ஆன்மா
ஆன்மா


மதுரை காந்தி மியூசியம் போறியாப்பா!
அங்கே என்ன சார் இருக்கு!
ஆன்மாவுக்கு அழிவு கிடையாதுப்பா! காந்தி இன்னமும் நம்மகூடவே இருக்கிறமாதிரிதாம்பா நான் நினைச்சுட்டுவர்றேன்.
வெளிநாட்டுல இருந்து வந்து இதைப் பார்க்கிறதுல இவ்வளவு ஈடுபாடு காட்டுறீங்க?
நீ என்ன படிச்சிருக்க?
காலேஜ் சார்....இலஞ்சம் கேட்டாங்க....கொடுக்க பணம் இருந்துச்சு..ஆனால் ஏன் தரணும்னு ஆட்டோ வாங்கி ஓட்டுறேன் சார்!
நான் டிகிரிதான். அதே இலஞ்சம் வாங்கமாட்டேன்னு இருந்ததுனால வேலை கிடைக்க முடியாதபடி வருஷக்கணக்காக விரட்டிட்டு இருந்தாங்க.... .இதுல என் மனைவியை கொன்னுட்டாங்க......பொண்ணு ஒன்னு இருந்தா, எங்கேயோ கடத்திட்டுப்போய்ட்டதா சொன்னாங்க.......பார்த்தேன்.இதெல்லாம் சரிப்படாதுன்னு வெளிநாடு போய்ட்டேன். அதான் பிரியப்பட்ட காந்தியைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்பா!
அமைதியாக ஆட்டோவை ஓட்ட ஆரம்பித்தான் பாஸ்கர்.