Arul Prakash

Romance

4  

Arul Prakash

Romance

சம்பள ஈகோ

சம்பள ஈகோ

3 mins
256


ரம்யாவும் பாலாஜியும் living together. ரெண்டு பேரும் ஒரே கம்பெனில,ஒரே டீம்ல வேல செய்யுறாங்க.

ஒரு சனிக்கிழமை காலையில

ரம்யா to பாலாஜி : டேய் மேனேஜர் கால் பண்ணாரு, appraisal rating போட்டுட்டாறாம்.

பாலாஜி : அது என்ன பெரிய rating, என்னவாக இருக்கும் எனக்கு நல்லா தெரியும்.

ரம்யா லேப்டாப் எடுத்து அவ rating ah பாக்குறா, ஒரே upset, லேப்டாப்ப மூடி வச்சிட்டு, அழ ஆரமிக்கிறா.

பாலாஜி : என்ன அழுவுர.

ரம்யா : rating கம்மியா வந்துருச்சு, அதான்.

பாலாஜி : எவளோ rating.

ரம்யா : 4.5.

பாலாஜி : நல்ல rating தான,5க்கு 4.5 சூப்பர் rating தான்.

ரம்யா : அது உனக்கு புரியாது.நீ என்ன rating.

balaji: 2.2.

ரம்யா சத்தமா சிரிக்க ஆரமிச்சிடுறா.

பாலாஜி : ஹே என்ன பா சிரிச்சு அசிங்க படுத்துற.

ரம்யா : சரி விடு, எப்படியும் நான் தான உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்.

பாலாஜி : நீ தான் என்ன கல்யாணம் பண்ணிக்க போறனா, நான் 2.2 rating எடுத்தா பரவா இல்லையா.

ரம்யா : டேய் உன்னால அவளோ rating தான் டா வாங்க முடியும்.

பாலாஜி : நானும் பொண்ணா இருந்தா அந்த மேனேஜர் எனக்கும் நல்ல rating போட்டு இருப்பான்.

ரம்யா : டேய் அப்போ நான் வேலை பார்த்து இந்த rating வாங்கல அப்படித்தான.

பாலாஜி : அப்படி தான்.

ரம்யா : யப்பா சூப்பர், நல்லா மனசுல இருக்கறது எல்லாம் சொல்ற moodல இருக்க போல, வேற என்னலாம் வச்சு இருக்க சொல்லிடு.

பாலாஜி : என்ன ஏன் கல்யாணம் செஞ்சிக்குறேன் சொல்ற, ஏற்கனவே வீட்டு வேல, சமையல் வேல எல்லாம் நான் தான் பண்றேன், இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லா வேலையும் கல்யாணத்துக்கு அப்பறமும் இவனே செய்வான்னு தான.

ரம்யா : டேய் நீ ரொம்ப பேசுற.

பாலாஜி : ஆபீஸ் full ah நான் தான் வீட்டு வேல எல்லாம் செய்யுறன்னு சொல்லி என்ன அசிங்க படுத்தி இருக்க, எல்லாம் பொண்ணுங்களும் என்ன பாத்து சிரிக்கிறாங்க ஆபீஸ்ல.

ரம்யா : ஏன் நிறுத்திட்ட pesu.

பாலாஜி : உங்க அப்பா, நம்ம கல்யாணத்தை பத்தி பேசும்போது, என்ன இவரு இவளோ சம்பளம் கம்மியா வாங்குறாருனு சொல்லும்போது , ஒருத்தர்க்கு அவ்ளோ தான் capacity னா விட்ரணும்னு சொன்ன

ரம்யா : உனக்கு support பண்ணி தான டா பேசுனேன்

பாலாஜி : அது தான் ஏன் capacity ஹே அவ்ளோ தான் சொல்லிட்டியே.

ரம்யா : என்ன டா குடிக்காமலே இவளோ உண்மைய சொல்ற, அவ்ளோ மனசுல இருந்து இருக்கு. வேறென்ன மனசுல வெச்சு இருக்க.

பாலாஜி : அடுத்த மேனேஜர் நீ தான் வரவன்னு ஆபீஸ்ல பேசிக்குறாங்க. husband பொண்டாட்டி கீழ வேல செய்யுறதா? அது மட்டும் இல்லாம என்னால வீட்டு வேல செஞ்சிட்டு ஒரு டம்மி புருஷன உனக்கு இருக்க முடியாது.

ரம்யா : இருக்க முடியாதுனா போடா.

பாலாஜி : போடி.

saturday சண்டே லீவுக்கு அப்பறம் ஆபீஸ்ல ரெண்டு பேரும் மீட் பண்றாங்க.

பாலாஜிக்கு அவன் பேசுனது எல்லாம் தப்புனு தோணிடுச்சு, அதுனால ரம்யா கிட்ட போய் சாரி கேட்க போறான்.

cafeteriaல மீட் பண்ணி ரெண்டு பேரும் பேசிக்குறாங்க.

பாலாஜி to ரம்யா : சாரி.

ரம்யா : சார், மனுசுல இருந்து உண்மைய பேசினத்துக்கு யாராவது சாரி கேட்பாங்களா.

பாலாஜி : என் மேல தான் பா தப்பு,மன்னிச்சுடு.

ரம்யா : அப்படியெல்லாம் உன்ன மன்னிச்சிட முடியாது. ஒரு interview வச்சி பாக்குறேன், ஓகே னா பாக்கலாம்.

பாலாஜி : சரி கேள்விய கேளு.

ரம்யா : நான் பொண்ணா இருக்கறதுனால தான எனக்கு மேனேஜர் நல்ல rating போடுறான்.

பாலாஜி : எவன் சொன்னா, அப்டினா எல்லா பொண்ணுங்களும் best performer ah இருந்து இருப்பாங்க, ஏன் நீ மட்டும் இருக்குற.

ரம்யா : அட அட, என்ன ஒரு தெளிவான பதில். அடுத்த கேள்வி, கல்யாணத்துக்கு அப்பறமும் நீ தான் வீட்டு வேல பாக்கணும்.

பாலாஜி : பொண்ணு தான் வீட்டு வேல செய்யணும்னு எவன் சொன்னான், நானே எல்லாம் வேலையும் பாத்துக்கிறேன்.

ரம்யா : ஆபீஸ்ல எல்லார்கிட்டயும் நீ வீட்டு வேல செய்யுறதா நான் சொல்லுவேன்.

பாலாஜி : சொல்லு, எல்லாம் ஆம்பளைங்கலும் பெண்களுக்கு உதவியா இருக்கணும் ஒரு எடுத்து காட்டா இருந்துட்டு போறேன்.

ரம்யா: உன் பொண்டாட்டி மேனேஜர் ah இருக்கறது பத்தி உங்க கருத்து.

பாலாஜி : அவ உழைச்சு மேல போறா, நல்ல விஷயம் தான். அவ கீழ வேல பாக்குறது எனக்கு கேவலம் இல்ல

ரம்யா : கேள்விகள் முடிந்தது.

பாலாஜி : நான் selected ah.

ரம்யா : yes you are selected. தயவு செஞ்சி நான் உன்னோட salary அதிகமா வாங்குறேன்னு தாழ்வு மனப்பான்மை வேணாம்.

பாலாஜி : இனிமேல் அந்த பிரச்சனை நமக்குள் வராது.

--------------The End ------------------------



Rate this content
Log in

Similar tamil story from Romance