ரயில் பெட்டி
ரயில் பெட்டி


நான் சென்னை மாநகரத்தில் என் கல்லூரி படிப்பை படித்துவருகிறேன். நான் படிக்கும் கல்லூரியில் ஒருநாள் மாலை ஆறு மணி அளவில் தேர்வு ஒன்று வைத்தனர். தேர்வு முடித்தபின் வீட்டுக்கு செல்ல பேருந்து இல்லாததால் ரயிலில் போக முடிவெடுத்தேன். நான் ஏரிய இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. சில ரயில் நிலையம் கடந்தவுடன் கூட்டம் மிகவும் குறைந்து விட்டது. கிட்டத்தட்ட நான் மட்டும் தான் ரயிலில் இருப்பது போன்று இருந்தது. மழையும் கொட்ட ஆரமித்து விட்டது. அடுத்த ரயில் நிலையம் வந்தது ஆனால் அங்கும் யாரும் நிற்பது போன்று தெரியவில்லை. ரயில் மீண்டும் புறப்பட இருந்தது. அப்பொழுது பக்கத்து பெட்டியில் (பெண்களுக்கான சிறப்பு பெட்டி ) இருந்து திடிரென்று ஒரு பெண் இறங்கினாள். பார்க்க பேரழகியாக இருந்தால். நான் சிறு வயதில் பார்த்த காதல் படம் அனைத்தும் ஞாபகம் வந்தது. திடீர் என்று படத்தில் வருவது போலயே அவளும் என்னை பார்த்து " ரயிலில் ஏற உதவி செய்யுங்கள் என்றால். "
நானும் மனதிற்குள் கதாநாயகன் போல் நினைத்துக்கொண்டு அவளின் கையை புடித்து ரயிலிற்குள் வர வைத்தேன். பின்பு அவளை பார்த்து "தவறான நிலையத்தில் இருங்கிவிட்டாயா என்று கேட்டேன் "
அவள் இல்லை என்று கூறினாள். பின்பு ஏன் இருங்கிவிட்டு மீண்டும் ஏறினாய் என்று கேட்டேன். அதற்கு அவள் " நான் பெண்கள் பெட்டியில் தனியாக செல்ல பயந்து கீழே இறங்கி வாடகை சிற்றுந்தியில் ஏறி செல்லலாம் என்று நினைத்தேன். பின்பு தான் நான் உன்னை பார்த்தேன். அதனால் ஓடி வந்து ஏறி விட்டேன். "
எனக்கு இந்த பதில் வியப்பை தந்தது. ஏனென்றால் எனக்கு அவள் யார் என்று ஞாபகம் இல்லை. அவள் என் வியப்பை புரிந்து கொண்டு
"எனக்கும் நீ யார் என்றுலாம் தெரியாது ஆனால் நீ ரயிலில் ஏறுவதற்காக காத்திருந்த போது கூட்ட நெரிசலால் உன்னை பல பெண்கள் இடிப்பது போல நேரிட்டது. மத்தவர்களாக இருந்திருந்தால் மகிழ்ச்சி என்று நினைத்துக்கொண்டு அனைவரையும் தவறான முறையில் தொட்டு விட்டு சென்றிருப்பார்கள். ஆனால் நீ அவ்வாறு செய்யாமல் ஒதுங்கி ஒதுங்கி சென்றாய். மேலும் ஒரு குட்டி பெண் உன்னிடம் வந்து பேணா வாங்கிக்கோங்கன்னு கேட்டதற்கு பேணா வாங்காமல் நீ அவளுக்கு தின் பண்டத்தை குடுத்து மேலும் "இவ்வாறெல்லாம் இந்த வயதில் வேலை செய்யாதே. போய் படிப்பில் கவனம் செலுத்து. படிக்க காசு இல்லாட்டி அரசாங்கம் பல உதவிகளை தருகிறது அதைநாடு " என்று கூறினாய்.
இதை வைத்து நீ நல்லவன் என்ற முடிவிற்கு வந்தேன். பெண்கள் பெட்டியில் அல்லது சிற்றுந்திலோ செல்வதை விட உன் போல் நல்ல ஆண்களுடன் செல்வது நல்லது என்று தோணியது. நீயும் அழகை ரசிப்பாய் என்று தெரியும் ஆனால் அனுபவிக்க நெனைக்கமாட்டாய். " என்று கூறினாள்.