கணிதம்
கணிதம்


நான் மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு பிகவும் பிடிக்காத பாடப் பிரிவு கணிதம் ஆகும். அதனால் நான் பெரும்பாலும் அந்த வகுப்பை கவனிக்க மாட்டேன். எனக்கு தமிழில் கதை எழுதுவது மிகவும் புடிக்கும். ஒரு நாள் கணித வகுப்பின் போது கணித குறிப்பேடில் கணிதம் எழுதாமல் அதில் தமிழ் கதை ஒன்று எழுத்தினேன். அதை என் கணக்கு ஆசிரியர் பாத்து மிகவும் திட்டினார். மேலும் என் வீட்டிலும் அதை கூறிவிட்டார். இதனால் நான் கதை எழுதுவதை விட்டுவிட்டேன். இது எனக்கு ஒரு நூலை படிக்கும் போது நினைவில் வந்தது. அந்த நூலின் ஆசிரியர் என் நண்பன். ஒருவேளை அப்பொழுது என்னை யாரேனும் ஊக்குவித்திருந்தால் நானும் அவனை போல் ஒரு நூல் ஆசிரியர் ஆகிருப்பேன்.