அய்யோ¦ காப்பாற்றுங்கள்
அய்யோ¦ காப்பாற்றுங்கள்


காலை 8 மணி, வாகணங்கள், விண்ணை பிளந்து பறந்துக் கொண்டு இருக்கின்றன.
நாமும் எதோ பந்தயத்தில் ஓடுவதைப்போல விறைந்து கொண்டு இருக்கின்றோம்
அங்கு ஒரு பள்ளி மாணவன்,
அழதுக்கொண்டே வண்டியில் ஒரு வயதானவரின் பின்னால் அமர்ந்துக் கொண்டு இருந்தான்
விரைவாக ஒடிக்கொண்டு இருந்த வண்டி ஒரு சிக்னலில் நின்றது,
அந்த மாணவன் எதிர்பாராத விதமாக அந்த வண்டியிலிருந்து குதித்து எதிரிலிருந்த காவல் அதிகாரியிடம் சென்று, தன்னை கடத்திச் செல்வதாக புகார் செய்தான்.
உடனே அந்த காவல் அதிகாரி அந்த மூதியவரைப் பிடித்துக் கொண்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை விசாரித்தபொழது அவர் தன் மகன் என்றும் பள்ளிக்கு போக அடம்பிடிக்கிறான் என்றும் கூறினார்.
அனாலும் இதை காவல் அதிகாரி நம்புவதாக இல்லை, அவர் திரும்ப திரும்ப இதையே கூறியதால் ஆத்திரமடைந்த அதிகாரி அவரை அடிக்கச் சென்றனர்.
உடனே அந்த மாணவன், அய்யோ அடிக்காதீங்க அவர் என்னுடைய தகப்பனார் என்று கூறினான்.
இதை சற்றும் எதிர்பாராத அதிகாரி என்ன நடந்து என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் எனக்கு பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை, படி படி என்று tourchure பன்னுகிறார் அதனால் தான் அவரை மாட்டி விட்டேன் என்றான்.