வெற்றி நம் வசப்படும்
வெற்றி நம் வசப்படும்
1 min
23.3K
உறக்கம் தொலைக்கச் செய்யும்
கனவுகளின் பாதையில்
மெல்ல அடியெடுத்து வைக்க
புலப்படும் இலக்கின் பாதையே !
இலக்கின் பாதையில்
நம்பிக்கை கோல் கொண்டு நடைபோட - வாழ்க்கை பாடங்கள்
வழிநெடுக ஆசானாய் வர
கைநழுவிப் போகும் வெற்றியும்
வசப்படும் நம் கரங்களிலே !