அலமாரி
அலமாரி


படித்த புத்தகங்களை வைக்க இடமில்லை. எழுதிய புத்தகங்களை வெளியிட பணமில்லை. இந்த லட்சணத்தில் எதற்காக இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறாய்?என்றான் வினோத்.
ஆமாம்! அன்று மழை பெய்தபோது என்னால் நிறைய புத்தகங்களைப் பாதுகாக்க முடியவில்லை. கடையில் அலமாரி கிடைக்கிறதா என்று பார்க்கிறீர்களா? இப்போது இ-புத்தகம் போட ஆரம்பித்துவிட்டேன்.
பக்கத்துவீட்டில் மண் விற்று பிழைப்பு நடத்துகிறவன் வீட்டில் நிறைய அலமாரி இருக்கிறது. காயலான் கடையில் புத்தகங்களாக வாங்கி வைத்திருக்கிறான்.
படிக்கவே தெரியாத அவனுக்கு எதற்கு புத்தகம்?
அறிவாளி என்று அப்போதுதானே சொல்வார்கள்.....அதில் சட்ட புத்தகங்களும் இருந்தது........
அலமாரி நிறைய புத்தகங்களை அடுக்கி வைப்பவன் அறிவாளி அல்ல! அவன் பேசப்படும் களங்களும்,நூல்களுமே அவனது அறிவை வெளிப்படுத்தும். சட்ட புத்தகங்கள் அவனுக்கு ஏது?
எந்த வக்கீல் தொழிலே வேண்டாம்னு பள்ளி பிசினஸ் போதும்னு இருக்காரோ! அங்கிருந்து வந்ததாக இருக்கும்.
அதுக்காக காயலான் கடையிலா போடுவார்கள்!
இன்று சட்டமும் அப்படித்தானே பழசாக இருக்கு!!