Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.
Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.

Madhu Vanthi

Inspirational Others Children


4  

Madhu Vanthi

Inspirational Others Children


2k kids

2k kids

5 mins 282 5 mins 282

மித்ரா கூறியது போலவே ஐந்து மணிக்கு ஹர்சன் வந்து அவளை எழுப்பி விட்டு, அவன் கிளம்புவதற்காக சென்று விட..... எழுந்ததும் வேக வேகமாக குளித்து கிளம்பினாள் மித்ரா...


குளித்து முடித்து அறையில் நின்று மித்ரா தலையை உலர்த்தி கொண்டிருக்க... அறை கதவு தட்டப்பட்டது.... "மித்ராக்கா.... ரெடி ஆகியாச்சா.....", என கீர்த்தியின் குரல் கேட்க..., "ஓய் கீர்த்தி மா.... ஸ்கூல்ல இருந்து வந்தாச்சா....", என கேட்டுக்கொண்டே மித்ரா கதவை திறக்க... அங்கே கீர்த்தியுடன் டிப் டாப்பாக தயாராகியிருந்த ஹர்ஷனும் நின்றிருந்தான்... 


"மித்ராக்கா... என்ன பாட்டு பாட போறீங்க.... செலக்ட் பணியாச்சா... இல்ல மதியம் சாப்ட்ட டயர்ட் இன்னும் இருக்கா?...", என கண்ணடித்து கேட்டபடி காலை ஆட்டி கொண்டு கட்டிலில் அமர்ந்தாள் கீர்த்தி... 


"அட பாவி... அதுக்குள்ள தகவல் வந்துருச்சா?...", என கீர்த்தியிடம் கேட்டுக்கொண்டே ஹர்ஷனை அவள் முறைக்க... அவனோ சமாளிக்கும் விதமாக...., "ஹான்.. மித்ரா... சீக்கிரம் கெளம்பி வா... இன்னும் ஹாஃப் அன் ஹவர்ல நாம வீட்டுள இருந்து கெலம்புனா தா டைமுக்கு போக முடியும்... ஒரு செட் டிரஸ் எடுத்துக்கோ... ஐடி மறக்காம எடுத்துக்கோ.... அப்பரம் சீக்கிரமா கெளம்பு... மாமா வெய்ட் பண்ணுறேன்....", என கண்ணடித்து விட்டு வெளியே செல்ல.... மித்ரா இன்னும் முறைத்து கொண்டு தான் இருந்தாள்.


அதை பார்த்த கீர்த்தி, "ஓய் அக்கா... என்ன என் அண்ணன ரொம்ப தா மொரைக்கிரீங்க... ", என ஹர்ஷனுக்கு துணையாக வர.... வாயில் வரை சென்ற ஹர்ஷன் படக்கென இப்பக்கம் திரும்பினான்...


"எம்மா கீர்த்தி... ஒன்னு.... அவள அக்கான்னு சொல்லு... இல்ல என்ன அண்ணன்னு சொல்லு... இப்டி ரெண்டையும் சேத்து கன்பியூஸ் பண்ணுறியேமா... ", என தலையில் கை வைக்க... ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட மித்ராவும் கீர்த்தியும் வாயை மூடி சிரித்தார்கள்... 


"அண்ணா... நீங்க ஃபர்ஸ்ட் மித்ராக்காவ கல்யாணம் பண்ணுங்க..... அப்பறம் கன்ஃபியூசன் இல்லாம கரெக்ட்டா கூப்பிடுறேன்... ", என கீர்த்தி நக்கலாக கூற... மற்ற இருவரும் சிரித்து கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்... சரியாக அந்த நேரம் ஹர்ஷனின் மொபைல் கத்த... பக்கத்து அறையில் இருந்த அதை எடுக்க அவன் வேகமாக ஓடிவிட்டான்.


இங்கே மித்ரா கீர்த்தியிடம் பேசி கொண்டே பத்து நிமிடம் கழித்து கிளம்பி முடித்து வெளியே வர.. அங்கே நடு ஹாலில் அர்ஜுன் தீரா, ரக்ஷவ், மயூ ஆளுக்கு ஒரு ரெக்கார்ட் நோட்டை கையில் வைத்து கொண்டு... பக்கத்தில் எட்டு நோட்டை அடுக்கி வைத்து கொண்டும் இருந்தார்கள்... அர்ஜுன் மற்றும் தீராவுக்கு தான் ஏழு ரெக்கார்டும்... இன்னும் நான்கு மாதங்களில் முடித்தாக வேண்டும்.... ஒவ்வொரு நோட்டிலும் கிட்டத்தட்ட இருபது பிராக்டிகல் எழுதவேண்டி இருக்கும்... இப்போது தொடங்கினாலும் ஒரே ஆளாக எழுதினாள் இவர்கள் எழுதும் வேகத்திற்கு நிச்சயம் முடிக்க முடியாது.. குறிப்பிட்ட நாளுக்குள் முடிக்க வேண்டும் என்று இப்போதில் இருந்தே நால்வரும் சேர்ந்து எழுத துவங்கிவிட்டார்கள்.... ரக்ஷவ் மற்றும் மியூ வரலாறு பிரிவில் பயில்வதால் அவர்களுக்கு பிரக்டிகல் எதுவும் கிடையாது.. அதனால் இப்போது நால்வரும் சேர்ந்து எழுதி கொண்டிருக்கிரார்கள் .


