என்று தணியும் இந்த பெண் மோகம்!
என்று தணியும் இந்த பெண் மோகம்!
அவள் பிணத்தைக் கொண்டுபோய் எங்காவது வீசிட்டு வாடா! என குடித்துவிட்டு சாதிவெறியில் கத்திய சுதாகரனைக் குடிசையில் இருந்து பார்த்தபடி இருந்தான் சிவா. தனது மகள் இப்படி சின்னா பின்னமாகி இவன் கையில் சாகவா பிறந்தாள் என்பதை எண்ணியபோது மனதில் இனம் புரியாமல் வலித்தது.
பள்ளிங்கறது கோவில் மாதிரிம்பாங்க! இதில் இவன் கூப்பிடற இடத்துக்கு போறதுக்கா பெண்களை அனுப்புவாங்கப்பா! என மகள் அம்பிகா சொன்னபோது விபரம் புரியாமல் விழித்தான். ஆசிரியர்கள் இருக்கின்ற இடம் கோவில் என்றுதான் அன்றுவரை நினைத்திருந்தான்.
ஆனால் பள்ளி நடத்துற பிரின்சிபாலே இப்படி செஞ்சுட்டானேன்னு சிவாவிற்கு ஆத்திரம் தாங்கவில
்லை. மகள் கடைசியாக உடுத்தியிருந்த உள்ளாடைகள் முள்வேலிகாட்டுக்குள் அந்தரத்தில் தொங்கியபோதே சிவா பயந்துதான் போனான்.
அடுத்து நம்மையும் இவர்கள் இருக்கவிடமாட்டார்கள் என நினைத்து இரவோடு இரவாக மூட்டையைக் கட்டத் தொடங்கினான். மகள் படம் மாட்டியிருந்ததை எடுக்க நினைக்கையில் படம் ஏனோ ஆடியது. பயந்துபோன சிவா அப்படியே உட்கார்ந்து மயக்கமானான்.
மறுநாள் அம்பிகாவின் உள்ளாடைகள் முள்வேலிக்காட்டில் எங்கு கிடந்ததோ அங்கு பிரின்சிபால் பிணமாக இருப்பதாக ஊருக்குள் கத்திக்கொண்டு எதிர்வீட்டு ராஜா ஓடியதை மகிழ்ச்சியுடன் சிவா ரசித்தான். பெட்டியுடன் ஊரை விட்டு தனது பெண் புகைப்படத்துடன் கிளம்பினான்.