ஆன்லைன் கதை சொல்லி
ஆன்லைன் கதை சொல்லி


வகுப்பறை ஆசிரியர் வருவதைப் பார்த்ததும் கலகலவென வாட்ஸ்அப் குருப்பில் பத்து மாணவர்கள் வீடியோவில் சிரிக்க ஆரம்பித்தனர். இன்னைக்கு என்ன மிஸ் சொல்லப்போறீங்க!
ஏற்கனவே வடக்கு பக்கம் ஒரு பையன் சாலையில் தனியாக நடந்து போகும்போது எங்கே போகிறாய்னு கேட்டதுக்கு ட்யூஷனுக்குன்னு சொல்லி பெற்றோர்,ட்யூஷன் டீச்சர் என மாட்டி விட்டுட்டான். அதனால் நான் வாட்ஸ்அப்லதான் கிளாஸ் எடுக்கப்போறேன். அதை நம்ம முன்னாடியே கூகுள் சாட்டிங்வீடியோ முறையில் பார்த்திருக்கோம் இல்லையா?
ஆமாம் மிஸ்...எனக்கு ஒரு சந்தேகம்?
என்னடா?
ஆறாம் வகுப்பு படிக்கிற எனக்கு வாட்ஸ்அப்ல பாடம் படித்தால் சரியாக வருமா?
சில வகுப்புகள்தான் அப்படி இருக்கும். மீதி நீங்க எழுதி தபாலில் அனுப்புங்கள். டைப் பண்ணத் தெரிந்தால் ஆன்லைனில் அனுப்புங்கள்.
மேசைக் கணினி,மடிகணினி பயன்படுத்தினால் போதுமா? மிஸ்..
போதும். அவசரம் என்றால் மட்டும் வாட்ஸ்அப்பில் வாருங்கள். போதும்.
பள்ளியில் வைஃபை இப்போது தெருவுக்கு தெரு வைத்துக் கொடுத்துவிட்டார்கள். அதனால் நீங்கள் தவறானது எதுவும் பார்க்க இயலாது. மீதி தொலைக்காட்சியில் பாடமாக வரும்.
ஏன்மிஸ்...இதுபோலச் செய்தால் நீங்கள் நடத்துவதை வீடியோவில் எடுத்துவிட்டு உங்களை வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். அதனால் உங்களுக்கு கஷ்டம் என எனது தாத்தா கூறினார் மிஸ்.அது நிஜமா?
இப்ப நாம் பாடக் கதைக்கு வருவோமா! என அட்டைப்பெட்டியில் ஆண் ஆசிரியரும்,பெண் ஆசிரியரும் என விரலில் ரப்பர் மஞ்சள் பந்துகளை மாட்டி ஆசிரியர் கதை சொல்ல வாட்ஸ்அப் குருப் மாணவர்கள் மகிழ்வுடன் கற்றலில் ஈடுபட்டனர்.