"என்னடா பிராக்டிகல் வர்க் குடுத்துட்டாங்ளா....??... என்றவாறே மித்ரா அவர்கள் அருகில் வந்து அமர... "ஆமா மித்துக்கா.... ஏழு நோட் ஃபுல்லா எழுதனும்...." என தீரா நொந்து கொண்டாள்... அவளுக்கு ஒத்து ஓதுவது போல் அர்ஜுன் "ஷப்பா... எழுதுறது கூட பரவா இல்ல... ஒக்காந்து ஒக்காந்து எழுதுரதுகுள்ள முதுகு தண்டு வில்லு மாறி லாக் ஆகிரும் போல.... இதுல பக்கம் பக்கமா வரைய வேர சொல்லுறாங்க... நாலாம் வரஞ்சு... அத சார் பாத்து... கன்ஃப்யூஷன் இல்லாம திருத்தி முடிக்கிறதுகுள்ள.... பாவம் அவரு....", என தன் ஓவர் ஃபீலிங்ஸை கொட்டி கொண்டே தலையில் கைவைத்து கொண்டான் அர்ஜுன்.


அவன் செய்கையில் அனைவரும் பாவமாக அவனை பார்த்து உச்சுகொட்டியவாறு சிரிக்க... அவனருகில் வந்த மித்ரா, "நான் இருக்கும் போது நீ கவலைப் படலாமா டா அஜ்ஜு.... எழுதுற வெளைய மட்டும். நீ முடிச்சு வை... திருச்சில இருந்து வந்ததும் நா உனக்கு வரைஞ்சு தரேன்... எனக்கும் ரைட்டிங் வர்க் இல்லாம போர் அடிக்குது....", என மித்ரா அர்ஜுனிடம் கூறியத தான் தாமதம்.... அவளுக்கு அர்ஜுன் பதிலளிக்கும் முன்னதாக முந்திக்கொண்ட தீரா......, "ஹையா.... சூப்பர் சூப்பர்.... அப்ப எனக்கும் வரையனும்.... எனக்கும் வரையனும்...", என இரண்டு நோட்டை எடுத்து ஆர்வமாக மித்ரவிடம் நீட்டினாள்.


அதை கண்டு மெல்லமாக அவள் தலையில் தட்டிய மயூ, "லூசு... அக்கா இப்போ ஊருக்கு கெலம்பீட்டு இருக்கா... இப்போவே வா சப்மிட் பண்ண போற.... இப்டி பறக்குற...", என தீராவை முறைக்க... பதிலுக்கு அவளை முறைத்து விட்டு முறுக்கி கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.... அவர்களை பார்த்து சிரித்த மித்ரா, "தீருமா.... நா ஊருக்கு போயிட்டு வந்துறேன்.... அப்புறமா உங்க ரெண்டு பேருக்கும் சேத்து நானே வரையுறேன்... காலேஜ்லயும் நெறைய நேரம் வெட்டியா தா இருக்கேன்... அப்போ வரஞ்சிரலாம்....", என தீராவை சமாதானம் செய்ய... "ஓகே டன்.... எப்டியோ... வரஞ்சா சரி தா.... எனக்கு வரையிற வெல மிச்சம்.....", என கூறி விட்டு ஒரு வேலை முடிந்தது என நிம்மதியாக எழுதத் தொடங்கினாள் அவள்.


அங்கே ஒரு இருக்கையில் அமர்ந்த மித்ரா, "எங்க போனான் நம்ம ஆளு.... நம்மள கெலம்ப சொல்லிட்டு... இப்போ ஆளையே காணோம்...", என சுற்றி முற்றி தேடி கொண்டிருந்தாள். 


சற்று நேரத்தில் வாயில் கதவு தட்டப்பட, "எவன்டா அது திறந்து கதவை தட்டிகிட்டு கிடக்கிறது", என்ற கத்தியவாறு தீரா திரும்பி பார்க்கும் முன்பாக "அண்ணா....." என கத்திக்கொண்டே கீர்த்தி வாயிலை நோக்கி ஓடி இருந்தாள்...


