21 நாள் விரதம்
21 நாள் விரதம்


அய்யனார் ஊருக்கு டிக்கட் எடுத்தாச்சா? காய்கறி கடையாச்சே! மூடணும்னா ரொம்ப கஷ்டம்
வழக்கம்போல டிக்கட் எடுத்துட்டோம். ஆனால் கரோனா வேற இருக்கு! அதனால் டிக்கட் எல்லாம் கேன்சலாயிடும்னு சொல்றாங்க!
ஆத்தா மாரியம்மா கருணை வைத்தால் ஒண்ணும் ஆகாது என்றார் பஞ்சநாதன்.
விரதம் இருந்து போவீங்க!
ஆமாம்! அங்கே பொங்கல் வைத்து விட்டு வந்தால் குடும்பமும்,உலகமும் சந்தோஷமாக இருக்கும்.
எப்படி பொங்கல் வைக்கணும்? நேரம் காலம்னு இருக்கா?
மனசுல சுத்தமா இறைவனை நினைச்சிட்டு நல்லது நினைக்கிறவங்க பானையில் பச்சரிசியும்,பாசிப்பருப்பும் போட்டு பனைமரத்துல செஞ்ச துடுப்பு கரண்டியால கிண்டி அகப்பையில் தண்ணீர் ஊ
ற்றி வெந்தவுடன் அச்சுவெல்லம்போட்டு,நெய்யுடன் முந்திரி,திராட்சை போட்டு இறக்குவார்கள்.
அய்யனார்! இந்தமுறை வீட்டுக்குள்ளேயே 21 நாள் விரதம் இருந்து சாமிக்கு பொங்கல் வைங்க! நல்லது நடக்கும்.
பாருங்க! சீக்கிரமா வெளியே எல்லோரும் போகணும்னா இப்பகூட மது வாங்கிட்டு போறதா பேப்பர்ல போட்டிருக்கான். சிகரெட்டை பிடிச்சுட்டேதான் போறான். பறவை,விலங்கு இவையெல்லாம் நல்லாத்தான் இருக்கு!
என்னைக்கு மது ஒழியுதோ அன்னைக்குத்தான் மக்களுக்கு நோயிலிருந்து விடுதலை!
பூனைக்கு யார் மணி கட்டுறது?
பஞ்சநாதன் சொல்வதைக் காதில் வாங்காமல் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து விரதம் இருக்க ஆரம்பித்தார் அய்யனார்..