STORYMIRROR

Madhu Vanthi

Abstract Children Stories Drama

3  

Madhu Vanthi

Abstract Children Stories Drama

ஏலியன் அட்டாக் - 12

ஏலியன் அட்டாக் - 12

5 mins
230

தோழிகள் இருவரும் தங்கள் விடுமுறை நாட்களை எவ்வாறு கழிக்கப் போகிறோம் என்று போட்ட திட்டமெல்லாம் வீணாய் போனது எண்ணி ஒருவரை ஒருவர் பார்த்து இமைகள் மூடாது விழித்து விழித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.....


ஆனால் நம் முகிலனோ‌‌ இவர்களுக்கு மாறாக, " இந்த விடுமுறை, மிகவும் கோலாகலமாக இருக்கப்போகிறது என்று தான் முழுமையாக நம்பியிருந்தான்.... 

காரணம் என்னவென்றால் மர்மங்கள் அவனுக்கு பிடித்தமான ஒன்று என்பதே சிறுவயதில் மர்மங்களை தேடித்தேடி கண்டுபிடிக்கும் குணம் கொண்டவன் முகிலன்.

 இன்று அவனுக்கு வேற்று கிரக மனிதர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததும், மேலும் அவர்கள் மூலம் வரும் பிரச்சனைகளுக்கு தாங்களே தீர்வாய் அமைய போகிறோம்என்பதை நினைத்துப் பார்க்கும்போது ஒரு புது வித பரவசம் ரத்தத்தில் கலந்திருந்தது


இதுவரை யாரும் செய்யாத ஒன்றை தாங்கள்ன செய்யப்போவதை மனதிற்குள் நினைத்து, ஒரு முறை தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாக நினைத்துப் பார்த்தான். 


🤭(பாவம் அவனாலேயே சகித்துக்கொள்ள முடியவில்லை போலும் )


"நம்மலாவது சூப்பர் ஹீரோ அவரதாவது.....ஹம்..." என வாயார சொல்லி சலித்துக் கொண்ட அதே நேரத்தில்


"சூப்பர் ஹீரோவா ......! யாருடா அது?", மாயாவின் குரல் அவனின் கனவை கலைத்து இருந்தது.


"அது ஒன்னும் இல்ல மாயா ......இந்த ஏலியன்ஸ் கிட்ட இருந்து நாம தான் இந்த உலகத்தை காப்பாத்த போரோம்.... அதானால தான் ஒரு நிமிஷம் நம்மல சூப்பர் ஹீரோஸா நினைச்சு பார்த்தேன்...... ப்ப்ப்பாஹ் ரொம்ப கொடூரமா இருந்தது, "அவன் கூறிய மறுநொடி கண்கள் அவனை முறைக்க தொடங்கியிருந்தது.


"டேய்... கனவு கானரதா இருந்தா உனக்கு மட்டும் கானு....

அதுல எதுக்கு எங்களை எழுத்து உடற?....  

எங்களுக்கு ஹீரோஸ் ஆகணும்னு ஆசையும் இல்ல ஒன்னும் இல்ல...."அவளின் மெல்லிய அழகு உதட்டை முறுக்கிக் கொண்டு தன் தம்பியிடம் செல்லமாக கோபித்துக் கொண்டாள்.


"எங்க... என் மூஞ்சியை பாத்து சொல்லுங்க பாக்கலாம் ...! 

அப்போ ஒத்துக்குறேன், உங்களுக்கு ஹீரோ ஆகணும்னு எந்த ஆசையுமே இல்லன்னு.....", முகிலன் ஏதோ ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு விஷயமாய் கூறுகிறான் என்பது மாயாவிற்க்கு  புரிந்தது ..., அதேசமயம் தன் முகத்தை இரு கைகளால் மூடிக்கொண்டு கரங்களுக்கு பின்னே புன்னகையை உதிர்த்து கொண்டிருந்தாள்அனு.


"சொல்லுங்கள் மிஸ் அனு அக்கா, இந்த ஏலியனோட சண்டை போடுறது எல்லாம் உங்களுக்கு என்ன பெரிய விஷயமா?.... 

நீங்க பாக்காத ஏலியனா?, இல்ல போடாத சண்டையா?...

எத்தன தடவ ஜெயிச்சு இருக்கீங்க அப்படினா நீங்க ஹீரோதான, என குழந்தை போல் கேட்டான் முகிலன்.


மாயாவும் அவனுடன் சேர்ந்து கொண்டு, "சொல்லுங்கள் அக்கா சொல்லுங்கள்,.... ஏன் முகத்தை கைக்குள்ள மூடி வச்சிருக்கீங்கள் ",இன்று ஆதித்யா சேனலில் வரும் சொல்லுங்கள் டாடி சொல்லுங்கள் தோரணையிலேயே கேட்டாள்.


