பேசுறாங்க.


ஜீத்து : உனக்கே தெரிஞ்சி இருக்கணுமே


செந்தில் : இருந்தாலும் நீ சொல்லுவியேனு பாத்தேன், ஆமா யாரை கூட்டிட்டு போய் அடிச்ச.


ஜீத்து : ரிஷி அண்ணா வோட பிரிண்ட்ஸ கூட்டிட்டு போனேன்.


செந்தில் :MLA பையனவே அடிச்சிட்டியே டா.


ஜீத்து : நீயும் வேற ஏன்டா, அவன் MLA பையன்னு அப்ப எனக்கு தெரியாது.


செந்தில் : வீட்ல நிலவரம் எப்படி


ஜீத்து : நிலவரம், கலவரம் தான். அம்மா மட்டும் தான் என்கிட்டே பேசுறாங்க. அப்பா நேரம் கிடைக்கறப்போலாம் அடிக்க வராரு. MLA கால்ல விழுந்தாருள, அந்த கோபம் அவருக்கு. 


செந்தில் : ரம்யா பேசுறது இல்லையா 


ஜீத்து : இன்னும் இல்லை டா. என்னுள்ள பாதி இல்லாத மாதிரி இருக்கு, அவ பேசாதது.


செந்தில் : டேய் வருத்த படாத விடு. சரி ஆயிடும். அப்பரும் வந்து பாக்குறேன்.


MLA பையன் ரம்யா மேல இருந்த கோபத்துல meme creatorskku காசு கொடுத்து ரம்யாவ கலாய்க்க சொல்லி மீம்ஸ் உருவாக்கிட்டான். சென்னைல ட்ரெண்டிங் வேற ஆகிடிச்சி.


மீம்ஸ் மேட்டர் தெரிஞ்ச உடனே ஜீத்து வீட்ல பதட்டம், ரம்யா எதாச்சி பண்ணிக்க போறான்னு கவனமா பாத்துக்கிட்டாங்க. மீம்ஸ் மேட்டர்காக ஜீத்துவ வெளுத்து வாங்குனாரு அவங்க அப்பா.


ரெண்டு நாள் கழித்து செந்தில் ஜீத்துவ பாக்க வந்தான்.


செந்தில் : என்ன டா மீம்ஸ் லாம் போட்டுட்டான் அந்த பையன்.


ஜீத்து : ஆமா டா. அதுக்கும் எங்க அப்பா என்ன தான் அடிச்சாரு. MLA பையனா போய்ட்டான், அவன எதுனா பண்ணனும் போல இருக்கு.


செந்தில் : நீ என்ன டா கொலவெறில இருக்க.


ஜீத்து : உருவ கேலி பண்ணி மீம்ஸ் போடுறானுங்க. அந்த காசு ஒடம்புல ஒட்டுமா.



ரம்யா தன்ன உருவ கேலி பண்ண, அந்த கோபத்தை படிப்புள்ள காட்டி, ஸ்கூல்ல first, காலேஜ் first, வேலையிலும் first.


7 வருஷம் கழிச்சி


செந்தில்,ஜீத்து வீட்டுக்கு பாக்க வரான், வழக்கம் போல மரத்தடில உட்கார்ந்து பேசிட்டு இருகாங்க.


செந்தில் : என்ன டா இன்னுமா உங்க அக்கா தம்பி சண்டை முடியல.


ஜீத்து : அவ பேசலானாலும் போதும், ஆள விட்டா போதும்னு இருக்கு.


செந்தில் : நீ இப்படி எல்லாம் பேச மாட்டியே, பாசத்தை பொங்குவியே.


ஜீத்து : டேய் என் கனவு என்ன டா


செந்தில் : இப்ப செய்யுற வேலையில வர காச வச்சி, ஒரு பிஸ்னஸ் ஆரம்பிக்கிறது.


ஜீத்து : என்னோட பேங்க் account ல 1500 ரூபா தாண்டா இருக்கு.


செந்தில் : ஏன், நீ சம்பாரிக்கருது எல்லாம் எங்க.


ஜீத்து : ரம்யா தினமும் swiggyல தான் சாப்புடுறா, அதும் என் காசுல.


செந்தில் : உன்கிட்ட தான் அவ பேசமாட்டாளே.


ஜீத்து : அம்மா கிட்ட சொல்லுவா, அவங்க என் கிட்ட சொல்லுவாங்க.


செந்தில் : ரம்யா சம்பாரிக்குறா இல்லை.


