பண்டிகை
பண்டிகை


"நகம் வெட்டட்டுமா மா "என்று நான் என் அம்மா விடம் கேட்டேன். "இல்ல டா இன்னிக்கு வெட்ட கூடாது"னு எங்க அம்மா சொன்னாங்க. பொதுவா எங்கம்மா செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மட்டும் தான் நகம் வெட்ட கூடாதுனு சொல்லுவாங்க , இன்னிக்கு ஏன் சொல்ராங்கனு பார்த்தா இன்னிக்கு பொங்கல்(ஞாயறுக்கிழமை). அப்பொழுதுதான் நான் பொங்கல் மற்றும் தீபாவளி கொண்டாடி எவ்வளவு வருஷம் அச்சினு யோசித்தேன்.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது "பொங்கல் எல்லா வருஷமும் வரும் ஆன பொதுத்தேர்வு இந்த வருஷம் மட்டும் தான் உன்னால எழுத முடியும் அதனால பாத்து படி டா " என்று அம்மா சொன்னாங்க.
பின் பதினோராம் வகுப்பு படிக்கும் போது "உன் வயசு பசங்களாம் பனிரெண்டாம் வகுப்பு பாடத்திற்கு படிக்கறாங்க நீ என்னனா பொங்கல் கேட்டுட்டு நிக்கற "னு எங்கப்பா சொன்னா
ரு.
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது " இந்த வருஷம் நீ எடுக்குற மதிப்பெண் தான் உன் வாழ்க்கையை தீர்மானிக்க பொழுது அதனால தீபாவளி, பொங்கலல்லாம் அடுத்த வருக்ஷம் பாத்துக்கலாம். கல்லுரிக்கு போய்ட்டா நீ சந்தோசமா இருக்கலாம், யாரும் உன்ன கேள்வி கேட்க மாட்டாங்க "னு என் ஆசிரியர் சொன்னாரு. நான் அதன் பின் பொறியியல் கல்லுரியில் சேர்ந்தேன். அங்கு தீபாவளி அப்ப பருவத்தேர்வு மற்றும் பொங்கல் அப்ப நடந்த தேர்வுக்கான முடிவு என்று நான்கு வருடம் சென்றது. அதன் பின் வேலைக்காக இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டிற்கு சென்றேன். (பின் இந்தியாவிலேயே நல்ல வேலை கிடைத்ததால் இங்கு திரும்பி வந்துவிட்டேன். ) அதனால் அந்த இரண்டு ஆண்டுகளும் தீபாவளி மற்றும் பொங்கல் ஒரு பண்டிகையாக என்னால் உணர முடியவில்லை. "பண்டிகைகள் தான் நம்மை ஒன்று சேர்கின்ற கருவி . அதனால் அதை மகிழ்ச்சியுடன் அனைத்து வருடங்களிலும் கொண்டாடுங்கள். "