வகுப்பறை முதல் கல்லறை வரை
வகுப்பறை முதல் கல்லறை வரை


👨🏻🏫ஆசிரியரின் ஆசிர்வாதத்துடன் எனது ஆச்சர்யம்யூட்டும் ஆசிரியரை போற்றி!!!
✍️ மாதா--பிதா--குரு-- தெய்வம்! இதில் கடவுளுக்கு முன் இடம் பிடித்தாய், கடவுளை விட மேலோங்கினாய்.... கல்விகடவுளாய்
✍️ஆலமரமாய் ஊன்றினோம், இன்றும் பல விதைகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறாய்..
மழை மேகமாய்!
✍️தீக்குச்சியாய்!! நீ எறிந்து கரைந்தாய்,
எங்களை, அணையா தீபம் ஆக்கினாய்...
தீப ஒளியில்
சிலையாக திகழ்ந்தோம்-என்றுமே, நீ அடிவாங்கும் உளியாய்!!!
✍️பொறாமையில்லா ஊக்குவித்தாய்,
சுயநலமில்லா கற்றுகொடுத்தாய்,
கோவம் கொள்ளா என் சிறகை வளர்த்தாய்,
செல்வத்தின் மேல் அசையில்லா கல்வி செல்வம்
அர்ப்பணித்தாய்!!!
✍️தேர்வுக்கு சோர்வாகமால் நம்பிக்கை கூடுத்தாய்,
முழு மதிப்பெண் பெற்று தேறுவதர்க்கு துணையாய் நின்றாய்!!!
✍️உன் பிள்ளை நான் இல்லை,
தன் பிள்ளை போல் கல்வியை ஊட்டி வளர்த்தாய்!!!
✍️தன்னை மெழுகு போல உருக்கி, என்னை மெருகு ஏற்றினாய்,
என் வாழ்வுவில் வெளிச்சம் நிரப்பினாய்!!!
✍️உன் கைரேகை, என் கை மேல் வைத்து,
இன்று ஆனது கையெழுத்து..
கை நாட்டுஆகாமல்!!!
✍️உன் தியாகத்தால், இன்று உலகில் பற்பல உத்தியோகங்கள்...
✍️சமூகத்தில் வளர்ந்தேன், உன் முகம் மறந்தேன்...
கல்வியால் உயர்ந்தேன், உன் சிந்தனை குறைந்தேன்..
என் மக்களுக்கு ஊட்டும் நேரம், உன் கோவம் உணர்ந்தேன்...
சில நேரம் முயற்சித்தேன் உன்னைப்போல், ஆனால் உன்னைப்போல் என்றுமில்லை..
✍️குருவின் பாதம் வணங்கியதால், வாழ்க்கை ஒழுங்கானது !!!
ஆசிரியரின் பாடத்தால், கையில் பட்டம் கிட்டியது!!!
வாத்தியாரின் வழிகாட்டுதலால், வாழ்க்கை மேலோங்கியது!!!
✍️தட்சணையில்லா உன் ஆலோசனையால், எக்கணமும் ஊட்டம் அளித்தது!!!
✍️பேராசையில்லா பேராசியரின், ஆசியால்
சான்றோன் என்ற பெயருடன் சான்றிதழ் அடைந்தேன்...
✍️பள்ளியில் வகுப்பு முடியும் நேரம் நன்றி என்றோம் !
எங்கள் வாழ்க்கை முடியும் வரை என்றுமே நன்றி உரைப்போம்....
🙏🙏
என்றென்றும் ,
எண்ணத்திலும்--எழுத்திலும் உங்கள் தீதா🙏