செல்லிடப்பேசி வதந்தி
செல்லிடப்பேசி வதந்தி


உங்களது கதைக்குப் பத்தாயிரம் பரிசு விழுந்திருக்கு!
நான் எழுதுவது எனது வீட்டிற்குப் பிடிக்காது. இப்போது பரிசு விழுந்திருக்கிறது என்கிறீர்கள். நான் எப்படி வாங்குவது?
செல்லிடபேசியில் பதிவு செய்துவிட்டுத்தான் மேடம் போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டும். ஆனால் நீங்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்புகிறீர்கள்!.
நான் எழுதும் கதைகள்தான் பிறருக்குத் தெரியவேண்டுமே தவிர என்னைப் பற்றிய தகவல்கள் அல்ல! இது செல்லிடபேசியில் பதிவாகிவிடுகிறது. தனிப்பட்டவரின் தகவல்கள் இதனால் அண்டை நாடுகளுக்கும் சென்றுவிடும் இல்லையா! மேலும் செல்லிடபேசியில் வரும் சில குறுஞ்செயலிகள் ஆபத்தைத் தரக்கூடியவை.
நல்லவர் கையில் இருந்தால் அது தொல்லை கிடையாது. அவசரத்திற்காக செல்லிடபேசியினைப் பெண்கள் பயன்படுத்தும்போதும்,குடும்பவேலைகளில் இருக்கும்போதும் ஒவ்வொன்றாக இதைப் பார்த்துக்கொண்டிருப்போமா! கதையில்,கவிதைகளில் கவனம் செலுத்திக்கொண்டிருக்க முடியுமா! எத்தனையோ நல்ல குறுஞ்செயலிகள் எனது படைப்புகளை மொழிபெயர்த்துத் தர இருக்கும்போது இது போன்ற பிரச்னைகளில் மாட்டாமல் இருப்பது தான் நல்லது.
காற்றில் பரவி வரும் ஒலி,ஒளியினால் தொலைதொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தும் முறை இருக்க ஏன் அதைப் பயன்படுத்தி வைரசை அனுப்பி இருக்க முடியாது என்பதுதான் மக்களின் சந்தேகமாக இருக்கிறது.
ஏன் மேடம்! கணினியில் வைரஸ் வருவதில்லையா?
அதற்கு என வல்லுநர் இருக்கிறார்கள் சரி செய்ய! படிக்காதவர்களும் செல்லிடபேசி பயன்படுத்தும்போது என்ன ஆகும் என யோசித்துப் பார்த்தால் அபஸ்வரமாகத் தொனிக்கிறது..
நீங்க ரொம்ப கதை எழுதி முட்டாளாகிட்டீங்களோன்னு தோணுது....பணத்திற்கு செக் தந்துடறோம்..நேரா ஆபிஸ் வந்து ஊரடங்கு முடிந்தவுடன் வந்து வாங்கிக்கோங்க!