உணர்ச்சியை பொங்கும் தமிழ்
உணர்ச்சியை பொங்கும் தமிழ்


நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டு வந்தேன். அப்பொழுது எங்கள் தமிழ் பாடத்தில் கம்பராமாயணம் இருந்தது. எங்களுக்கு தமிழ் எடுத்தவர் வேறு மதத்தை சேர்ந்தவர். அதனால் அவர் கம்பராமாயணத்தை சரியாக எடுக்க மாட்டார் என்று நாங்கள் எண்ணினோம். அடுத்தநாள் அவர் கம்பராமாயணம் எடுக்க வகுப்பிற்கு வந்தார். அவர் வரும் வரை மட்டும் தான் நாங்கள் எங்கள் ஊரில் இருந்தோம். மீதி நேரம் முழுக்க நாங்கள் ராமருடனேயே பயணம் செய்தது போல இருந்தது. மேலும் அவர் ராமரை குறித்து வர்ணித்து பொழுது அவர் கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்கியது. கம்பராமாயணத்தை எடுத்து முடித்த பின் அவர் எங்களை பார்த்து, " வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் ராம பெருமாள். அவரை பற்றி நான் எடுக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். " என்று கூறினார்.
அவர் பாடம் எடுத்ததில் இருந்து நாங்கள் பல வாழ்க்கை பாடங்களை கற்று கொண்டோம். அதில் முக்கியமானது "வேற்றுமையில் ஒற்றுமை " என்று வாழுவது மற்றும் அணைத்து மதங்களிலும் கூறப்பட்டிருக்கும் நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்வது.