ஆடியோ கதை
ஆடியோ கதை


களை வெட்டி பிழைப்பு நடத்தற நான் எப்படி இந்த பிள்ளையை ஆளாக்குறது...
ரோடில் கிடந்த குழந்தையை எடுத்து வச்சிட்டு அதுவும் ஆட்டிசம் குழந்தை இதுன்னு தெரியும்ல..என கர்சித்தார் அப்பா.
ரோசி ஒன்றுமே பேசாமல் அந்த ஆட்டிசம் பாதித்த குழந்தையைப் பார்த்தபடி பிழைப்புக்கு களை வெட்டுறது மட்டும்னு இல்லாமல் விவசாய நிலம் ஒண்ணு அரசு இனாமா தரப்போகுதாம். அதுல மாடு, ஆடு, கோழின்னு வளர்க்கிறேன். ஒரு ஸ்மார்ட்ஃபோன் வாங்கிக்கறேன். அதுல வர்ற ஆப்ல ஆடியோ கதை போடுறேன். புத்தகமாக்கி விற்கிறேன். இது கரோனா நோய் பாதித்த நேரம். கிராமத்துல யாருக்கும் காய்கறி கிடைக்காத நேரம். என் ஃபேஸ்புக்கில் ஆர்டர் எடுத்து சப்ளை செய்றேன். படிக்க வச்சது 3 ஆம் கிளாசுதான். ஆனால் இப்ப செய்யாதுன்னு சொன்னா எப்படிப்பா?
என்னாலும் சாதிக்கமுடியும்பா!