Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

anuradha nazeer

Horror

5.0  

anuradha nazeer

Horror

சிகிச்சை

சிகிச்சை

1 min
29


இந்தோனேசியாவை சேர்ந்தவர் முகமது இதுல் (16) என்ற அந்த சிறுவன் மீன் பிடிக்க சென்று உள்ளார். அப்போது சிறுவன் மீது ஒரு மீன் பாய்ந்து உள்ளது. அந்த மீனின் வாய் ஊசிபோல் கூர்மையாக இருந்ததால் மீன் சிறுவனின் கழுத்தில் குத்தி மறுபக்கம் வந்து உள்ளது.

இந்த மீன் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் தண்ணீரிலிருந்து வெளியே பாயக்கூடியதுமாகும். அப்படி அந்த மீன் பாய்ந்தபோது, அதன் வாய் முகமதின் கழுத்தில் குத்தி, கழுத்தைத் துளைத்துக்கொண்டு மறுபக்கம் வெளியே வந்துள்ளது.

உடனே அவனை அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மூன்று மருத்துவர்களும் இரண்டு மயக்க மருந்து நிபுணர்களும், இரண்டு மணி நேரம் போராடி அந்த மீனை அகற்றியுள்ளனர்.

கழுத்தில் மிக முக்கியமான இரத்தக்குழாய் ஒன்று செல்வதால் அதை சேதப்படுத்திவிடாமல் அந்த மீனை அகற்றவேண்டியிருந்திருக்கிறது. மீன் அகற்றப்பட்டாலும், தொடர்ந்து முகமதுக்கு காய்ச்சல் இருப்பதால், அவர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.


Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Horror