வலி
வலி
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
என்ன கேட்டுவிடப்போகிறேன் உன்னிடத்தில்......
வலி வந்து தங்காத இரவினை தவிர .....
தங்கிவிடத்தான் விருப்பமெனில்...என்னோடு நீயும் தூங்கி,...விழிக்கையில் சற்றென்று மறைந்துவிடு....இருட்டைப்போல்....
என்னுடன் தூங்கி என்னோடுதான் பயணிப்பேன் என்று ஏன் அடம்பிடிக்கிறாய்........
விருந்தாளிப் போல் வந்துவிட்டு செல் என்றால் ..சம்மணம் போட்டு உட்காருவேன் என்று ஏன் பிடிவாதம்பிடிக்கிறாய் ......
நீ எப்பொழுது வந்தாலும் நேரம் கொடுக்கத்தானே செய்கின்றேன்........
வந்து வந்து செல்வதும் வாடிக்கையாகத்தானே வைத்திருந்தாய்.....
இப்பொழுது மட்டும் நிரந்தரமாய் தங்கிவிட ஏன் ஆசைப்டுகிறாய்...
அழையாத வீட்டில் விருந்தாளியாய் இருப்பது உனக்கு அந்நியமாய் தோன்றவில்லையா ...
தோணுவதாய் நீ அனுமானித்துக் கூட சென்றுவிடேன்.....
மீண்டும் வேறு ஒரு பொழுதில் உன்னை ஆரத்தழுவிக்கொள்கிறேன்...