ஜீத்து : அத கேட்டா, அவளோ தான், அப்பறம் என்ன எதுக்கு பெத்து வளர்த்திங்கனு கரகம் ஆடுவா.


செந்தில் : ஐயோ


ஜீத்து : அப்பாவும் சம்பாதிர்கத்து இல்ல. ரம்யா ஆன்லைன் ஷாப்பிங் பண்றது எல்லாத்துக்கும் நான் தான் காசு கொடுக்கணும் cash on delivery. 


செந்தில் : அப்ப கூட பேசுறது இல்லையா.


ஜீத்து : பேசுறது இல்லையா,7 வருஷமா நான் எப்படி இருப்பேன்னு கூட பாத்தது இல்ல. எனக்கு மீசை தாடி வந்தது கூட அவளுக்கு தெரியுமான்னு தெரியல டா. எது நடந்தாலும் first அவகிட்ட தான் சொல்லுவேன் முதல எல்லாம்.


செந்தில் : சரி விடு மச்சி. எல்லாம் சரியாகுற காலம் வரும். சரி டா ஏன் அவ உடம்பு குறைக்காம இருக்கா.


ஜீத்து : என்னை இப்படியே புடிச்சா போதும். நான் யாருக்காகவும் உடம்பு குறைக்க மாட்டேன்னு வசனம் அடிப்பா.


செந்தில் : சரி எப்போ அவளுக்கு கல்யாணம்.


ஜீத்து : இப்ப தான் தோணுது, ஏன் நீயே அவளை கல்யாணம் பண்ணிக்க கூடாது.


செந்தில் : டேய் பிரிஎண்ட் சகோதரி நம்ம சகோதரி இல்லையா.


ஜீத்து : டேய் நடிக்காத, நம்ம பிரிஎண்ட் வாசு தங்கச்சிய நீ எப்படி வெறிக்க வெறிக்க பார்ப்பன்னு தெரியும்.


செந்தில் : அது வேறு, இது வேறு.


ஜீத்து : சும்மா தான் கேட்டேன் தப்பா நினைச்சிகாத.


செந்தில் : டேய் உன்ன பத்தி எனக்கு தெரியாதா, நாளைக்கு வரேன். இப்ப கிளம்புறேன்.


ஜீத்து வீட்டுக்குள்ள போறான்.


ஜீத்து அம்மா to ஜீத்து : டேய் ஜீத்து, உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.


ஜீத்து : சொல்லு மா.


ஜீத்து அம்மா : டேய் ரம்யா தினமும், நைட் 7 மணிக்கு கேட் கிட்ட நிக்குறா, நீ கவனிக்கிறீயா.


ஜீத்து : இல்ல மா, ஏன்.


ஜீத்து அம்மா : அந்த டைம், ஒரு பையன் போறான், அவன இவளுக்கு பிடிச்சிருக்கு போல டா. அவனையே பாக்குறா தினமும்.


ஜீத்து : அப்படியா, நாளைக்கு அதே நேரம், நான் செக் பண்றன்.


அடுத்த நாள் நைட் 7 மணிக்கு, ஜீத்து செக் பன்றான், அதே போல ரம்யா அந்த பையன் பாக்குறானு முடிவு ஆகிடுச்சு.


செந்தில் ஜீத்து வீட்டுக்கு வரான்.


செந்தில் : என்ன டா வர சொல்லி இருந்த.


ஜீத்து : டேய் ரம்யாக்கு ஒரு பையன புடிச்சிருக்கு டா, தினமும் 7 மணிக்கு அந்த பையன பாக்க கேட் கிட்ட நின்னுடுறா.


செந்தில் : டேய் சும்மா பாத்து இருப்பா டா.


ஜீத்து : இல்ல அம்மாக்கு தெரிஞ்சே ஒரு மாசமா இது நடக்குது.


செந்தில் : சரி, இப்ப அதுக்கு என்ன பண்ணலாம்.


ஜீத்து : நான் அந்த பையன் கிட்ட பேசலாம்னு இருக்கேன்.


செந்தில் : உனக்கு ஏன் இந்த தேவ இல்லாத வேல. ஏற்கனவே நீ பண்ண நல்லதுல தான் நீயும் ரம்யாவும் பேசாம இருக்கிங்க.


ஜீத்து : இந்த வாட்டி ஏன் தப்ப சரி செய்ய ஒரு வாய்ப்பா இருக்கா கூடாது.


செந்தில் : சரி பையன் வீடு எங்கனு தெரியுமா.


