உணர்ச்சியை பொங்கும் தமிழ்
உணர்ச்சியை பொங்கும் தமிழ்


நான் தினமும் காலையில் எங்கள் பள்ளியில் நடக்கும் பயிற்சி வகுப்பிற்கு ஆறு மணிக்கெல்லாம் சென்று விடுவேன். பின் எட்டு மணிக்கு வரும் பள்ளி பேருந்தில் என் அம்மா காலை மற்றும் மதியத்திற்கு தேவை படும் உணவை கொண்டு வந்து நடத்துநரிடம் கொடுப்பார். என் வகுப்பில் உள்ள நிறைய பேருக்கு உடன் பிறந்தவர்கள் இருப்பதால் அவர்கள் எடுத்துவந்து உணவு பையை வகுப்பறையில் கொடுத்து விடுவர். அவ்வாறு இல்லாதவர்கள் அனைவரும் காலை எட்டரை மணிக்கு பள்ளி பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்து எடுத்து வர வேண்டும். எனக்கும் உடன்பிறப்புகள் கிடையாது, ஆனால் என் பேருந்து நடத்துநரே எனக்கு உணவு பையை எடுத்துக்கொண்டு வந்துவிடுவார். ஒரு நாள் பள்ளி முடிந்ததும் பேருந்தில்
செல்லும் பொழுது கேட்டேன் " ஏன் நா எனக்கு மட்டும் நீயே உணவு பையை எடுத்துனு வந்து தர??? " அதற்கு அவர் "நீ மட்டும் தான் தம்பி என்ன அண்ணானு கூப்புட்ற மத்தவங்களாம் ப்ரோ அல்லது கிளீனர் (bro or cleaner) னு தான் கூப்புட்றாங்க. " அதற்கு நான் " நா ப்ரோ நாலும் அண்ணா நாலும் ஒன்னு தான்." என்று சொன்னேன் அதற்கு அவர் "என்னவா இருந்தாலும் தமிழ்ல கூப்டா தான்பா உறவுனு தோணுது. மத்த மொழில சொன்ன அந்நியர் போல தான் தோணுது. " என்று அவர் சொன்னார். இன்று நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளை ஆங்கிலத்திலேயே தங்களை அழைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள், கேட்டால் நாகரிக வளர்ச்சியாம். தங்கள் மொழியில் மட்டுமே பேசும் ஜப்பானியர்கள் அடைந்த வளர்ச்சியை பற்றி அறியாமல் அவர்கள் பேசுகிறார்கள்