விட்டு விடுதலையாவோம் !
விட்டு விடுதலையாவோம் !
மன விலங்குகள்
அவை நம்
முன்னேற்றத்தின்
தடைக்கற்கள் !
அச்சம் தவிர் !
அச்சம் கொண்ட மனம்
அது தடுமாறியே
துவண்டு வீழ்ந்திடுமே !
கட்டிப் போடும்
குழப்பங்களை
தெளிந்த எண்ணங்களால்
அறுத்தே எறிந்திடுவோம் !
தடைக் கற்களை எல்லாம்
படிக் கற்களாய் மாற்றியே
முன்னேற்றப் பாதை தனில்
முயற்சி கோலூன்றி நடப்போம் !
விட்டு விடுதலையாவோம் !
கட்டுக்களை அறுத்தெறிவோம் !
விரிந்த வானத்தின் கீழ்
நமக்கான வாய்ப்புகள் ஏராளம் !