வழிப்போக்கர்கள்
வழிப்போக்கர்கள்
ஆடாமல் காட்டுது பிம்பத்தை ஆடி
மனம் தெளிவில்லாமல் ஏதொன்றையோ தேடி
தெளியாத மனம் தெளிந்த பிம்பம்
நிலையோ இடம்மாறி
முகம் கண்டு மனம் தெளிய
மனம் தெளிய முகம் காணுமோ
கோட்டில் நடப்பதும்
கயிற்றில் நடப்பதும் ஒன்றோ
ஒன்றாகினும் வேறாகினும்
நீயோ யாதுமாகி
பிழையில்லா பிம்பம்
பிரியா உண்மை
மாயையைத் தேடியே மனம்
சரியில்லா வீதியிலும்
சரிசெய்யா விதியிலும்
செல்லும் எவனும் வீழ்வான்
இடம் போய் சேர
விழியும் வழியும்
விதியும் மதியும்
ஒன்றித்தல் உத்தமம்