STORYMIRROR

Saravanan P

Action Classics Thriller

4  

Saravanan P

Action Classics Thriller

செந்தில்நாதன் அத்தியாயம் 3

செந்தில்நாதன் அத்தியாயம் 3

1 min
203

அட்டைப்படம்:  பரத்.மு


இக்கதையை படிக்கும் முன் செந்தில்நாதன் அத்தியாயம் 1 மற்றும் 2 படிக்கவும்.

இக்கதையில் வரும் பெயர்கள்,சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே,யாரையும் குறிப்பிடுவன  அல்ல.

நந்தன் தனது நண்பர்களுடன் அமர்ந்து பதவி ஏற்க போகும் புதிய மன்னனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

தங்களது மன்னனின் மகன் தான் அடுத்த அரசன் என அறிகின்றனர்.


அவனது பெயர் என்ன என ஒருவர் கேட்க , இன்னொருவர் அவனது பெயர் வராகர் திருவேந்தன் என கூறினார்.

அரண்மனையில் உள்ளே அனைவரும் வராகனுக்காக காத்திருக்க ,வராகன் தன்னுடைய யானையின் மீதேறி நகரில் பவனி வந்தான்.


அவனுக்கு கீழ் வந்த வீரன் ஒருவன், இளவரசே மக்கள் ஏற்கனவே மக்கள் அரச குடும்பம் மீது வெறுப்பு அடைந்து உள்ளனர். நீங்கள் இங்கு வருவது அவர்களது கோபத்தை அதிகரிக்கும். வராகன் தனது வீரனிடம் ,வீரனே‌ நாம் சேர்த்து வைக்கும் தங்கம்,வெள்ளி வைடூரியங்கள் எல்லாம் அழிந்து போகும்.


ஆனால் மக்கள் நம் மீது வைக்கும் மரியாதை,வெறுப்பு காலம் கடந்து நிற்கும்.

என கூறி முடிப்பதற்குள் ஒரு ஈட்டி அருகில் உள்ள வீட்டு மாடியில் இருந்து வந்தது.

அதை ருத்திரவாசன் பிடித்தான்.


ருத்திரவாசன் யார் என்றால் வராகன் அமர்ந்துள்ள யானை.

வராகன் உடனே பிரமாதம் ருத்திரவாசா என வருடி குடுத்தான்.

பின்பு கீழ் உள்ள வீரனை பார்த்து 

நாம் களத்தில் இறங்கினால் தான் எதிரியை அடையாளம் காண முடியும்.


புரிகிறதா என‌ கூறி முறைத்தப்படி அந்த வீட்டுக்குள் தனது வீரர்களை அனுப்பினான்.

பின்பு அவர்கள் ஒருவனை இழுத்து வந்தார்கள். அங்கு கூடியிருந்த மக்கள் இதை வேடிக்கை பார்த்தார்கள்.


வாகன் தனது வீரர்களால் ஒரு வட்டதுதை அமைத்து தன்னை கொல்ல வந்தவனை சண்டைக்கு அழைத்தான்.

இருவரும் மூர்க்கதனமாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

வராகன் தனது கை முட்டியினால் அவனது காலை உடைத்து தர தர வென்று இழுத்து சென்று போட்டு விட்டு யானை மீதேறி சென்றான்.

செந்தில்நாதன் அத்தியாயம் 4 என தொடரும்.



Rate this content
Log in

Similar tamil story from Action