அங்கே விக்ரம் தான், உள்ளே நடக்கும் அலப்பறைகள் பார்த்தவாறு நின்றிருந்தான்... அவனுக்குப் பின் பைக்கில் இருந்து இப்போதே ஹர்ஷன் இறங்கிக் கொண்டிருந்தான்... மித்ராவின் அறையில் இருக்கும்போது அவனுக்கு விக்ரமிடம் இருந்து தான் கால் வந்தது... தன் வேலை முடிந்ததும் ஊருக்கு வந்து விட்டதாகவும் இப்போது கீர்த்தி அழைத்து செல்ல இவர்கள் வீட்டிற்கு அட்ரஸ் கேட்கவே கால் செய்திருந்தான்... அதனால் ஹர்ஷனே நேராக சென்று அழைத்து வந்து விட்டான்.


"ஹாய் விக்கி அண்ணா... வெல்கம் ஹோம்....", என மடி நிரைய புத்தகங்களை வைத்து கொண்டே அர்ஜுன் அவனை வரவேற்க்க... "சும்மா உள்ள வாங்க புது போலீஸ்கார்....", என என தீரா நக்கலாக அவனை வரவேற்க்க ... "ஆமா ஆமா.. நம்ம வீடு... கூச்ச படாம வங்கோ....", என மயூ தன் பங்கிற்கு வரவேர்த்தாள்.... இவர்கள் அனைவரும் இந்த கொஞ்ச நாளில் விக்ரமுடன் நன்றாக பழகிவிட்டார்கள்... தினமும் கீர்த்தியிடம் மொபைலில் பேசும்போது அணைவரும் அங்கு ஒன்று கூடி தான் பேசுவார்கள்.. இதில் கீர்த்தி பேசுவதை விட அதிகமாக தீராவும் மியூவும் தான் கடலை போடுவது... 


விக்ரமை வரவேர்த்த சங்கரி அவனுடன் சிறிது பேசிவிட்டு பின் ஹர்ஷன் மித்ரா கிளம்புவற்கு தயாராக அனைத்தையும் பேக் செய்து கொடுத்தார்... இரவு உணவை சீக்கிரமே உண்டு விட்டு இருவரும் கிளம்ப... சற்று நேரத்தில் கீர்த்தியும் அண்ணனுடன் கிளம்பி விட்டாள்... அதன் பிறகு தாத்தாவை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடக்க தொடங்கியது... 


              *******


இங்கே சரியான நேரத்திற்கு, மித்ராவுடன் ஹர்ஷன் ரெயில்வே ஸ்டேஷன் வந்து விட.. இரண்டு நிமிடத்திலேயே ட்ரெயின் வந்து விட்டது... அதில் ஏறி ஒரு பக்கம் பெண்கள் மூவரும் இரு சீனியர்களுடன் அமர்ந்து கொள்ள... மற்ற ஐவரும் அடுத்த சீட்டில் அமர்ந்து கொண்டார்கள்... மித்ராவிர்க்கு அவ்விருவரையும் பார்க்க கொஞ்சம் பயம்தான்... இருவரும் தன்னை மிரட்டியவர்கள் ஆயிற்றே.. எப்படியோ அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சம் பேசி பேசி ஆறுமணி நேர தூங்காத பயணத்தின் பின்... நடு ஜாமம் இரண்டரை மணிக்கு திருச்சி ஜங்க்ஷனை அடைந்தார்கள்....


ஆள் அரவமற்று இருந்த அவ்விடத்தில் ஆங்காங்கே சில கடைகள் மட்டும் இருந்தது.... தூக்கம் ஒருபுறம் இருக்க.. பனி வேறு கொட்டோ கொடுவென கொட்டியது.... அதற்கு சூடாக ஓரு காஃபி குடித்து விட்டு.. அவர்கள் செல்ல வேண்டிய கல்லூரிக்கு எப்படியோ கூகுளை பிடித்து வழியை கண்டறிந்து அந்த வழியில் செல்லும் பெருந்தையும் எப்படியோ தேடி பிடித்து இருந்தியாக அந்த கல்லூரியை மூன்று இருபது மணியளவில் அடைந்தார்கள்... என்ட்ரன்சில் பத்து பேர் ****கல்லூரி சார்பாக வந்திருப்பதை பதிவு செய்து விட்டு, வாட்ச்மேன் காட்டிய வழியில் அவர்கள் நடக்க நடக்க அந்த பாதை நீண்டு கொண்டே தான் போனது... இறுதியில் ஒரு வழியாக அங்கே இன்னொரு வாட்ச் மேன் வந்தார்...


