Saravanan P

Abstract Drama Inspirational

4.7  

Saravanan P

Abstract Drama Inspirational

என்‌ குடும்பம்

என்‌ குடும்பம்

2 mins
375


சுந்தர் காதில் பிளூடூட் ஹெட்செட் போட்டு ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்து இருந்தான்.

சுந்தர் பஸ்ஸில் அமர்ந்து கடந்து செல்லும் ஒவ்வொரு கடையில் உள்ள போர்ட்டிலும் போடப்பட்டுள்ள ஊர்களின் பெயரை படித்து கொண்டே வந்தான்.

அவன் ஊர் வர உள்ள நேரத்தை தோராயமாக கணக்கிட்டு கொண்டே வந்தான்.

அவன் வீட்டுக்கு போன் கால் செய்து நான் சீக்கிரம் வந்து விடுவேன் என 30 நிமிடத்திற்கு ஒரு முறை பார்த்தான்.

சுந்தர் வெளி மாவட்டத்தில் தங்கி படித்து வந்தான்,அவன் பெற்றோர் நினைவு வந்த போது எல்லாம் அவன் போனிலும்,வீடியோ காலிலும் பேசி விடுவான்.

அவனது அம்மா தான் அவனை ரொம்ப பிரிந்து வருத்தப்பட்ட முதல் நபர் அவன் அம்மா தான்,அவன் ஹாஸ்டல் சேர்ந்த பொழுது கண்ணீர் வடித்த நபரும் அம்மா தான்.


அப்பா அதற்கு கல்நெஞ்சு கொண்டவர் அல்ல,நல்ல மனிதர்,மகனுடன் இரண்டு மூன்று வாக்கியம் பேசினாலும் அவருக்கு போதும்.


அவன் அம்மாவுக்கு தான் எவ்வளவு பேசினாலும் பத்தாது,நாள் ஆக ஆக இருபக்கமும் தனித்து இருக்க பழகி கொண்டனர்.


 சுந்தருக்கு சில நண்பர்கள் கிடைத்தனர்,மொபைல் என்ற இன்னொரு நண்பர் அவனுக்கு இருந்தான்,அதுவே போதும் அவனுக்கு.


அவன் அம்மாவும் டிவி,போன் என பழகினார்கள்.


அவன் அப்பாவும் போன் யூஸ் பண்ண தொடங்கினார்.


அளவுக்கு மீறி நாம் பயன்படுத்தும் நல்ல விஷயமும் கேடு தான் அதுபோல் இவர்கள் தனிமையை போக்க. மொபைல் என ஆரம்பித்து ஒவ்வொருவரும் தனி தனியே அவர்களுக்கு என ஒரு உலகத்தில் வாழ தொடங்கினர்.


சுந்தர் இந்த முறைக்கு முன் ஊருக்கு வந்த போதிலும் தனியே அறைக்கு சென்று இருக்கும் கொஞ்ச நாளும் போனை நொண்டி விட்டு காலேஜ் குடுத்த வேளை தான் வீட்டில் ரெஸ்ட் எடுக்க விடாமல் செய்தது என திட்டி விட்டு செல்வான்.


அவன் அம்மாவும்,அப்பாவும் தனி தனியே போன் வைத்து கொண்டி இருந்தனர்.


இந்த முறை வீட்டிற்கு வந்ததும் போனை அவ்வளவாக தேவையில்லாமல் பயன்படுத்தாமல்,டிவியை ஆப் செய்து வைத்து (அல்லது டிவி சேர்ந்து பார்த்து) குடும்பமே ஒன்றாக நேரம் செலவழித்து மகிழ்ந்தனர்.

சுந்தர் தன் அப்பா,அம்மா தன்னிடம் எவ்வளவு பாசம் வைத்துள்ளனர் என்பதை அந்த பேச்சுகளின் இடையில் உணர்ந்தான்.


அப்பா,அம்மா அதிகபட்சம் எதிர்பார்ப்பது பிள்ளை தங்களிடம் பேசினால் போதும் என்பது தான்,அவர்கள் திட்டும் போது ஏன் திட்டுகீறார்கள் என யோசித்து பாருங்கள்,அது சரியாயிருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்,தவறாக இருந்தால் நீங்களாக சென்று நிதானமாக நிலைமையை விளக்குங்கள்.

அப்பா,அம்மா மனம் நொந்து போனால் அதுவும் பெற்ற பிள்ளையால் அதைவிட பெரிய பாவம் ஒன்றும் இல்லை


Rate this content
Log in

Similar tamil story from Abstract