ஜீத்து : தெரியும் டா. விசாரிச்சேன். பக்கத்துல இருக்க appartmentல தான் தங்கி இருக்கானாம். பேரு விஷால் 


செந்தில் : எனக்கு என்னமோ பயமா இருக்கு டா. நான் appartment கீழ இருக்கேன், நீ போய் பாத்துட்டு வா.


ஜீத்து : சரி.



அப்பார்ட்மெண்ட்க்கு வந்துட்டாங்க ஜீத்துவும், செந்திலும்.


செந்தில் to ஜீத்து : டேய் வெற்றிகரமா போயிட்டு வா. என்ன எண்ணலாம் திட்டுவாங்குனியோ அதெல்லாம் என்கிட்ட வந்து சொல்லணும்.


.செந்தில் அவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தான்.ஜீத்து, அந்த பையன் விஷால் வீட்டுக்கு போய் 1 hour கழிச்சி வந்தான்


செந்தில் to ஜீத்து : என்னடா சிரிச்சா மாதிரி வர, திட்டுவாங்கனத மறைக்க தான.


ஜீத்து : விஷால், ரம்யாவ கல்யாண பண்ணிக்க ஒத்துக்கிட்டான்.


செந்தில் : என்ன டா சொல்ற.


ஜீத்து : ஆமா. ஆனா அவன் தங்கச்சிய நான் கல்யாணம் பண்ணிக்கணுமா, அவன் தங்கச்சியும் கொஞ்சம் குண்டா இருப்பாளாம். நான் சரினு சொல்லிட்டேன்.


செந்தில் : ஏன்டா சரினு சொன்ன.


ஜீத்து : டேய் ரம்யாக்கு புடிச்சிருக்கு அந்த பையன், எனக்கும் அவன் தங்கைச்சிய புடிச்சிருக்கு.


செந்தில் : டேய் நீ ரம்யாக்காக உன் லைப்ப கெடுத்துக்காத.


ஜீத்து : எல்லாம் தெரிஞ்சி தான் டா பண்றேன். நான் பாத்துக்கிறேன்.


செந்தில் : எதோ ஒன்னு பண்ணு. பையன் எந்த ஊரு.


ஜீத்து : திருச்சி டா. வேலைக்காக இங்க தங்கி இருக்கான்.


அடுத்த ரெண்டு நாளல்ல விஷால் ரம்யாவ பொண்ணு பாக்க வரான், ரம்யா சந்தோஷத்தில வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறா. ரெண்டு வீட்டுக்கும் நல்லபடியா பேச்சுவார்த்தை நடக்குது. நிச்சியதார்ததுக்கு தேதி குறிக்க ரெண்டு வீட்டுகாரங்களும் டைம் எடுத்துக்கறாங்க.


இதற்கு நடுவுல இந்த கல்யாணம் நடக்கறதுக்கு காரணம் ஜீத்து தான்னு ரம்யாக்கு தெரிஞ்சிடுது. விஷால் தங்கச்சிய ஜீத்து கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதுக்காக தான் ரம்யாக்கு கல்யாணம் நடக்குதுன்னு அவ தெரிஞ்சிக்கிறா.


பல வருஷம் கழிச்சி ரம்யா, ஜீத்து கிட்ட பேச போறா.


ரம்யா : டேய் ஜீத்து.


ஜீத்து : என்ன சொல்லு.


ரம்யா : இந்த கல்யாணம் வேணாண்டா. நீ விஷால் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்குறேன் சொல்லி தான் என் கல்யாணம் நடத்துறியாமே. இது வேணாம் டா.


ஜீத்து : எனக்கு அவளை பிடிச்சிருக்கு.


ரம்யா : டேய் நீ எனக்கு கல்யாணம் ஆகணும்னு பொய் சொல்ற. அப்படி பண்ணா உன் லைப்பே போய்டும் டா.


ஜீத்து : என் மேல எவளோ அக்கறை, 8 வருஷமா என் கூட பேசாம இருந்த


ரம்யா : 17 வயசுல என்ன எதோ கேவலமான பொண்ணு மாதிரி வீட்டு கிட்ட இருந்தவங்களாம் பாக்கும்போது, நீ அன்னைக்கி மட்டும், உன் பிரிஎண்ட்ஸ கூட்டிட்டு போய் அடிக்காம இருந்துயிருந்தா, இவளோ அசிங்கம் எனக்கு வந்து இருக்காதுன்னு எனக்கு கோபம் டா. இப்போ நீ இவளோ தூரம் எனக்கு பண்ண எறங்கிட்டியோ , நான் இவளோ நாள் பேசாம இருந்தது எவளோ தப்புனு தெரிஞ்சிகிட்டேன்.