அனைவருக்கும் ஹாஸ்டல் ஏற்பாடு செய்திருப்பதாக கூறி.. ஆண்கள் செல்லவேண்டிய இடத்தையும் பெண்கள் மூவரும் செல்ல வேண்டிய இடத்தையும் காண்பித்து அவர்களை அனுப்பி விட்டு அவரின் ரோந்து வேலையை பார்க்க சென்று விட்டார்.. 


அவரவர் அறைக்கு சென்றவர்கள் முதல் வேலையாக குப்புற கவிழ்ந்து நன்றாக ஓய்வெடுத்து கொண்டார்கள்... 


அதிகாலையில் அதிசயமாக ஆறு மணிக்கே எழுந்து குளித்து கிளம்பி போட்டிக்கு தயாராகி விட்டார்கள்.. அதில் எவருக்குமே போட்டியின் பயம் படபடப்பு துளியும் இல்லை... ஏதோ பிக்னிக் வந்தது போல் சுற்று சுற்றுவென சுற்றினார்கள்... எப்படியோ எட்டு மணியளவில் போட்டிகள் துவங்கியது... முதல் சுற்று பதினொரு மணி வரையில் நடந்தது.. பதினொன்றரை மணியளவில் போட்டி முடிவுகள் அறிவிக்க தொடங்க... பதைபதைப்பில் இருந்தவர்களில் மத்தியில் இவர்கள் மட்டும் கூலாக இருந்தார்கள்.. போட்டி முடிவுகள் தான் இவர்களுக்கு தெரியுமே... 


இருந்தாலும் கேட்போம் என செவிமடுத்து அனைத்தையும் கேட்க.. அவர்கள் நினைத்தது போல ஒருவரும் வெற்றி பெறவில்லை... இருந்தாலும் நல்ல ஒரு அனுபவம்... தங்களை விட திறமையில் சிறந்தவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது... ஏற்கனவே வேறு ஓரிடத்தில் நடந்த போட்டியில் சந்தித்த சில நட்புகளை எதிர்பாராமல் இங்கு சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்திருந்தது.. அந்த அழகிய நினைவுகளுடன் மீண்டும் உற்சாகமாக ஊரை நோக்கி பயனமானர்கள்.


இம்முறை எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் ஊருக்கு வர.. நான்கு மணி நேரத்திலேயே ஊரை அடைந்து விட்டார்கள்... சரியாக ஊரை நெருங்கும் நேரத்தில் ஹர்ஷனுக்கு கால் செய்த சங்கரி வீட்டில்யாரும் இல்லை என கூறி இருவரையும் ஹாஸ்பிடல் வர சொல்லி விட்டார்.


           *******


மாலை 5.30 :


சரக்க் சரக்க் என இரு பல்சர் பைக் வீட்டு வாசலில் நின்றது.. வழக்கம் போல, "மெதுவா வரவே. மாட்டியா டா..." என மயூ ரக்ஷவின் முடியை பிடித்து நன்றாக ஆட்டிவிட்டு வீட்டிற்குள் நுழைய போக.. வீடு பூட்டி இருந்தது... அப்போது தான் தாத்தா ஹாஸ்பிடலில் இருப்பது நினைவிற்கு வர.. பக்கத்து வீட்டில் கொடுத்து வைத்திருந்த மற்றொரு சாவியை வாங்கி உள்ளே சென்று ஃப்ரெஷ் ஆகிவிட்டு உணவை முடித்து கொண்டு ஏழு மணியளவில் நால்வரும் ஹாஸ்பிடல் புறப்பட்டு சென்றார்கள்...


அங்கே ரிசப்ஷனில் விசாரித்து தாத்தா இருக்கும் அறையை கண்டு பிடித்து நால்வரும் சென்றார்கள்.. அறை வாசலில் மித்ரா மட்டும் அமர்ந்திஉந்தாள்... முன்னால் சென்ற ரக்ஷவ் அவளை பார்த்து மெல்லமாக புன்னகைத்து விட்டு தாத்தாவை பார்க்க அறைக்குள் செல்ல.. அப்போதே மூளையில் பொறி தட்டியது


தன் அக்காவிடம் என்றும் இல்லாமல் இன்று புதிதாக ஏதோ இருப்பதாக தோன்ற ..... விறுவிறுவென வெளியே வந்து மித்ராவை நோக்கினான்... அங்கே அர்ஜுன் மயூ தீரா கூட வாயை பொத்தி கொண்டு மித்ராவிடம் தெரிந்த மாற்றத்தை தான் பார்த்து கொண்டிருந்தார்கள்... அந்த மஞ்சள் மாங்கல்யத்தை...


😜😈GALAATTAS ON THE WAY 😈🤪Rate this content
Log in

More tamil story from Madhu Vanthi

Similar tamil story from Inspirational