அழுக்கு படிந்தது
அழுக்கு படிந்தது


நான் மிதிவண்டியில் கடைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது திடிரென்று அதின் சங்கிலி கழுண்டது. அதை சரி செய்துகொண்டு இருந்தேன். அப்பொழுது ஒரு நான்கு அல்லது ஐந்து வயது உள்ள ஒரு பெண் கையில் இனிப்பு பண்டத்துடன் சென்று கொண்டு இருந்தாள். நான் செல்லமாக அவள் கன்னத்தை கிள்ளினேன். அவள் அதற்கு தொடாதே என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள். நான் முதலில் கையில் அழுக்கு இருப்பதால் தொடாதே என்று சொன்னால் போல என்று நினைத்து சென்று விட்டேன். அப்புறம் கடையில் எங்கம்மா சொன்ன பொருட்கள் வாங்கிக்கொண்டு இருந்தேன். அங்கு பொருட்களை கட்டிக்கொடுக்க வைத்திருந்த செய்தித்தாளில் ஒரு சிறு பெண்ணிற்கு நடந்த கொடூரம் பற்றிய செய்தி இருந்தது. அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது அவள் கை அழுக்கை நினைத்து தொடாதே என கூறவில்லை மனம் அழுக்காக இருக்குமோ என நினைத்து கூறி இருக்கிறாள் என்று. இரக்கமில்லாதவர்கள் செய்த தவறுக்காக அனைத்து ஆண்களும் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. "தவறு செய்யாதே செய்யவும் விடாதே "