எங்கே பசுமை?
எங்கே பசுமை?


நாய் விடாது வாலாட்டியபடி இருக்க இருள் அடந்த அந்த இரவிலும் விடாது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தபடி இருந்தாள் சுசீலா. அசோக்பில்லரில் ரோட்டு நாயிடம் இந்தப்பெண் பாக்கெட் பிஸ்கட்டைப்போட்டு படம் எதுக்காக எடுத்தாள் என்ற கேள்வி மனதைக் குடைய ஆரம்பித்தது.
காலையில் இருந்து சாப்பிடாத அவள் தொழில் முறை அவளைச் சலிப்பு கொள்ள வைத்தது. வீடுவீடாகச் சென்று செடி வைத்துக்கொடுக்கும் உத்யோகம் தரப்பட்டிருந்ததைக்கண்டு மனம் சலித்து மானேஜரிடம் கேட்டுப்பார்த்தாள்.
உள்ளேயே வேலை போடுங்களேன்!
நீ சின்னப்பொண்ணு! பட்டுன்னு போனா வீட்டில் பேசுவாங்க..நாலு செடி நட்டுவச்சு கொடுத்தேன்னா காசு....இங்கே உட்கார்ந்து நர்சரியில் ஆபிசில் உட்கார்ந்து செய்ய வயதானவங்க பார்த்துப்பாங்க....
நகரில் தொழிலா இல்லை பிழைக்க என வந்து விட்டாய். இதிலும் உனக்கு குறிப்பிட்ட தொகை வந்துடும்.
சமயத்துல எல்லா வீடும் அடுக்ககங்களா இருக்கு....உள்ளே வந்து வேலை பார்த்து தரவேண்டி இருக்கு.....சமயத்துல மாமரத்தை உள்ளே வச்சுத் தர்றியான்னு கேட்கிறாங்க..
எல்லாம் கேட்பாங்க..அவங்க அறியாமைதான் நமக்கு வருமானம்...இதுதான் வியாபாரம்..புரியுதா! விட்டா வீட்டிற்குள் ஏசியில் பனைமரம் வளர்த்து தர்றியான்னு கேட்பாங்க..
பசுமை மறந்த அடுக்ககங்களை யார் சார் கேட்கிறது என அலுத்தபடி சாண எரு, காக்கோஃபிட் மூட்டையை வண்டியில் கட்டியபடி நகர்ந்தாள்..