சுவாமி மலை
சுவாமி மலை


அந்த டீக்கடையில் பன்னும்,பிஸ்கட்டும் வாங்கிட்டு வர்றியா?
தாத்தா! எனக்கு படிக்கிற வேலை இருக்கு!
வீட்டில் சமைக்கமுடியலைடா! காலையில் இருந்து ஒரே பனி!
அதனால் இருமலா இருக்கு 1 கடையும் வைக்க முடியலை!
தாத்தா! அப்ப தேர்வுக்கு பணம் கட்டணுமே!
நீ காலையில் சீககிரமா கோவில் பக்கமா போனால் வித்துடலாம்.போறியா!
கூடையில் இருந்த ஆப்பிள்களையும், மாதுளம்பழங்களையும் தட்டில் அடுக்கி வைத்தார் தாத்தா.
தாத்தா! இப்படி வேண்டாம். ஒரு பேப்பர் பெட்டி மாதிரி உள்ளே செய்து வைத்திருக்கிறேன்.அதை எடுத்து வாருங்கள்.பிளாஸ்டிக் எல்லாம் போடக்கூடாது…
வேகமாக அவன் வளர்த்த பட்டர்பிஸ்கட் பூனை. அந்த பெட்டிகளை எடுத்து அவனருகில் வைக்க அவன் அது தலையைக் கோதினான்.
அவன் கோவில் வாசலில் உட்கார்ந்து படித்தபடி இருந்தான்.
காரிலிருந்து வந்த பெரிய மனிதர் ஒருவர் யூனிஃபார்ம் அணிந்திருந்ததைப் பார்த்து வண்டியை விட்டு இறங்கினார்.
பள்ளிக்கூடம் போகலையா தம்பி?
இந்த பழம் விற்றபின்தான்போகணும் ஐயா! தேர்வுக்குப் பணம் கட்டணும்…
தாத்தாதான் எனக்கு...வேற யாரும் இல்லை…
இந்த பழம் முழுவதும் நான் வாங்கிக்கறேன். எவ்வளவு?
ஐநூறு…ரொம்ப நன்றி ஐயா!
பர்சிலிருந்து ஐநூறும் மேற்கொண்டு நான்கு நூறு ரூபாய்த்தாளும் எடுத்து வைத்துக்கொள்ளப்பா! தாத்தாவை நல்ல மருத்துவமனைக்கு கூட்டிட்டு போப்பா!
கொஞ்சபணம் வீட்டில் இருக்கு சார்! நீட் தேர்வு எழுதத்தான் பணம் சேர்க்கிறேன். பழத்திற்குரிய பணம் மட்டும் தாருங்கள் போதும்.
நீ நல்ல பையன். ஆங்கிலவழியாப்பா நீ?
நான் தமிழ்மீடியம்தான்சார்! அது சரியாவராதுன்னு சொல்றாங்க!
ஆமாம்பா! நான்கூட கேள்விப்பட்டேன்.
அதுக்கு நிறைய படிக்கணும், கோச்சிங் வகுப்பெல்லாம் போகணும்!
நீங்க ஆபிசரா சார்!
ஆமாம்பா! கல்வித்துறை அதிகாரிப்பா!
அப்ப எனக்கு ஒரு சந்தேகம்?
கேளுப்பா!
எல்லோரும் பணம்கொடுத்து வர்றாங்கன்னுதான் நீட் தேர்வு நடக்குது…
அதுல ஆங்கிலம் கண்டிப்பா தெரிஞ்சிருக்கணும்..அவ்வளவுதானே...
ஆமாம்…
கிராமத்துல எங்க தாத்தாவுக்கு,ஆங்கிலம் தெரியாது. நாங்க இருக்கிற கிராமத்திலே இருந்து ஒரு கிலோ மீட்டர் ஆட்டோவில் போனால்தான் டாக்டர் கிளினிக்கே இருக்கு…போய்வர இருபது ரூபாயாவது ஆகும்...டாக்டர் ஆங்கிலம் பேசியா வைத்தியம் பார்க்கிறாரு…….
அரசு மருத்துவமனையில் எந்த டாக்டரும் இப்ப நல்லா பார்க்கிறது கிடையாது. இப்படி மருத்துவத்துறை இருக்கும்போது தமிழ் வழி படித்த டாக்டர் தேவைதானே! எல்லாமே இலவசமாகக் கிடைத்தால்தானே படித்து பட்டம் பெறும் மருத்துவரும் இலவசமாக மருத்துவம் பார்ப்பார் இல்லையா!?
பிறமொழி படிச்சு வர்றவங்க எல்லாம் வந்துட்டே இருந்தால் தமிழ்மக்களுக்கு யார் தமிழில் பேசி வைத்தியம் பார்ப்பார்கள்? கிராமத்துஆள் என்ன இங்கிலீஷா டாக்டர்கிட்டபேசமுடியும்?
உடம்பு பற்றி கேள்வி கேட்கணும்,..வேதியியல்,உயிரியியல்,மன உளவியல் பற்றி வினாக்களுக்கு விடை தெரிஞ்சிருக்கணும்.மருத்துவராகப் படிக்க இதுதானே அடிப்படைத் தகுதிகள்?!
மெல்லிய பலகீனமான குரலில் ஆமாம்பா என்றார் வெள்ளை வேஷ்டிக்காரர்.
உடல் உறுப்பு விற்பதில் இருந்து எல்லாமே பணமாகிவிட்ட காலத்தில் எங்க தாத்தாவைப்போன்ற ஏழைகள் வியாதின்னு வந்தா என்னசார் செய்யறது? அனாதைப் பிணங்களா சாக வேண்டியதுதானா சார்!
நீ திரும்பி அந்த சிவனிடம் முறையிடு! விடிவு கிடைக்குதான்னு பார்ப்போம்.