விவசாயி
விவசாயி


பசுமை வளம் கொண்ட
நாட்டு மக்களிடையில்
மத வேற்றுமையும்
பொறாமையும் இனி
நமக்கெதற்கு?
என்ன வளம் இல்லையென்று
வெங்காயத்தினை விலை
கொடுத்து அன்னியரிடம்
பெறவேண்டும்?
உருளைகளை அன்னியருக்கு
ஏன் உரிமையாக்க வேண்டும்?
வேப்பிலையும் மஞ்சளும்
தராத தொழில் வளம்
பிறநாடுகளில் கிடைத்திடும் வரலாறு
பகிர்ந்திட்டால் நல்லதுதானே தோழா!
மண்ணை அழித்தால் அதைச் சார்ந்து
உருவாகும் பசுமையும்
கல்வளமும் மாறிப்போகும்
வரலாறு அறிந்துதானே
குகைக்கோவில் சமணர்கள்
ஓவியங்கள் வரைந்தாரோ!
பணம் கொடுத்து
வாங்கும் பதவிகள் எல்லாம்
நாளைக்கு தலைவாழை இலையில்
வயிறு நிறைத்திடும் உணவாகுமா?