இவ்வளவு நேரம் தனது மொபைலில் யாருக்கோகால் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்த வில்சன் இவர்களின் பேச்சை காதில் வாங்கியதால் சற்று ஏரெடுத்து அனுவைப் பார்த்தார், பின் கண்களை அகல விரித்துக் கொண்டு, "ஏலியன்ஸ் ஓட சண்டை போட்டு இருக்கீங்களா...?, " என சந்தேக குரலில் அவளை நோக்கி கேள்வி எழுப்பினார்.


அவரின் கேள்வியில் இருக்கும் உள்ளர்த்தம் அனைவருக்கும் புரியவில்லை...(அவரைத் தவிர)


"ஐயோ...., அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்ல சார்..... சும்மா சின்ன வயசுல விளையாடுரது தான்என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னே முகிலன் முந்திக் கொண்டான்.


ஆமா சார்....., நான் ஏலியன் , அவ ஏலியன் மாஸ்டர்..... அவ என் கூட சண்ட போட்டுத்தான் ஜெயிச்சு இருக்கா.......நிஜ ஏலியன் கிட்ட போனா மேடமுக்கு கதி கலங்கிரும் .....,என சிரித்துக்கொண்டே கூறி,

"ஆனா என்னாம்மா அடி அடிப்பா.... இப்ப நெனச்சா கூட வலிக்குது", என்று வலிக்காத தன் கையை தடவிக்கொண்டான்.


டாக்டர் வில்சன் தான் நினைத்தது போல் எதுவும் இல்லை என்று பெருமூச்சு விட்டுக் கொண்டார்.


"ஆமா சார்..... நீங்க ரொம்ப நேரமா யாருக்கோ ட்ரை பண்றீங்களே, யாருக்கு சார்? ", என்று அனு கேட்ட அந்த நொடி வில்சன் கையில் இருந்த மொபைல் போனை பார்த்துக்கொண்டு அனு கேட்ட நொடி வில்சன் படக்கென தன் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் பதுக்கினான்.


அதை கவனித்த அனுவிற்கு அவரின் பதட்ட முகமே அவர் எதையோ மறைகிறார் என்பது புரிந்தது.


இதை கவனித்த மாயா , "சார் ... நீங்க எதையும் எங்ககிட்ட இருந்து மறைக்கணும்னு அவசியமில்ல நாங்க எதையும் வெளிய சொல்ல போறது இல்ல.....

நீங்க எங்கள நம்பலாம் என்று அவருக்கு தைரியம் கூறினாள் மாயா .


"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா... என்னோட அசிஸ்டன்ட் மோகனுக்கு தான் கால் பண்ண ட்ரை பண்ணுறேன்.... இங்க சிக்னல் வீக்கா இருக்கு அதனாலதான் வச்சிட்டேன் வேற ஒன்னும் இல்லம்மா ", என்றவர் ஏதோ சொல்ல வந்து வாயை மூடிக்கொண்டார்.


"ஓ ! அப்படியா சார், அப்படின்னா நீங்க வெளியில போய் ட்ரை பண்ணலாமே ", என்று மாயா கூற, "இல்லம்மா .... நான் அப்புறமா பேசிக்கிறேன் , இப்போ அந்த மெஷினப் பாக்கலாம் .... எனக்கு அது எங்க இருக்குன்னு காட்டுங்க", என்றவரின் முகம் மற்றும் வார்த்தைகள் படபடப்பில் ஆழ்ந்திருந்தது.


இதை மூவரும் கவனித்து இருந்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அந்த இயந்திரம் இருந்த இடத்தை நோக்கி நகர்ந்தனர்.


"இதுதான் சார் அந்த மெஷின்", என்று கூறி மாயா அதன் மேல் இருந்த துணியை நீக்கி அதை காண்பித்தாள்


அதை உற்று நோக்கிய வில்சன், "இது ரொம்ப நேரத்துக்கு அதோட வேலைய காட்டாது ... நம்ம போனுக்கு வரும் ஓ.டி.பி நம்பர் மாதிரி தான் இது..... அதோட வேலை முடிஞ்சதும் கொஞ்ச நேரத்திலேயே டிஃப்யூஸ் ஆயிரும், அப்புறம் அதால எந்த பிரயோஜனமும் இல்ல", என்று வில்சன் பெரும் அதிர்ச்சியை முன்வைத்தார்.


மூவர் மைண்ட் வாய்ஸிலும், " இதுக்குத்தான் இவ்வளவு அக்கப்போரா.... இது தெரிஞ்சிருந்தா இவ்வளவு பயந்திருக்க மாட்டோமே", என்ற வார்த்தைகள் ஓடியது.


அந்த மெஷினில் இருந்த ஒரு பட்டனை அழுத்தினார் உடனே அது சிறிய டென்னீஸ் பால் அளவிற்கு மாறியது.


