சுவாமிமலை
சுவாமிமலை


ஏண்டா! பள்ளிக்கு போகலையா!ஃ
மிஸ் அடிக்கிறாங்க!
படிக்கலைன்னா மாடு மேய்க்க போக வேண்டியதுதான்.
நான் ஏன் மாடு மேய்க்கணும்..
நாலு பேரைச் சேர்த்துட்டு அரசியல்வாதிக்கு அடியாளா போய் உட்கார்ந்துக்கறேன். அது நல்லா இருக்கும்ல...பக்கத்துதெரு பெயி்ண்டரைச் சொல்றியா?
அவனுக்கு சொல்றதுக்கு அவங்க அம்மா இல்லைடா...அவனுக்குத்தான் புத்தி இல்லை...
உனக்கு நான் இருக்கேன்ல.....இதுல தண்ணி வேற அடிக்கப் பழகி இருக்கே!
ஏன் அப்பா தண்ணி அடிச்சப்ப எங்க போனே? அப்பா அடியாளா மாறுனப்ப நீ என்ன செஞ்சே!ஓட்டுக்கு 500 பணமும் பாட்டிலும்,பிரியாணியும் கொடுத்தானுங்களே! நீயும்தானே உட்கார்ந்து தண்ணி அடிச்சே விதை ஒண்ணு போட்டா சுரைக்காயா விளையும்?
நீ எப்படி வளர்க்கிறியோ அப்படித்தான் நாங்களும் ........நீ குடிக்காம இருப்பியா சொல்லு...! எனக் கேட்ட மகனை உற்றுப் பார்த்தாள் அம்மா. வீட்டில் ஒளித்து வைத்திருந்த கட்சிக்கொடிஈமதுபாட்டில் எல்லாவற்றையும் குப்பைத்தொட்டியில் கொண்டுபோய் கொட்டிவிட்டு போதுமாடா! என்றாள்.
மகன் வேகமாக புத்தகப்பையைத் தூக்கிக்கொண்டு மலையைத்தூக்கிய சந்தோஷத்தில் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பினான்.