ஆண்டவன் தேர்வு
ஆண்டவன் தேர்வு


பரீட்சை இருக்கு..இல்லைன்னு சொன்னா புத்தகத்தைத் தூக்கி காயலான் கடைக்குப் போட்டுடலாம்னு பார்த்தா இந்த பையன் போடவிடமாட்டேங்கறானே! என குப்புசாமி பணமில்லாததால் அலுத்துக்கொண்டான்.
ரங்கன் தலையணையால் கண்ணை இறுக மூடி கடவுளே! இந்த 21 நாள் முடியறவரைக்கும் எங்க அப்பாவுக்கு பணம் எதுவும் கிடைக்காமல் இருக்கவேண்டும். இப்பதான் எங்க அப்பா குடிக்காம எங்க அம்மாகிட்டே அன்பா பேசி சமைக்கத் தொடங்கி இருக்கார். கரோனா வந்து உலக மக்கள் துன்பப்படாமல் காப்பாத்தணும் என கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான்.