"இனி இது நமக்கு தேவையில்லை பசங்களா" , என்று கூறிவிட்டு வில்சன் அறையை விட்டு வெளியே சென்றார், அவர் பின்தொடர்ந்து அனுவும் மாயாவும் சென்றனர் . ஆனால் முகிலன் மட்டும் அந்த பந்தின் மீது வைத்த கண்ணை அதில் இருந்து எடுக்கவே இல்லை, "அது எப்படி ஒரு பொருள்எதுக்குமே தேவை இல்லாமல் இருக்கும் ... ? உலகத்துல இருக்கிற எல்லா பொருளும் எதுக்கும் உபயோகப்படாமல் இருக்காது . இதுவும் எதுக்காவது பிரயோஜனப் படும்" , என்று கூறி அதை எடுத்து தன் பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்துக் கொண்டான்.


அவன் கூறியது ஒரு வகையில் உண்மையே . வில்சன் கண்ணனுடன் வெற்று கிரகத்திற்கு சென்றபொழுது இதேபோல் ஒரு கருவியை பார்த்திருந்தார் ; அதை கண்ணன் ஓ.டி.பி போல என்று அறிமுகப்படுத்தி இருந்தார், அதை மனதில் வைத்துக்கொண்டு இதுவும் அதுவாகவே இருக்கும் என்று வில்சன் கணித்து இருந்தார்..... ஆனால் அந்த கிரகத்தில் செய்யும் பல பொருட்களுக்கு இதுதான் உருவ வடிவம் என்பது வில்சனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...


உண்மையில் சொல்லப்போனால் அது ஒரு கேமராவே..... இந்த கேமரா மூலம் கண்ணின் வாட்ச் மூலம் ஒளிபரப்பாகிய அதே ஸ்கிரீனில் தற்போது இவர்களின் உரையாடலும் ஒளிபரப்பப்பட்டது அதே இரண்டு உருவங்கள் இதை கண்காணித்துக் கொண்டிருந்தது.


அந்த இரு உருவங்களில் உள்ள தலைவர் உருவத்தை நோக்கி மற்றொரு உருவம், "சார்...., நெஜமாவே இவங்க இந்தப் போரை நிறுத்தி விடுவாங்களா...?, அவங்களால கண்டிப்பா இதை செய்ய முடியுமா...?, எனக்கு சந்தேகமாவே இருக்கு....", என்று சற்று பயம் கலந்த பதைபதைப்பு தோரணையில் கூறியது.


"சரி ..., உன்னோட பயத்தை நீயே போக்கிகோ ...., போய் அவங்களுக்கு இந்த உண்மையை புரிய வை....,போர் நிறுத்த சொல்லி அவங்க கிட்ட கேட்டு பாரு", என்று அந்த மற்றொரு உருவமே எதிர்ப்பார்க்காத ஒரு பதிலை தலைவர் உருவம் கொடுத்தது.


"என்ன சொல்கிறீர்கள் சார் நான் அங்க போகலாமா....?, எனக்கு அனுமதி இருக்கா...?என்று ஒரு வித மகிழ்ச்சியும் ஒருவித ஆர்வமும் கலந்த ஒரு குரலில் மற்றொரு உருவம் கேட்டது.


"இதுவர இல்ல...., ஆனால் இப்போது இறந்து நீ நம்ம கிரகத்தோட அமைதித் தூதுவனா பூமிக்கு போகப்போற....", என்று கூற அந்த மற்றொரு உருவத்திற்கு மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் ஆவலும் கூடியிருந்தது.


"இந்தப் போரை நிறுத்த நான் எதை வேணும்னாலும் செய்ய தயாரா இருக்கேன் .... எந்த உயிர் சேதமும் இருக்க கூடாது, அது தான் என்னோட ஆசை.... இதுக்கு நான் தயார்...", என்று ஒரு வீரனின் தோரணையில் மற்றொரு உருவம் கூறியது.


"நிச்சயமா நீ இத செஞ்சு முடிப்ப...அதுல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.... ஆங்க்! அப்புறம் ஒரு விஷயத்த நான் மறந்துட்டேன்..... நம்ம சாராவும் ஸோரோவும்அங்கே தான் இருக்காங்க.... அவங்கள வேற கூப்பிடனும் நினைச்சேன்", என்று தலைவர் உருவம் தன் முன் தெரிந்த ஸ்கிரீனுக்கு அருகிலிருந்த பட்டன்களை ஏதோ செய்ய முன்வந்தது.


" ஆனா இப்ப அவங்களை கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை சார் .... நான் அங்க போய் அவங்கள கவனிச்சுக்கிறேன் எனக்கு அவங்களோட உதவி தேவைப்படலாம்", என்று மற்றொரு உருவம் அவரைப் பார்த்துக் கூறியது.


தலைவர் உருவம் மற்றொரு உருவத்தை பார்த்து மெல்லிய புன்னகையுடன் "சரி" என்பது போல் கண்ணசைத்தார்.


தலைவரின் வழிகாட்டுதல்படி மற்றொரு உருவத்தின் பூமியை நோக்கிய பயணம் தற்போது தொடங்கியது..... அதேசமயம் மூன்று நண்பர்களின் சாகசப் பயணமும் இதே நேரத்தில் மறைமுகமாக தொடங்கியது.


                         -தொடரும்....



Rate this content
Log in

Similar tamil story from Abstract