ஆசை
ஆசை
திருமணமான புதிதில் கண்ணாடி ஷோகேசில் இருந்த அந்த கண்ணாடி வளையல்கள் அவள் கவனத்தை ஈர்த்தன.
அதைப் பார்த்தபடியே நின்றிருந்ததைக் கண்ட கோபி அந்த கண்ணாடி வளையல்கள் உனக்கு வேண்டுமா கோகிலா?
இல்லை அந்த வளையல்கள் இம்போர்ட்டட் வளையல். ரொம்ப விலைகொடுத்து வாங்கணும். நான் இப்ப வாங்கிட்டேன்னா இந்த குடும்ப செலவுகளை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்.
அந்த வயதில் வரும் ஆசைகள் உடனே நிறைவேற்றிடணும்….இல்லையா!
ஒரு கடி ஜோக் சொல்லுங்களேன். சிரித்தபடி இருந்தால் கஷ்டங்கள் தொலைந்து போகும்.
கடகடவென கணவன் சொன்ன ஜோக்குகளைக் கேட்டபடி கடையில் பார்த்தவற்றை மறந்தாள்.