STORYMIRROR

Saravanan P

Fantasy Thriller

3  

Saravanan P

Fantasy Thriller

எல்லைத்தெய்வம் கருப்பு அத்தியா

எல்லைத்தெய்வம் கருப்பு அத்தியா

3 mins
271

இக்கதை சிறுதெய்வ வழிப்பாட்டை மையைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.

என் குலதெய்வம் மாவடி ராமசாமி துணை.

1880 வெத்திலைதோப்பு

அம்மா எதாவது வேலை கிடைக்குமா.

யாரு அது கோட்டையன் ஆ?

ஆமாங்க அம்மா.

என் கிட்ட குடுக்க எந்த வேலையும் இல்ல வேற ஊருக்கு போய் பொலப்ப தேடு.

கோட்டையன் இந்த ஊரு தான் எல்லாமேனு நினச்சேன் இப்படி ஆகிருச்சே.

இதே நேரத்தில் அந்த ஊரு தலைவன் காசி தன் கூட்டாளிகளுடன் அவன் ஊர் வழியே பாய்ந்து செல்லும் காவேரி ஆற்றையும் அதன் பக்கத்தில் உள்ள தோப்பையும் பார்த்தான்.

காசி: இங்க பாருங்க டா இந்த இடத்தை வழைச்சு போட்டு நம்ம இந்த ஆத்து மண்ணை கொள்ளை அடிச்சு வித்து லட்சம் லட்சம் மா பாக்காலம் என சிரிக்கிறான்.

கூட்டாளி: அண்ணே நம்ம ராசு இடம் தான்.

நல்ல விலைக்கு வாங்கிடலாம்.

இரவு கோட்டையன் ஆற்று பக்கம் நடந்து போகிறான்.

தோப்புக்குள் சென்று பழங்கள் பறிக்க பார்க்கிறான்.

பழத்தை அடிக்க கல்லை தேடும் போது மண்ணுக்குள் இருந்து அருவாள் போல் ஒன்று தென்பட அதை எடுக்க பார்த்தான்‌ கோட்டையன்.

கோட்டையன்‌ பின்பு அந்த ஆற்றின் ஓரத்தில் இறங்கி அந்த அருவாளை சுற்றி இருந்த மண்ணை கையால் தள்ளுகிறான்.

அவன் பார்த்த காட்சி அவன் உடம்பை சிலிர்க்க வைத்தது.

முறுக்கு மீசை,தலையில் கொண்டை,முறைக்கும் பார்வையுடன் ஆள் உயரமுள்ள கல் சிற்பமாக கருப்பசாமி கிடைத்தார்.

கோட்டையன் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி சாமி என ‌கத்தியபடியே ஓடினான்.

ஊர் மக்களிடம் நடந்ததை கூறினான்.

அனைவரும் சென்று அந்த கருப்பு சிலையை தூக்கி மாமரத்தின் அடியில் வைத்து கை எடுத்து கும்பிட்டனர்.

கோட்டையன் தீடீரென சாமி வந்து ஆடினான்.

" நான் கருப்பன் வந்துருக்கேன் 

எனக்கு இந்த தோப்புலயே ஒரு சின்ன கோயிலா கட்டுங்க.

நான் இந்த ஊருக்கு காவல்காரனா இருப்பேன்."

ராசு முன்னாடி வந்து‌ இந்த இடத்தில உனக்கு சின்ன கோயிலை நான் கட்டுறேன் பா என சொல்லி கும்பிட்டான்.

அடுத்த நாள் ஆகம விதிப்படி கருப்பு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கோட்டையன் அந்த கோயில் பூசாரியாக செயல்பட்டான்.

2015

மாவடி கருப்பை‌ குலதெய்வமாக கொண்ட குடும்பம் வெத்திலைதோப்பு வந்தது.

அவர்கள்‌‌ ஆற்றில் கை,கால் கழுவி விட்டு,செருப்பை கழட்டி விட்டு கோயிலுக்குள் வந்தனர்.

சிதலமடைந்த கோயிலை பார்த்தப்படி வந்த அவர்களை சீனி பாட்டி கூப்பிட்டார்.

அந்த குடும்பம் இது எங்க குலதெய்வம் என‌ சொல்லி என்ன படையல் போடனும்னு கேட்டாங்க.

