ஏட்டு சுரைக்காய்
ஏட்டு சுரைக்காய்


ஆவிகள் இருக்கிறதா ? வகுப்பில் மாணவரிடம் கபாலி கேட்டார்
இன்னைக்கு ஃபுல் இதேதான்..மெளனமாக பெஞ்சைத்தட்டி. சிரித்தான் கார்த்திக்.
வகுப்பிற்கு இன்று படிக்க மறந்துவிட்டார்போலத் தெரிகிறது.கடைசி பெஞ்ச் முழுவதும் ஓவென்று சிரித்தது.
அந்த காலத்துல குருவைத் தேடி. படிக்க ஓடினோம் ஆனால் நாங்கள் உட்காந்திருக்கிறோம். நீங்கள் நின்று ................. .அப்படித்தானே சார்..ஜாலியா கிளாஸ் போனால்தான்டா கற்பனைத்திறன் வளரும்.
பேயைப் பற்றி என்ன சார் பேசுறது....
நாம் நினைப்பது நடக்காமல் இறந்து போனவர்களின் ஆவி மறு பிறப்பு எடுக்காது. இங்கேயே அலையும்.கரெக்டா சார்!
வினோதனின் சரியான பதிலால் கிளாசேமெளனமானது.
நடுவில் இதுபோன்ற சுவாரசியமானசெய்தி போட்டால்தான் கிளாசை கவனிப்பார்களா! இல்லையா!......
சரியான கூஜாதூக்கிடா இவன்!
எனக்கு கூஜா தூக்கணும்னு அவனுக்கு என்ன கட்டாயம்? அரசு தர்ற பணத்திற்கு நான் சொல்லித்தருவது எனது கடமை.
சார்!இவங்க அப்பா அரசாங்கப்பணியில்தான்இருக்கார். தனியார் கம்பெனியில் இருக்கிறதா சொல்றான்சார்!
அவங்க அப்பா அரசு இண்டர்வியூவில் நடந்த பணவேட்டையில் பணி கிடைக்காத ஆளாம். அதனால் இப்ப டபுள்வேலை என்ற போர்வையில் ரூபா சம்பாதிக்கிற இயந்திரமாக மாறிட்டார்னு எங்க கிராமம் முழுக்க பேசிக்கிறாங்க சார்! என கபாலியின் காதைக் கடித்தான் வினோதன்
நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று என்கூட ஒண்ணாகூட உட்கார்ந்து சாப்பிடமாட்டார்கள்.என்னிடமிருந்து நீங்கள்தரும் நோட்சையும் வாங்கமறுத்துவிட்டார்கள்.
தீண்டாமை என்பது புத்தக அளவில்தான் சார்!
அலுத்துப் பேசிய வினோதனின் தலையை ஆதரவாகத் தடவிய கபாலி பள்ளியில் சாதி மதம் பார்க்காமல் தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பிறருக்கு தொண்டு செய்யத்தான் நீ இந்த வெள்ளை உடை அணிந்து உறுதிமொழி ஏற்றாய்! கலெக்டரிடம் இன்று பரிசு பெறப் போகிறாய்! எதற்குத் தெரியுமா? பள்ளிசார்பாக புயலில் அடிபட்ட பல உயிர்களைக் காப்பாற்ற நிதி திரட்டியதற்காகத்தான்........அடுத்தவர்கள் சுயநலமாக வாழும்போது நாமும் பணம் திரட்டி சுருட்ட நினைத்தவர் பலர் இருக்க உனக்கு மட்டும் ஏன் இந்த சிந்தனை வினோதன்....!
எங்க அப்பா படிக்கலைன்னாலும் என்னை படிக்கிறவங்க பக்கத்துலதான் இருக்க வைப்பார்.அப்பதான் பள்ளியிலேயே தொண்டு செய்ய சங்கம் இருக்குன்னு. தெரிஞ்சுது!
கபாலி மெளனமாக சுவரில் மாட்டி இருந்த காந்தியையும் காமராசரையும் பார்த்தபடி இருந்தார்.
டேய்! இவங்க இரண்டு பேரும்தான் நாட்டைத்திருத்தப்போறாங்களாம்!
நாடு சுதந்திரமடைந்து இத்தனை வருடம் ஆகிடுச்சு, நீங்க சுவரில் மாட்டியுள்ள படங்களைப் போல யாராவது இதுவரை பிறந்திருக்கிறார்களா சார்!
எங்க அப்பாவும் உங்களைமாதிரி ஆசிரியர்கிட்டே படித்தவர்தான்...ஆனால் இன்னைக்கு அவர் அந்தமாதிரி வாழ முடியாது.காரணம் ஏட்டுசுரைக்காய் கறிக்கு உதவாது. இதற்கு அதிகாரம்,தீவிரவாதம்,சாதி,மதம் சார்ந்த கட்சிகள்தான் காரணம். நீங்க சாதி இரண்டொழிய வேறில்லைன்னு பாடம் நடத்தறீங்க…அப்புறம் ஏன் சாதி சர்டிபிகேட் கேட்கறீங்க? இன்னைக்கு தமிழ்நாட்டுல தேர்தல் முதல் வேலைவரைக்கும் சாதி,மதம்தான் பேசுது!
பிள்ளைகள்,உறவுகள் பாதுகாப்புதான் முக்கிய தேவை.இல்லைன்னா அவர்
தனியாத்தான் வாழணும்..
அப்ப தனிமனித ஒழுக்கம் தேவை இல்லை கார்த்திக்! அப்படித்தானே!
டக்! டக் என குச்சிதட்டும் பிச்சைக்காரன் குரல் கேட்க……………. காம்பவுண்ட் இல்லாத பள்ளியில் யார் வேண்டுமானாலும் வரலாம் என்றார் கபாலி.......
ஆயா, அந்த சோறு மீதி இருந்தால் எடுத்துப்போடுங்க!
கார்த்திக், இந்த கண்ணில்லாத தொழுநோயாளி பிச்சைக்காரன் யார் தெரியுமா? அந்த காலத்து இலஞ்சம் ஊழல் பெருச்சாளி சையது ரூப்தில்லான். மக்களுக்கு சேவை செய்யுற அரசு பணத்தை துஷ்பிரயோகம் பண்ணா இதுதான் கடைசிகால கதி.
பார்த்தியா கார்த்திக்! இங்கிருக்கும் மாணவர்கள் அனைவரிடத்திலும் காந்தியும் காமராசரும் நிறைந்திருக்கிறார்கள்.அதைக் கல்வி வழியா வெளிக்கொணரவேண்டியதுஎன் பொறுப்பு. இஷ்டம் இல்லை என்றால் டிசி கொடுக்கச் சொல்லிவிட்டார்கள். கொடுக்கிற பணத்திற்கு உங்களை உருவாக்கவேண்டியது என் பொறுப்பு என கபாலி கரும்பலகையில் வெள்ளை சாக்பீசால் காந்தி படம் வரைந்தார்.
வகுப்பு பாடம் கேட்க அமைதியானது.
.