எதர்ச்சியா விஷாலும் அவனோட தங்கச்சி ஷாமாவும் ஜீத்து வீட்டுக்கு வராங்க.


ரம்யா to விஷால் : விஷால் இந்த கல்யாணம் வேணாம்.


விஷால் : ஏன்.


ரம்யா : நீ உன் தங்கச்சிக்காக என்ன கல்யாணம் பண்ணிக்குற, ஜீத்து எனக்காக உன் தங்கச்சிய கல்யாணம் கட்டிக்கிறான்.


விஷால் : எனக்கு உன்ன புடிச்சி தான் கல்யாணம் பண்ணிக்குறேன்.


ஜீத்து : எனக்கும் விஷால் தங்கச்சிய புடிச்சிருக்கு.


ரம்யா : நீங்க ரெண்டு பேரும் தியாகி பட்டம் வாங்க இப்படி பண்ணுறீங்களா.


விஷால் : நிஜமாவே உன்ன எனக்கு புடிச்சி இருக்கு மா.


ரம்யா : அப்படியா சரி,நானும் உங்க தங்கச்சியும் கொஞ்சம் நேரம் என் ரூம் டிஸ்கஸ் பண்ணிட்டு வந்து சொல்றேன் எங்க முடிவ.


கொஞ்சம் நேரம் ரம்யாவும் ஷாமாவும் டிஸ்கஸ் பண்ணிட்டு வராங்க.


ரம்யா to விஷால் : எனக்கு ஆபீஸ்ல USA போறதுக்கு offer வந்து இருக்கு, அங்க ஒரு வருஷம் வேல செஞ்சா நிறைய பணம் கிடைக்கும் அதுனால ஒரு வர்ஷம் கழிச்சி தான் கல்யாணம். ஓகே


விஷால் : எனக்கு ஓகே


ஜீத்து : எனக்கும் ஓகே.


ரம்யா : அப்பறம் என் US ஆபீஸ்ல என் டீம்ல ஒரு வேல காலி இருக்கு, அந்த வேலைக்கு ஷாமாவும் என் கூட வரவா, ஓகே வ.


விஷால் : ஓகே நீயும் ஷாமாவும் ஒரு வர்ஷம் US போகலாம்.


ஒரு வருஷம் கழிச்சி


ரம்யாவும் ஷாமாவும் ஒரு வருஷம் கழிச்சி, இந்தியா வராங்க. ரெண்டு பேரையும் கூட்டிட்டு போக ஏர்போர்ட்க்கு ஜீத்துவும் விஷாலும் வெயிட் பன்றாங்க.


ரம்யாவும் ஷாமாவும் வராங்க, அத பாத்து, ஜீத்துவும் விஷாலும் ஷாக் ஆகுறாங்க, ஏன்னா ரெண்டு பேரும் ஒல்லியாகி வராங்க.


விஷால் to ரம்யா : ஒல்லியாக தான் ரெண்டு பேரும் US போனீங்களா. எப்படி இருந்தாலும் உன்ன நான் கல்யாணம் பண்ணி இருப்பேன்.


ரம்யா : சம்பாரிக்க ஒல்லியாக ரெண்டுக்காகவும் US போனோம். நீங்க எங்களுக்காக இவளோ இறங்கி வரும் போது, நாங்க கொஞ்சம் உடம்ப கொறச்சா தப்பு இல்ல.


ரம்யா to ஜீத்து : சாரி டா. உன் கிட்ட பேசாம ரொம்ப வர்ஷம் கஷ்ட படுத்திட்டேன். எவ்ளோ லேட்டா சாரி சொல்றன் பாரு.


ஜீத்து : சாரி லாம் வேணாம். இப்ப பேசுறதே சந்தோஷம் தான் 


ரம்யா : உன் போன் எடுத்து பாரு 10 லட்சம் கிரெடிட் ஆகி இருக்கும்.


ஜீத்து : எப்படி


ரம்யா : நான் தான் டா போட்டேன், நீ எனக்காக எவ்வளவோ செலவு பண்ணிட்ட, நீ பிஸ்னஸ் ஆரம்பிக்க என்னோட கொஞ்ச காசு. US ல சம்பாரிச்சது.


ஜீத்து : தேங்க்ஸ் 





-------------------------The End ----------------------




































 










Rate this content
Log in

Similar tamil story from Drama