சுத்த சைவ படையல் தான் இந்த கருப்பனுக்கு என சொல்லி சென்றார் சீனி பாட்டி.

அந்த குடும்பம் விளக்கு போட்டு விட்டு பொங்கல் செய்ய தொடங்கினர்.

அங்கு வந்த பூசாரியை இதை ‌‌பார்த்து அவர்களிடம் நலம் விசாரித்தார்.

பின்பு அந்த பொங்கலை நிவேதனம் செய்து விட்டு கொஞ்ச பொங்கலை அந்த குடும்பத்துக்கும், மீதியை சீனி பாட்டிக்கு குடுத்தார்.

சீனி பாட்டி அந்த கோவிலை சுத்தம் செய்து,கோலம் போடுபவர்.

1892 வெத்திலைதோப்பு 

மாவடி கருப்பு கோயில் வந்த பக்தர்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேறிய பின் அவர்கள் குதிரை,யானை வடிவில் காரை சிலைகள் அமைத்தனர்‌ மற்றும் சிலரோ இரும்பு வேல்களை செய்து கருப்பு கோயில் முன் அந்த வேல்களை ஊனினார்கள்.

மற்றும் சிலரோ மணிகள் செய்து கோவிலை சுற்றி கட்டினார்கள்.

கோவில் நிர்வாகத்திற்காக இரண்டு பிரிவு சண்டை போட கருப்பு முன்பு ஊரே திரண்டு யார் பொறுப்பேற்க வேண்டும் என கேட்டனர்.

கோட்டையன் கருப்புசாமி வந்து ஆடியபடி 

"இந்த ஊருல படி அளக்குற ஒருத்தன், எல்லாரையும் அனுசரிக்கும் ஒருத்தன் 

நல்லது மட்டுமே ஊருக்கு செய்ற சண்முகம் இந்த கோயில் நிர்வாகம் பண்ணுவான்."

காசி மூஞ்சியை தூக்கியபடி அங்கிருந்து நடந்து சென்றான்.

அரை ஏக்கர் சண்முகம் வச்சிருக்கான் அவன் எனக்கு மேலயா.

அவனை பாத்துக்குறேன்.

சண்முகம் பொறுப்பேற்று அற்புதமாக அந்த வருட திருவிழாவை நடத்தினான்.

கருப்பு கோயில் தேரை ஊரில் உள்ள‌ அனைவரும் சாதி,மதம்,பேதம் இன்றி ஒன்று கூடி இழுத்தனர்.

காசி சண்முகத்தை அடிக்க ஆட்களை அனுப்பினான்.

சண்முகம் அடிக்க வந்தவர்களை பார்த்து என்னை அடிக்காதீங்க என்றான்.

அப்போது தீடீரென குதிரையின் காலடி சத்தம் கேட்டது.

சலங்கை ஓலிக்கும் சத்தமும் கேட்டது.

தலைப்பாகையுடன் கையில் பிரம்புடன் குதிரை மேல் அமர்ந்து நபர் ஒருவர் வந்தார்.

சண்முகம் என் கருப்பா ,என் எசமானே என கத்தினான்.

அந்த நபர் வந்தவுடன் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தது.

அந்த நபர் பிரம்பால் சண்முகத்தை அடிக்க வந்த நபர்களை விலாசினார்.

யாரும் அவர் முகத்தை பார்க்கவில்லை.

அந்த நபர் பிரம்பை சண்முகம் கையில் குடுத்து விட்டு குதிரை‌ மேல் ஏறி சென்றார்.

சண்முகம் அந்த பிரம்பை கண்களில் ஓத்திக்‌கொண்டான்.

2015 

மலைகுகை ஒன்றில்‌ கடவுள்களை கும்பிட்டு கொண்டே சித்து வேலைகள் செய்யும் சாரன் எனும் ஒருவன் கோயில்களுக்கு சென்று அங்கு உள்ள தெய்வத்தின் சக்தியை திருடி அதை தன்னுடையது ஆக்குவான்.

அவன் தன் குருவின் அறிவுரையின் பேரில் வெத்திலைதோப்பு செல்ல தயாரானான்.

எல்லைத்தெய்வம் கருப்பு அத்தியாயம்‌ 2 என தொடரும்.



Rate this content
Log in

Similar tamil story from Fantasy