வெற்றுப்புள்ளி முற்றுப்புள்ளி
வெற்றுப்புள்ளி முற்றுப்புள்ளி
சிறுவயதின் கிராமத் திருவிழாக்கள்
களியாட்டங்கள் கலைக் கூடங்கள்
கடவுளையும் ஆடவைப்பார்
கணிகையரையும் ஆடவைப்பார்
முடிவில் எல்லாம் ஆன்மிகமே
பொழுதுபோக்கு வேறில்லை
ஒன்று மாறி ஒன்றும் அலுத்ததுமில்லை
நண்பர்கள் கூட்டத்தில் நனவதும் இன்பம்
உறவினர் நடுவே தவித்ததும் இன்பம்
இன்றோ அவை
கிறுக்கி முடித்த கவிதைகள்
விற்பனைக்கு ஓவியங்கள்
விருதுக்கு ஆவணங்கள்
நகரின் தெருக்களிலோ
போராட்டங்களும் ஓலங்களுமே
விழாக் காணும் அவலங்கள்
காலத்தின் கோலங்கள்
விழாக்களின் தேவதைகள்
சிறகுகளை முறித்துக் கொண்டு
பேயாட்டம் ஆடுகின்றன
நான் கிராமத்தையும் மறந்து
நகரத்தையும் வெறுத்து
வெற்றுப்புள்ளியை முற்றுப்புள்ளியாய்க்
கொண்டாடிக் கொண்டிருக்கின்றேன்